விஷயம்:
தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு
ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என
வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார்.
அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்:
1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என
எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால்
font!
2) ஆங்கில எழுத்துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை
குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன்
வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம்.
என் எதிர்வினை:
1)
இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து
இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்டும்!!! ஒரே ப்ரஸ்சில் வேலையை
முடிக்கலாமே” என எண்ணியிருக்குமோ என்னவோ! ஜெயமோகனின் இந்த ஏழறிவு கட்டுரையை
அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு பிரசுரித்திருக்கலாம்! ஒரே ஒரு வாரம்
மட்டும் இந்து-தமிழை ஆங்கில எழுத்துருவில் (லத்தீன் வரிவடத்தில்)
அச்சடித்து இந்து வெளியிட்டுப் பார்க்கட்டும்! பிறகு ஜெயமோகனை வாசல் பக்கமே
சேர்க்க மாட்டார்கள்!
2) தமிழை ஆங்கிலத்தில் எழுத விருப்பம்
உள்ள வில்லேஜ் விஞ்ஞானி அந்த ஆசையை தெரிவிக்கும் கட்டுரையை தங்கிலீஸில்
எழுதியிருந்தால் அவர் வருங்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்போகும் தமிழ்
நாவல்களுக்கு நல்ல முன்னோட்டமாக இருந்திருக்கும்!
3) இந்தக்
கட்டுரையை எவனேனும் லத்தீனை தாய்மொழியாகக் கொண்டவன் பார்த்தால் “எவன் வரி
வடிவத்தை எவன் எவனுக்குடா தாரை வார்க்குறது?” என சண்டைக்கு வர
வாய்ப்புள்ளது. இந்திய அறிவுச் சூழலில் இது போன்ற factual errors (லத்தீன்
வரிவடிவத்தை ஆங்கில வரி வடிவம் என தவறாகச் சொல்வது) ஜெயமோகன் போன்ற ’பெரிய’
பவர் ஸ்டார் எழுத்தாளர்களுக்கு சர்வசாதரணம் தான் என்றாலும்... ஆங்கிலம்
போல் அல்லாது, சொந்தமாக பல்லாயிரம் ஆண்டுகளாக அழியாத, கடன் வாங்காத
வரிவடிவத்தைக் கொண்ட தமிழ் மொழியை கொலை செய்ய ஜெயமோகனின் இந்தக் கட்டுரை
முயல்வதால்... தனக்கு சோறு போட்டு அன்பாக கவனித்துக் கொண்ட முதலாளியை
கொல்லத் துணிந்த வெறிபிடித்த செல்லப் பிராணியாகவே ஜெயமோகனைப் பார்க்க
வேண்டும்!
4) வரி வடிவத்துக்கும், எழுத்துருக்குமே வித்தியாசம்
தெரியாத பல்மொழிப் பவர் ஸ்டார் எழுத்தாளர் எப்படி காந்தி, பூந்தி,
இடியாப்பம் என்றெல்லாம் கட்டுரை கட்டுரையாக அடித்து விடுகிறார்?????!
படிக்கிறவன் எல்லாம் கேனைப்பயல் என்ற ஒரே நம்பிக்கை தான்!
5)
கட்டுரையை எழுதியவுடனேயே அதற்கு எதிர்வினைகள் எப்படி வரும் என்பதையும்
முடிவு செய்து அதைப் பற்றியும் எழுதியிருக்கும் ஜெயமோகனின் ஆற்றலைப்
பார்க்கும் போது எங்கள் ஊர் ஜோசியர் ஒருவர் நினைவுக்கு வருகிறார். 40வயதில்
அவர் ’கொடூரமாக’ மரணமடைவார் என அவர் ஜாகத்தில் இருந்ததால் 39வயதில் தனக்கு
பிடித்த வகையில் தற்கொலை செய்துகொண்டு ‘வசதி’ யாக செத்துப் போனார்!
அப்படிப்பட்ட புத்திசாலிதான் ஜெயமோகன்!
முடிவு:
ஜெயமோகன் நல்ல எழுத்து நடை உள்ளவர். நல்ல புனைவுகளுக்கு சொந்தக்காரர்.
அதனாலேயே அவரை அறிவுஜீவி என்றும், அவர் ’சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி
ராமகிருஷ்ணனைப் போல் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவார், எது உண்மை என்பது
அவருக்கு தானாகவே தெரியும் என்றெல்லாம் நம்புவது அபத்தம்! வர வர அவர்
திரைக்கதை எழுதும் படங்களை விட அவர் கட்டுரைகள் மொக்கையாக இருப்பதை அவர்
கவனிக்க வேண்டும். புனைவுகளோடு தன் அறிவின் ‘வீச்சை’ நிறுத்திக் கொள்ள
வேண்டும்! இந்த மொழி அந்த மொழி என்றில்லாமல் அனைத்து மொழிகளின் மேலும்
மரியாதை கொண்ட, மொழிகளின் தனித்தன்மைகளின் மேல் அலாதி விருப்பம் கொண்ட,
மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் ஜெயமோகனின் சக-பிழைப்புவாதி என்ற முறையில்
வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.... விட்ருங்க சார்.. தமிழ் பிழைத்துப்
போகட்டும்!
-டான் அசோக்