தென்றல் (Thendral)
Saturday, December 16, 2017
Friday, December 15, 2017
Sunday, November 26, 2017
திராவிட பஜகோவிந்தம்: திராவிடம் என்றால் என்ன?
திராவிட பஜகோவிந்தம்: திராவிடம் என்றால் என்ன?: கமல்ஹாசன் பேட்டியைத்தொடர்ந்து ஏற்பட்ட நல்ல விஷயமாக நான் கருதுவது, ஆங்காங்கே "திராவிடம் னா என்ன? கொள்கையா அடையாளமா? ஆந்திரா கேரளா ல ஏ...
Saturday, November 11, 2017
Monday, November 6, 2017
Tuesday, October 31, 2017
Wednesday, October 18, 2017
Monday, October 2, 2017
அருள் பேரொளி : அரசியல் நாகரிகம் – கர்மவீரரும் கலைஞரும்
அருள் பேரொளி : அரசியல் நாகரிகம் – கர்மவீரரும் கலைஞரும்: பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் உயிருடன் இருந்த போது தமிழகத்தில் நிலவிய அரசியல் ...
Thursday, September 28, 2017
Sunday, September 17, 2017
Friday, September 15, 2017
Thursday, September 14, 2017
Friday, September 8, 2017
Friday, September 1, 2017
Monday, August 28, 2017
Friday, August 25, 2017
Thursday, August 24, 2017
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : தேவ மைந்தனின் பிறந்தநாள்
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : தேவ மைந்தனின் பிறந்தநாள்: இந்த சம்பவம் நடந்தது கிமு44-ல், ஏசு உண்மையில் பிறந்தது இன்று எல்லோரும் சொல்லும் சைபர் வருடத்தில் அல்ல. அதற்கு 44 வருடங்களுக்கு முன்னரே...
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : கிருஷ்ணனும் கால் யவனனும்
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : கிருஷ்ணனும் கால் யவனனும்: மகாபாரத்ததில், கிருஷ்ணர் கம்சனை கொன்றபிறகு, கம்சனின் மாமனார் ஜராசந்தன், கிருஷ்ணனை கொல்ல சபதம் எடுக்கிறார், மகதநாட்டு மன்னனான தன்னால் தனி...
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : தமிழன் எப்போது துருக்கி சென்றான்
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : தமிழன் எப்போது துருக்கி சென்றான்: துருக்கி நாட்டில் யுபிரிடஸ் நதிக்கு மேற்கே உள்ள ஒரு பெரிய நகரத்தின் பெயர் அதியமான் துருக்கிய மொழியில் அதற்கு அர்த்தம் மிக கடினமா...
Saturday, August 19, 2017
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : ஸ்ரீவைஷ்ணவம் – ராமனுஜர்
தெரிந்த வரலாற்றின் - தெரியாத பக்கங்கள் : ஸ்ரீவைஷ்ணவம் – ராமனுஜர்: ஸ்ரீவைஷ்ணவம் என்பது ராமனுஜர் தோற்றுவித்த மதத்தின் பெயர் , இந்த மதத்தை சேர்ந்தவர்களை தான் நாம் இன்று தென்கலை வைணவர்கள் என்கிறோம். இந்த ...
Friday, August 11, 2017
அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்!
"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"
தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா?
*அகர முதல சம்ஸ்கிருதம்!
*ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:)))
*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை!
*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே!
*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில "மந்த்ர ஸப்தங்கள்" தமிழில் இல்லை! தெய்வாம்சம் இல்லை!
*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture! அதை ஒரு "கலாச்சாரமாய்ப்" பாருங்கள்!
*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்!
*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்!அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்!
மேற்கண்டவை, என் சொற்கள் அல்ல!
*சில பிரபலங்கள்,
*பல ஆன்மீக/தெய்வீக ஆட்கள்,
*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)
*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே!
இப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை!
"சம்ஸ்கிருத பாசம்" மிகுதியாகக் கொண்டவர்கள் யார்? = இது உங்களுக்கே தெரியும்:)
இப்படி, "சம்ஸ்கிருத பாசம்" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,
சம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும்? என்பது வேறு கதை!:)
"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி" - இதன் முழுமையான பொருள் என்ன? என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்!:)
Sanskrit தெரியாவிட்டாலும், "அங்கே தான் தங்கள் வேர்!" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்!
அதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே! நேரடியாகவும்/ மறைமுகமாகவும் வெளிப்படுத்துவார்கள்!
இருக்கட்டும்! ஆனால்..
*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு!
*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு!
*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே! எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு!
சம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை!
பாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,
இன்று, ஒரேயடியா வழக்கு ஒழிந்து விட்டாலும்,
வெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,
சம்ஸ்கிருதமும் செம்மொழியே! இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்!
ஆனால், என் மனசு வலி என்னவென்றால்:
சம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே?
குறிப்பாகத் தமிழில்; இது ஏன்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?
ஓவ்வொரு மொழியும் உன்னதமே!
மொழிக்குள் = "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது!
அந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது!
ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,
//பாத்தீங்களா? உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா!//
= ஏன் இந்த மனப்போக்கு???
= எதிர்ப்பது, இத் "திணிப்பை" மட்டுமே!
= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே! எல்லாப் பிராமணர்களையும் அல்ல!
சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி,
Parasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு!
இதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்!
இதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு!
(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,
நானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை!
அன்று, அன்னார் இட்ட வித்து!
இன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க!:)
அமர துருஷ்ட ஸ்வ-விக்ரம! சமர ஜூஷ்ட பிரமிக்ரம)
சரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்! அதில் கை வைக்கலாமா?
1. அகரம் 2. ஆதி 3. பகவன் & 4. உலகு
= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா?
= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்?
= வள்ளுவர், "தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்" எ. வாழ்ந்த மஹரிஷியா?
இப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்?
= As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)
*அவரை முன்னிட்டு
*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..
*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,
*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்!
மேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்!
கீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்!
தமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்!
இணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்!
நட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்!:(
இந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட,
அந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான்
= மிகு 'விஷம்'! மிக்க 'அபாயம்'!
ஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, "மென் முறையில் விஷம்" ஏற்றும் விற்பன்னர்கள்!
எழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus!
*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்!
தமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே?
ஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே? ஏன்?
இதான் ஒங்க "நட்பா"?
தமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க! -ன்னு,
உங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே? ஏன்?
"இது அவிங்க கருத்து! அவரவர் கருத்து அவர்களுக்கு!" எ. நீங்க Escape ஆக முடியாது!
*அழகில் சிறந்தவர் = ரஜினியா? கமலா? என்றால்..
அப்போ அவரவர் கருத்து! ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்!
*ஆனால் "தமிழ்ச் சிதைப்பு" = அவரவர் கருத்து அல்ல!
அறம் சார்ந்தது! அறத்தின் அளவுகோல் மாறாது!
"ராஜபட்சே கருத்து அவருக்கு! அவர் கருத்து அவர் வரையில் சரி!" என்று
ட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்?
வலிக்கும்ல?:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்?
என் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,
உங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!
வெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,
அவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள்! (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)
யாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்!
இல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்!
பெருஞ்சித்திரனார் அறம்! இட்ட சாபம் முட்டும்!
இனி, பேசுபொருளுக்கு வருவோம்..
அகர முதல = சம்ஸ்கிருதமா? ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா?
1. அகரம் 2. ஆதி 3. பகவன் & 4. உலகு
= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்! இதோ!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
பொருள்:
எல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்
எல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்
1. முதல் சொல் = அகரம்
அகரம் என்றாலே சம்ஸ்கிருதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா?
ழ-வை= ழகரம் என்போம்! அப்போ ழ= சம்ஸ்கிருதமா?:)
உங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று!
அ என்னும் “ஓசை”
முதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது!
அ in Tamizh,
A in English,
Alpha α in Greek,
ā in Latin,
诶 in Chinese,
అ in Telugu,
ಅ in kannada,
അ in Malayalam,
অ in Bengali
கிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள "அ"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன?:)
தாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,
"அ" என்ற ஒலியே..
உலகெங்கும் முன்னிறுத்தப்படுகிறது! இது எதனால்?
அகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை!
மாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை!
"அ" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி!
ஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்!
தா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்!
'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)
ஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா?
"அ" ஒலி = உயிர் ஒலி
ஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு!
இந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன்! உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்?
நீங்கள் பேசாமலேயே, "அ" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்!
இப்பவே, செஞ்சிப் பாருங்க!
இரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க!
விரிக்கும் போதே "அ" என்ற ஒலி அமைப்பு வந்துரும்!
பிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,
பின்னர் சிரிப்போ,
பின்னர் தத்தக்கா பேச்சோ,
பின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..
எதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும்! அந்த விரிப்பிலேயே "அ" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்!
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,
.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து,
"அ"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி
(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)
இதனால் தான், உலக மொழிகள் பலவும்.. "அ" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன!
மொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்! = அகரம்!
"அகர முதல", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்!
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப!
அதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்!
*அகரம் = உலக ஒலிப் பொதுமை!
*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை!
திருக்குறள்= "பொது"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது!
அதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை!
முல்லை/குறிஞ்சி, திணைக் கட்டுப்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்!
ஒரு “பொது மறையை”,
= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்
= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது!
உங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க!
வேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி! தவிர்த்து விடுங்கள்!
2. அடுத்த சொல் = ஆதி
ஆதி = “ஆதல்”;
இறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”
Ready ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,
திருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி!
சேர மன்னன்= சேரல் + "ஆதன்"=சேரலாதன்
ஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள்! பண்பாடு "ஆகி" வரும், இவர்களிடமிருந்து!
மன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி
பெண்கள்: ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்
ஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன?:)
சம்ஸ்கிருதத்திலும் "ஆதி" உண்டு என்பதை அறிவேன்!
ஆனால், அது வேறு ஆதி/ आधी
ஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல!:)
அது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்!
Sanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே?
ஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்?:)
சம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே?:)
ஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு!
அதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்! அமிழ்தம் - அம்ருதம்!
*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்!
*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்;
அதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க! ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக!
*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)
*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)
மதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
முருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்!
ஸ்கந்தன் = Mixed up, Post Vedic, Brahministic Deity!
கந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்!
சொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. "புத்தி" காட்டாதீர்கள்!
ஏன்??? இங்கிருந்து அங்கு போகாதா?
இங்கிருந்து தான் அங்க போச்சி! எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்? ச்சீ..
வேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்!
ஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது!
Rum எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம்ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா?
குடிகாரர்களுக்கு Rum ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)
ராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்?
ரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே
ரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்?
அதை மட்டும் சொல்ல மாட்டேளே?:)
அதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்!
ஒன்று போல் ஒலித்தாலும், இரண்டும் வேறு வேறு!
திருக்குறளின், ஆதி பகவன் = "ஆதி" தமிழ்ச் சொல்லே!
ஆவதால் ஆதி!
3. அடுத்த சொல் = பகவன்
பகவன்= பகவான் அல்ல:)
அது Pagavan எ. ஒலிப்பு! Bhagawan எ. ஒலிப்பு அல்ல!
தமிழ்ச் சொற்களில் வரும் "முதலெழுத்து வல்லினம்" அழுத்தியே ஒலிக்கும்!
*சொல்= Chol; Sol அல்ல
*கொலு= Kolu; Golu அல்ல
*தேவாரம்= Thevaaram; Devaram அல்ல!
*போலவே, பகவன்= Pagavan; Bhagawan அல்ல!
பகவன் = பகு + வ் + அன்
*பகு = பகுதி
*வ் = இடைநிலை
*அன் = விகுதி
பகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல்! தக/ தகவு, பக/ பகவு!
தமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்!
*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்
*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்
Bacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்!
இதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே?
“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்”
கேளிர்= அதுவும் சம்ஸ்கிருதமா?:)
ஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை!
உயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை!
இகரவீற்று உயர்திணைப் புணர்ச்சி! ஆதியும் பகவனுமான இறைவன்!
முக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;
அந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா? இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ?:)
சம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;
பஜ் = (இறைவனுக்கு) வழிபாடு
பக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே!
பஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்!
இப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan & சம்ஸ்கிருத Bhagawan ஒன்றா?:)
Sanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் "சொருகு" வேலை? வெட்கமாயில்லை? உடம்பு கூசலை?
'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்?
குடுக்கவே மாட்டான்! உழன்று அழிந்து சாகுங்கள்! ந தர்ம நிஷ்டோஷ்மி!
ஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே!
*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி
*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)
4. கடைசிச் சொல் = உலகு
உலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல!:)
சம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்
ஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க?
தொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்!
மாயோன் மேய காடு உறை உலகம்
சேயோன் மேய மை வரை உலகம்
உலகு = உல் + அ + கு
உல்லுதல் = "திரண்டு" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்
உல்லுவதால்= உலகம்!
போலவே..
*ஞால்வதால் (தொங்குவதால்)= ஞாலம்
*வைப்பதால்= வையம்
*நிலைப்பதால்= நிலம்
Sanskrit லோக் = ஆங்கில Look ஆகாது!
விட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே?:)
English Look = West German Luogen/ Lagud என்ற வேர்ச்சொல்லில் வருவது!
Lagud = Eyes என்று பொருள்படும்!
காஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;
நீங்க மட்டும் தான் "நம்ம பெரியவா பெரியவா"-ன்னு மெச்சிக்கணும்:)
लोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,
"அந்தக லோகம்" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்?
பொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா?:)
இப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY
தேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு? பாவம்:(
உலகம் = தமிழ்ச் சொல்லே! அது लोक அல்ல!
பல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்!
இவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா? ரொம்பவே ஒங்க பேராசை:)
* ஆதி பகவன் முதற்றே "உலகு" – திருக்குறள்
* நனந்தலை "உலகம்" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு
* "உலகம்" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* திங்களைப் போற்றுதும்.. "உலகு" அளித்தலான் – சிலப்பதிகாரம்
* "உலகம்" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை
மதம் பிடிப்பதை விட, "உலகம்" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு!
அவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,
Imaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்!
அதான் "உலகம்" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது!
உலகம் = தமிழ்ச் சொல்லே!
Thus Proved, quod erat demonstrandum (Q.E.D)
அகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே!
முடிப்புரை:
இன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன்! 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(
அவாளே வாத்திகளாய் உட்கார்ந்து..
தமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(
நம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,
அன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY
Sanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா,
அரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை!
ஆதித் தமிழ் நிலத்துக்கு... "மதம்" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L
என்ன தான்.. "மதம்" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,
சங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும்,
சான்றோர்/ மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது!
*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,
*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..
*எது தமிழ்ச் சொல்-பொருள்? / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம்? என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..
மெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்!
இக் காலம் = அறிவியல் காலம்!
முன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை!
பொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்!
Technology Integrated Tamizh!
அதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து!
பொய்யாய் எழுதி வைக்கிறார்கள்!
அதற்கு, "ஸ்வாமி பக்தி" என்ற போர்வை போர்த்துகிறார்கள்!
வாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,
இணைய பிராமணீயம் கைக்கொண்டு,
திருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது!
தரவு கேளுங்கள்! தர மாட்டார்கள்:)
ஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
நீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்!
இதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(
பெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்
இன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து,
"படிப்பு" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்!
ஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே!
*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்!
*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே!
ஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை!
*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு!
*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு!
*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு!
*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு!
இதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது!
இஃது, இடைவிடாத தொடர் இயக்கம்!
இந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்!
1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்
2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்
3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்!
இதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம்! பெருஞ்சித்திரனாரின்.. "ஆதி பகவன்" முதலான.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT
பெருசா ஒன்னும் வேணாம்;
திருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்!
குறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல!
இதை உரக்கச் சொல்லுங்கள்! அஃதே போதும்; முதல் படி!
Sanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை!
ஆனால், நீங்கள் மாற முடியும்! "திரள" முடியும்!
இதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,
https://twitter.com/amas32/status/817569021767729152
தமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்!
அகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல! தமிழே!
இதோ ஆதாரம்= https://goo.gl/ehvVZi
என்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்!
அப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்! தமிழுக்கு ஒற்றுமை வரும்!
போலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,
திருக்குறள் = Sanskrit அல்ல! என்றாச்சும் சொல்வீர்களா?
இளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே,
நீங்கள் உரக்கச் சொல்வீர்களா? சொல்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு!)
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: சங்கத்தமிழ், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், திருக்குறள்
http://madhavipanthal.blogspot.in/
Sunday, July 30, 2017
Friday, July 28, 2017
Thursday, July 27, 2017
Tuesday, July 25, 2017
இந்து அறநிலையத்துறை – மற்றும் ஒரு பார்பன புரட்டு
இந்து அறநிலையத்துறை – மற்றும் ஒரு பார்பன புரட்டு
சென்னையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் (உத்தமர் காந்தி சாலை) கடந்து செல்லும் போது எல்லோரும் மேலே படத்தில் உள்ள கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக இந்த துறையை பற்றி திட்டாத இந்துக்களே தமிழ் நாட்டில் கிடையாது,
இந்த திராவிட இயங்கங்களை பார்த்தீர்களா எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டு, கோடிக்கணக்கில் வசூலாகும் இந்துகளின் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிகிறார்கள். இவர்களுக்கு தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்பது தான் இவர்களால் முக்கியமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.
மற்றும் ஒரு பார்பன புரட்டு என்று தலைப்பில் சொல்லியிருக்கிறதே, இந்த இந்து அறநிலையத்துறை என்பதே திராவிட இயக்கங்களின் திருட்டுத்தனம் என்று எல்லோரும் சொல்லும் போது இங்கே பார்பன புரட்டு எங்கே இருந்தது வந்தது என்று நீங்கள் கேட்கலாம்
இந்து அறநிலையத்துறையின் உண்மையான வேலை என்ன இதில் பார்பன புரட்டு எப்படி வந்தது என்பதே இந்த கட்டுரை.
மக்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு,
சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே என்பது, அரசாங்கம் அவைகளை ஏன் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்றால், சர்ச்சுகளை கட்டுப்படுத்த அவர்களிடம் CSI, Diocese Arch Bishop என்று அவர்களிடம் ஒவ்வொரு பிரிவுக்கு, பல சட்ட திட்டங்களுடன் கூடிய அமைப்புகள் உள்ளன, மசூதிகளையும் இதே போல கட்டுப்படுத்த Waqf Board என்ற அமைப்பு, பல சட்ட திட்டங்களுடன் உள்ளது, எந்த சர்ச்சிலும், மசூதியிலும், கலெக்ஷனை அந்த பாதிரியாரோ, மவுல்வியோ வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. தினசரி வசூல் உரிய சாட்சிகளின் முன் சரி பார்க்கப் பட்டு கணக்கில் எழுத்தப்படும்
இந்த எல்லா அமைப்புகளும் இந்திய அரசாங்கத்தின் ட்ரஸ்ட்-களின் சட்டவிதிமுறைகளின் கீழே வருகிறது.
எனவே அரசாங்கம் தைரியம் இல்லை என்பதால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இருக்கவில்லை, அங்கே செயல்பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் செய்ய தேவையில்லை என்றுதான் விட்டுவிட்டது.
மக்கள் வைக்கும் இரண்டாம் குற்றச்சாட்டு,
திராவிட இயங்கங்கள் எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டது. இதுவும் உண்மையில்லை
இந்து கோயில்கள் மட்டுமே பல நூறு வருடங்களாக எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், கோயில் பூசாரிகளான பார்பனரும், தர்மகர்த்தாவாக இருக்கும் உயர் சாதி இந்துக்களாலும், அந்த கோயில்களின் சொத்துகளை கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துகொண்டிருந்தது.
1925-ல் முதல் முதலில் ஆங்கிலேயர் காலத்தில், நீதிக்கட்சியின் சார்பாக பனகல் அரசர் சர். பிட்டி. தியாகராசர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது, ஆங்கிலேய கவர்னரின் மூலம் முதல் முதலில் Madras Hindu Religious Endowments Act 1925. கொண்டு வரப்பட்டது.
அதெல்லாம் தெரியும் இப்போது உள்ள சட்டத்தை கொண்டுவந்தது கருனாநிதி தானே என்று உடனே சொல்ல நினைப்பவர்களுக்கு, சொல்வது, சற்று பொறுங்கள்.
இப்போது உள்ள இந்து அறநிலையத்துறையை கட்டுப்படுத்தும் சட்டம், பெரியாரின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1959-ல், Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 என்ற சட்டமாக முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
பிறகு 1991-ல் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில், இந்த சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து, பார்பனரின் கோயில் கொள்ளையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீங்கள் உங்கள் பகுதியில் பல பால் மற்றும் விவசாய கூட்டுறவு சொசைட்டிகளை பார்த்திருக்கலாம், அவைகளை அந்த தேர்ந்தெடுத்த தலைவர் மற்றும் செயலாளர் போன்றவர்கள் சரிவர செயல்படுகிறார்களா என்று மேற்பார்வை செய்ய தமிழ் நாட்டு அரசு கூட்டுறவு துறையிலிருந்து சிறப்பு அலுவலர்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
இந்து அறநிலையத்துறையின் பணியும் அதே தான்,
இந்து கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை, கண்காணிப்பின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளது
அவைகளை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்பதால் பூசாரிகள் கோயிலை கொள்ளை அடிக்கும் வேலையை தடுக்க தான் இந்து அறநிலையத்துறை வேலை செய்கிறது..
இந்து அறநிலையத்துறையின் வேலை,
1. மிக மிக கூட்டமான கோயில்களில் பூசாரிகள் கன்னாபின்னாவென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே அழைத்து செல்வதை தடுப்பது
2. முறையாக டிக்கட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது,
3. கோயில் உண்டியல், முதல் இந்த சிறப்பு தரிசன டிக்கட்டுகள், கோயிலை சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்த பணங்கள் கோயில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது,
4. கோயில் செலவுகள் உண்மையில் சரியாக செய்யப்படுகிறதா, அல்லது கணக்கு புத்தகங்களில் மட்டுமே எழுதப்படுகிறதா என்று கண்காணிப்பது,
5. கோயிலுக்கு நிலங்கள் சொத்துகள் இருந்ததால் அந்த குத்தகை, வாடகை பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது,
இவை போன்றவை தான் இத்துறையின் வேலை,
சுருக்கமாக சொன்னால் இத்த துறை இல்லையென்றால்,
ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் என்றால் மைலாப்பூர் கபாலி கோயில் பூசாரிகள் ஒவ்வொருவரும், இந்நேரம் மகாபலிபுரத்தில் சொந்தமா ஒரு பீச் ரிசார்ட் மற்றும் தலா 3 BMW கார் வைத்திருப்பார்கள்.
இந்து அறநிலையத்துறையின் வேலை, கோயில் வசூல் பணத்தை கொண்டு வந்து அரசாங்க கஜானாவில் சேர்ப்பது அல்ல.
மாறாக அரசு கஜானாவில் இருந்து மக்கள் வரிப் பணத்தில் தான் அறநிலையத்துறை இயங்கிறது, இத்துறை சார்ந்த அனைத்து ஊழியருக்கும் சம்பளம் அரசு வரிப்பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது.
கோயில் பணத்திலிருந்து பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, இந்து அறநிலையத்துறை சார்ந்த எந்த ஒரு கடைநிலை ஊழியருக்கு கூட கோயில் பணத்தில் சம்பளம் கொடுப்பது இல்லை
இந்து அறநிலையத்துறை, இந்து கோயில்களை கூட்டுறவு சொசைட்டிகளை போல கணக்கில் கொண்டு கண்காணிக்கும் அமைப்பு மட்டுமே கோயில் வசூலை அரசாங்கத்தில் சேர்க்கும் அமைப்பு அல்ல.
தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு வந்து விடுகிறது என்று தவறாக தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு பார்பன புரட்டு பற்றி சொல்ல 1980-ல் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும்
எம்ஜியார் ஆட்சிகாலத்தில், 1980-ல் திருசெந்தூர் வைரவேல் வழக்கு என்று ஒண்டு உண்டு. இளையதலைமுறை நண்பர்களில் பலருக்கு அது தெரிந்திருக்காது.
1980ஆம் ஆண்டு, திருசெந்தூர் கோயிலில் உண்டியல் திறந்து பணம் எண்ணும் வேலை முடிந்து கணக்குகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டது, ஒரு பக்தர் தான் ஒரு வைரவேலை உண்டியலில் போட்டத்தாகவும் அது கோயில் வெளியிட்ட கணக்கில் வரவில்லை என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்.
அப்போது, திருசெந்தூர் கோயிலில், இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு பணியில், துணை ஆணையராக இருந்தவர் சுப்பிரமணிய பிள்ளை,
அவர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து விசாரணை மேற்கொள்ளதொடங்கினார்,
மறுநாள் கோயிலில் உள்ள துணை ஆணையர் மாளிகையில் சுப்பிரமணிய பிள்ளை தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
துணை ஆணையரின் மர்மமான மரணத்தை பற்றிய, காவல் துறை விசாரணையில் பூசாரிகளும், தர்மகர்த்தாவும் அளித்த சாட்சி என்னவென்றால்,
உண்டியல் பணம் எண்ணும் போது துணை ஆணையர் அவரது வேட்டி மடிப்பில் ரூபாய் 2850 உண்டியல் பணத்தை ஒளித்து வைத்திருந்தார், அதை பார்த்த நாங்கள் திருப்பி தரும்படி கேட்டோம்,
அவரும் கொடுத்துவிட்டார் ஆனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான்
துணை ஆணையரின் மகன், ஜனாதிபதி வரை மனு கொடுத்து, பின்னர் C.R. Paul Inquiry Commission என்ற பெயரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது,
சுப்பிரமணிய பிள்ளை நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 700 கோயில்களில் கண்காணிப்பு அதிகாரியாக, இந்து அறநிலையத்துறை சார்பில் வேலை செய்தவர்,
சட்டை கூட போடாமல் வெறும் வேட்டி அணிந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியை செய்யும் போது, அங்கு சாட்சியாக இருந்த அத்தனை வங்கி அதிகாரிகளின் முன்னிலையில் சுப்பிரமணிய பிள்ளை ரூபாய் 2850-ஐ திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்று பல்வேறு விசாரணைக்கு பின் அந்த கமிஷன் தன் அறிக்கையை முடித்து கொண்டது,
அவரது மரணத்தை பற்றியும் காணமல் போனதாக சொல்லப்பட்ட அந்த வைரவேல் பற்றியும் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று பரிந்துதுரை செய்ததது.
இன்று வரை சுப்பிரமணிய பிள்ளை மரணம் எப்படி என்றோ வைரவேல் எங்கே போனது என்றோ கண்டுபிடிக்க படவில்லை.
அது தான் பார்பன புரட்டு
இப்போது உங்களுடன் மேலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
1. இந்து அறநிலையத்துறையால் தங்கள் வசதிக்கு திருடமுடியாது கஷ்டப்படும் ஒரே கூட்டம் பார்பனர் மட்டுமே.
2. இந்த துறையை கொண்டு வர பெரிதும் போராடியது பெரியாரும் திராவிட இயக்கமும்.
3. எம்ஜியார் மயக்கத்தில் இருக்கும் மக்களிடம் கருணாநிதி மீது எந்த பழி சொன்னாலும் ஏற்றுகொள்வார்கள்
4. கருணாநிதி நாத்திகவாதி அதனால் அவர் இந்து கோயிலுக்கு எதிராக செயல் பட்டார் என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள்
5. தமிழில் வெளிவரும் அனைத்து நாழிதழ்களிலும் வேலை செய்வோர் 98% பார்பனர் மட்டுமே (உனக்கு எப்படி தெரியும் என்றால் பத்து வருடங்கள் நானே மீடியாவில் பணிபுரிந்துள்ளேன்)
6. நாம் பெரும்பாலும் பத்திரிக்கைகளை வைத்து தான் செய்தி அறிகிறோம், அதில் சொல்வதை பொதுமக்கள் எப்படியும் ஏற்றுகொள்வார்கள்
8. தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்று மதவாத சிந்தனையை தூண்டுவது
இப்படியாக பார்பனர் கோயில் பணத்தை கொள்ளை
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி,
நம் தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு தான் வந்து விடுகிறது என்று தவறாக பொதுமக்களின் மண்டையில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
பல வருடமாக இந்து அறநிலையத்துறை பற்றி இல்லாத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பார்பனர் சொல்லிவருகின்றனர், மக்களும் அறியாமல் நம்பி வருகின்றனர்.
இன்னும் போதாகுறைக்கு இந்தத்துறையில் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கு, இந்துவாக பிறந்த யாரும் பட்டப்படிப்பு முடித்து ஒவ்வொரு வருடமும் TNPSC Group VII தேர்வு எழுதி வெற்றிபெற்றால் தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் படி இந்த பணியில் அமரலாம், பார்பன பூசாரிகள் அந்த அதிகாரி எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு கைகட்டி பதில் சொல்லி ஆகவேண்டும் என்பது தான் பார்பனருக்கு இன்னமும் எரிச்சல்.
இன்னமும் நம்பிக்கை இல்லையென்றால், இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு பத்து ரூபாய் பணம் கட்டி RTI-சட்டத்தின் கீழ் இந்த வருடம் உங்கள் துறையின், நிகர லாபம் என்ன என்று கேட்டு மனு அனுப்புங்கள்
அங்கிருந்து, இத்துறை ஒரு கண்காணிப்பு துறை இங்கு லாபம் என்று எல்லாம் எதுவும் கிடையாது என்று பதில் வரும்.
இதையெல்லாம் தாண்டி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி இந்த துறை மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு, சாதி வித்தியாசம் இல்லாமல் இறை பணி செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும், அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தது தான் பார்பானின் வெறி உச்சிக்கு ஏரிய தருணம்
இன்னும் ஒன்றை சொல்லவேண்டும் என்றால், கிருஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினர் செலுத்தும் வரிப்பணத்தில் இந்து கோயில் சொத்துகள் பாதுகாக்கப் படுகிறது. வெறும் இந்துகளின் பணத்தில் மட்டுமே அல்ல.
உண்மை இப்படி இருக்க, திராவிட கட்சிகள் கோயில் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிப்பது போன்ற எண்ணத்தை பொதுமக்கள் மனதில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
இன்றும் Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் ஒரு தனிப்பட்ட இந்து வழிபாட்டு மையத்தை தொடங்கலாம் நடத்தலாம்
ஆனால் அங்கே உண்டியல் வைத்தாலோ, டிக்கட் மூலம் அர்ச்சனை, சிறப்பு நுழைவு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், அது பொதுமக்களுக்கு சொந்தமான கோயில் என்று கணக்கில் கொண்டுவரப்பட்டு, இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் (கட்டுப்பாட்டில் அல்ல) வந்துவிடும்
இதனால் தான் பார்பான் தன் விஷ வன்மத்தை கருணாநிதி மேலும் திராவிட இயங்கங்கள் மேலும் பரப்பிகொண்டே இருக்கிறார்கள் .
அவ்வை சன்முகியில், வருவது போல சொல்லவேண்டுமென்றால், இந்த துறையும் திராவிட இயக்கங்களும் இருப்பதால் சேதுராமையர் போன்றவர்களால் கவுஸிமாமி கூட சேர்ந்துகிட்டு வெள்ளி குத்து விளக்கு திருட முடியவில்லை
அதனால் தான் இந்த கூப்பாடு
https://hiddenhistroy.blogspot.com/
Tuesday, July 11, 2017
யுவகிருஷ்ணா: திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!
யுவகிருஷ்ணா: திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!: அதிகாலை இரண்டு மணி. பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது. சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக...
Monday, July 10, 2017
Friday, July 7, 2017
ANTONY PARIMALAM : திராவிடம் என்பது கற்பனையா மாயையா இல்லை உண்மையா?
ANTONY PARIMALAM : திராவிடம் என்பது கற்பனையா மாயையா இல்லை உண்மையா?: திராவிடம் என்பது கற்பனையா மாயையா இல்லை உண்மையா? திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற...
Thursday, July 6, 2017
தினம் ஒரு பாடல்: இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்
தினம் ஒரு பாடல்: இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்: சரீர சம்பந்தத்தால் உணர்கின்ற மாயங்களால் மதிமயங்கிய மனிதர்கள் தம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறியாமல் வெளியே எங்கெங்கோ தேடுகிறார்கள். தன் மனதில்...
Wednesday, July 5, 2017
ANTONY PARIMALAM : ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின்...
ANTONY PARIMALAM : ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின்...: ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின் பதில்** கேள்வி :- திராவிடம்னா என்னா அண்ணே..? பதில் :- ஆரியம் என்ற அடிமைத்தனத்தை இரு...
Monday, July 3, 2017
Sunday, July 2, 2017
Thursday, June 29, 2017
Sunday, June 25, 2017
Wednesday, June 21, 2017
Tuesday, June 13, 2017
Friday, June 9, 2017
Monday, June 5, 2017
computer express: ராஜேஷ் குமாரின் 110 கிரைம் நாவல்கள் இலவசமாக டவுன்ல...
computer express: ராஜேஷ் குமாரின் 110 கிரைம் நாவல்கள் இலவசமாக டவுன்ல...: ஆகையால் நான் கொலை செய்தேன் அதே இரவு அன்பே இந்தியா எனி டைம் மணி மர்டர் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ அப்புறம் அனிதா ...
Thursday, June 1, 2017
Monday, May 29, 2017
Friday, May 26, 2017
Thursday, May 25, 2017
தமிழ் அமுதம்: 1330 திருக்குறள் விளக்கம்
தமிழ் அமுதம்: 1330 திருக்குறள் விளக்கம்: அதிகார அகவரிசை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 1...
சுபவீ வலைப்பூ: யார் தமிழர்
சுபவீ வலைப்பூ: யார் தமிழர்: தமிழ் மக்கள் பல காலங்களாக கேரளம், கர்னாடகம், ஆந்திரா மற்றும் மகாராட்டிர உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அந்தந்த மாநில மொழி...
Saturday, May 20, 2017
Indiavaasan: ரஜினிகாந்த்துக்கு ஒரு மடல்
Indiavaasan: ரஜினிகாந்த்துக்கு ஒரு மடல்: வணக்கம் திரு . ரஜினிகாந்த் அவர்களே ! மன்னிக்கவும் ! உங்களை எந்த அடைமொழியில் விளிப்பது என்ற சந்தேகத்தில் பெயர் சொல்ல...
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள...
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள...: பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்! - மஞ்சை வசந்தன் பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின்...
Friday, May 19, 2017
Tuesday, May 16, 2017
Saturday, May 13, 2017
Wednesday, May 10, 2017
பெரியார் பேச்சும் எழுத்தும்: புத்தர் - வள்ளுவர்
பெரியார் பேச்சும் எழுத்தும்: புத்தர் - வள்ளுவர்: புத்தர் - வள்ளுவர் திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்க...
பெரியார் பேச்சும் எழுத்தும்: குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார்
பெரியார் பேச்சும் எழுத்தும்: குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார்: குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார் இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழ...
Saturday, May 6, 2017
Friday, May 5, 2017
Friday, April 28, 2017
Monday, April 24, 2017
பதிவுதொகுப்புகள்: சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் ...
பதிவுதொகுப்புகள்: சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் ...: சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள். சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா? சீதையின் பஜா...
Sunday, April 23, 2017
Sunday, April 16, 2017
Saturday, April 15, 2017
Friday, April 14, 2017
Thursday, April 13, 2017
Tuesday, April 11, 2017
பெரியார் பேச்சும் எழுத்தும்: நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை
பெரியார் பேச்சும் எழுத்தும்: நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை: நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை தமிழகத்தில் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம்/ சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்ற கேள்வியு...
Thursday, April 6, 2017
மாணவன்: ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வ...
மாணவன்: ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வ...: மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் கொஞ...
Paradesi @ Newyork: தமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் !!!!!!!!!!!!!...
Paradesi @ Newyork: தமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் !!!!!!!!!!!!!...: ( நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தீபாவளி மலரில் வெளி வந்த அடியேனின் கட்டுரை ) Veeramamunivar 1968 – ம் ஆண்டு ...
Friday, March 31, 2017
குடி அரசு தலையங்கம் 06.12.1936
தலைவரவர்களே! தோழர்களே!
திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும் அந்தப்படி எழுதி இருக்கின்றன.
ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம்.
சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால் நம் எதிரிகள் சண்டித்தனமும் தொல்லையும் பொறுக்கமாட்டாமல் இசைந்து வந்ததாயிருக்கலாம்.
ஆதலால் திருவாங்கூர் மகாராஜா இந்த உத்திரவு போட கருணை கூர்ந்ததற்கு காரணம் தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையேயாகும்.
என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.
எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 1520 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட லி மணி லீ மணி காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளியேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.
ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.
கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சில் செய்ய வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன். காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய்தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள். திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடை செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிகமாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடை என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத்தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகாராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக்கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதுவும் இப்படிப்பட்ட புரட்சி ஏற்பட்டும் சாஸ்திரிகளும் ஆச்சாரிகளும் வர்ணாச்சிரமக்காரர்களும் இந்த புரட்சியை வாய் வார்த்தையிலாவது கூட்டோடு ஆதரிக்க வெளிவரவும் முடியாது.
ஆதலால் இந்த உத்திரவுக்கு காரணம் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லவென்றும் கடவுளையும் கோவிலையும் மதத்தையும் ஒழிக்கப் புறப்பட்ட சிலருடைய முயற்சியும் திருவாங்கூர் மகாராஜாவினுடைய ஒப்பற்ற விவேகமும் சாமர்த்தியமும் என்றுதான் சொல்லுவேன். இந்த உத்திரவினால் சாமி தரிசனம் செய்ய கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு இடம் கிடைத்து விட்டது என்பதல்ல எனது திருப்திக்கு காரணம். மேல் ஜாதி கீழ் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஒரு அளவுக்கு ஆதரவாக சாமியும் கோவிலும் ஒரு தூணாய் இருந்தது திருவாங்கூரைப் பொறுத்த வரையிலாவது இடிந்து விட்டதல்லவா என்கின்ற திருப்தி தான்.
மதம் என்கின்ற தூணும் இடிந்து விழுந்தாலொழிய தீண்டாமையும் மேல் ஜாதி கீழ் ஜாதியும் நம் நாட்டில் ஒழியவே ஒழியாது என்பது தான் எனது அபிப்பிராயம். அதற்கு ஆகவே கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களை முஸ்லீம் மதத்தில் சேருங்கள் என்று சொல்லிவருகிறேன். அதனால் இந்து மதத்துக்கு கேடு என்று கருதினால் இந்துமத தர்மகர்த்தாக்கள் ஜாதியை ஒழிக்கட்டுமே. மகாராஜா உத்திரவுபோல் ஒரு உத்திரவு போடட்டுமே. ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. யார் வேண்டாம் என்கிறார்கள்?
ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். பொது ஓட்டலில் ரயிலில் இருக்கிற வித்தியாசம்கூட ஒழியப்படாது என்று சொல்லிக்கொண்டும் ஒழிக்க சட்டம் கொண்டு வராமலும் இருந்து கொண்டும் மதம் கெட்டுப்போகிறது என்றால் இதில் நாணயமேது? ஜாதி ஒழிவதற்கு ஆக தீண்டாமை ஒழிவதற்கு ஆக ஒருவன் வேறு மதத்துக்கு போனால் மதம் வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இவர்கள் ஆத்திரத்தால் என்ன காரியம் நடக்கும்? ஒன்றுமே நடவாது. இந்தியா கூடிய சீக்கிரத்தில் முஸ்லீம் ஆதிக்கத்துக்கு வரப்போகிறது. பார்ப்பன ஆதிக்கத்துக்கு அதாவது இந்து ஆதிக்கத்துக்கு குழி தோண்டி ஆய்விட்டது. முஸ்லீம் ராஜ்யம் இந்தியாவில் விரிவு அடையப் போகிறது.
அரசியலிலும் முஸ்லீம்கள் ஆதிக்கம் விரிவடைந்து வருகிறது. பொருளாதாரத்திலும் அவர்களே மேன்மை அடைந்து வருகிறார்கள். இந்த ஊரை எடுத்துக் கொள்ளுங்கள் 10, 20 வருஷத்துக்குள் முஸ்லீம்கள் எவ்வளவு முன்னுக்கு வந்து விட்டார்கள். எங்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேல் பதவி வகிக்கிறார்கள். இதெல்லாம் எதனால்? அச்சமூக ஒற்றுமையினால். அவர்கள் தங்கள் சமூகத்துக்குள் ஒருவரை ஒருவர் அழுத்த நினைப்பதில்லை. ஒருவருக்கு வரும் கஷ்டத்தை இழிவை தங்கள் சமூகத்துக்கே வந்ததாய் கருதுகிறார்கள். இதை அவர்கள் மதம் போதிக்கிறது. மற்றபடி சாமியைப்பற்றி மோக்ஷத்தைப்பற்றி நாம் கவலைப்படாதவர்களானாலும் இந்த அருமையான ஒற்றுமை குணத்திற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டாமா? அதன் பயனை அவர்கள் அடைய வேண்டாமா?
ஆதலால் இந்தியா ஒற்றுமையடைய இந்தியா சுயமரியாதை அடைய ஜாதி பிரிவு பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்; அல்லது முஸ்லீம் ஆதிக்கம் ஏற்பட வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் நம் கதி அதோ கதிதான். ஆதலால் இந்த பிரகடனத்துக்கு மகாராஜாவையும் ஜாதிமத ஒழிப்புக்கு முயற்சித்தவர்களையும் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.
குறிப்பு: 15.11.1936 ஆம் நாள் ஈரோடு காரை வாய்க்கால் மைதானத்தில் ஈரோடு பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தாரால் நடத்தப் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 06.12.1936 குடி அரசு தலையங்கம் 06.12.1936
"மழை நீர்": “மழை நீர்” அது ...
"மழை நீர்": “மழை நீர்”
அது ...: “மழை நீர்” அது ஒரு ஞாயிறு காலை அதிகாலையில் பெய்த மழையின் மிச்சமாய் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது. ...
அது ...: “மழை நீர்” அது ஒரு ஞாயிறு காலை அதிகாலையில் பெய்த மழையின் மிச்சமாய் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது. ...
Wednesday, March 29, 2017
கந்தன் கருணை இல்லம் - ஆறா தழும்பு : Stanley Rajan
Stanley Rajan :
அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு
இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்
அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்
இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது "கந்தன் கருணை" என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று
அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள்
இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.
இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..
விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு
இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி
இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்
பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா
தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி
அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது
பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்
இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.
இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு
கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு
தெய்வம் நின்று குண்டு வீசியது..
குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு
ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது
அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா
அந்த கொடூரம் அரங்கேறிற்று
அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்
மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்
எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்
அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை
ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது
இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்
அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.
எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை
இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்
விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் "அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி"
எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற
இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்
அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள்
இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,
தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு
இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..
இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்
கந்தன் கருணை மாதிரியான ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்
இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி
இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?
அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள்
அந்த வீட்டை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று
இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.
"கந்தன் கருணை" படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது
அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு
அந்த அருணா என்ன ஆனான்?
பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..
கிட்டு என்ன ஆனான்?
மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்
1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.
அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான்
அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது
அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது
ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல
மாறாக இந்தியா
இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்
இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது
நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு
https://www.facebook.com/stanley.rajan.5/posts/10208778174506823
Tuesday, March 28, 2017
Sunday, March 26, 2017
இனிய ஓவியா: மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ
இனிய ஓவியா: மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ: Octavio Ocampo அக்டோவியோ ஓகம்போ, ஷெலயா { குவானவாடோ (மெக்ஸிகோ)[ Celaya, Guanajuato ] } என்ற ஊரில் பிறந்தவர் (1943). இவர் மெக்ஸிகோ நு...
Wednesday, March 22, 2017
Tuesday, March 21, 2017
Monday, March 20, 2017
Monday, March 6, 2017
பெரியார் பேசுகிறார்: ஆத்மா பற்றி பெரியார்
பெரியார் பேசுகிறார்: ஆத்மா பற்றி பெரியார்: சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென...
Saturday, March 4, 2017
சுபவீ வலைப்பூ: இவரல்லவோ உத்தமர்!
சுபவீ வலைப்பூ: இவரல்லவோ உத்தமர்!: நியூஸ் 18 தொலைக்காட்சியில் 04.03.2017 இரவு 10 மணிக்கு , சாமியார் ஜக்கி வாசுதேவின் நேர்காணல் ஒளிபரப்பாயிற்று. வினாக்களைத் தொடுப்பதில் த...
Friday, March 3, 2017
மரப்பசு: ஐந்து வயதிலிருந்து Graph கற்போம்.
மரப்பசு: ஐந்து வயதிலிருந்து Graph கற்போம்.: வரைபடத்தாளை ( Graph Sheet) எந்த வயதில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்? பள்ளிப் பாடங்களில் ஏழாம் வகுப்பிலிருந்துதான் Graph சொல்லிக் கொடுக்...
Wednesday, February 8, 2017
பாவரசன் வலைப்பூ: பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-8
பாவரசன் வலைப்பூ: பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-8: பொன்மொழிகள் 1. மக்கள் எழுச்சியின் முன்பு எந்தக் கொடுமைதான் நிலைத்து நிற்க முடியும்? ஜார் நிற்கவில்லை. பிரெஞ்சுக் குபேரர்கள் நிற்கவில்...
Tuesday, February 7, 2017
photo trick: how to make an optical illusion
photo trick: how to make an optical illusion: optical illusion simply is tricking eyes and its so easy because most of time we are not 100 focusing we take a time to figure ...
Sunday, February 5, 2017
Thursday, February 2, 2017
Republic India Coins, Proof Set, Currencies: 2009 - Perarignar Anna Centenary - Proof Set
Republic India Coins, Proof Set, Currencies: 2009 - Perarignar Anna Centenary - Proof Set: This Post gives the details of Proof Set. For UNC Set refer to the Next Post In the Year 2009, a proof set and UNC Set were released to c...
Wednesday, February 1, 2017
தமிழால் இணைவோம்: தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ...
தமிழால் இணைவோம்:
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ...: தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு!
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ...: தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு!
Tuesday, January 31, 2017
Monday, January 30, 2017
இந்து மதம் எங்கே போகிறது?: சிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.
இந்து மதம் எங்கே போகிறது?: சிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.: "என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........? மேல...
Sunday, January 29, 2017
Wednesday, January 25, 2017
நாச்சியார் திருமொழி!: 132.கொம்மை முலைக ளிடர்தீரக்
நாச்சியார் திருமொழி!: 132.கொம்மை முலைக ளிடர்தீரக்: 132.கொம்மை முலைக ளிடர்தீரக் பாடல் :132 கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் ...
Sunday, January 22, 2017
Saturday, January 21, 2017
சுபவீ வலைப்பூ: மெரினா புரட்சி!
சுபவீ வலைப்பூ: மெரினா புரட்சி!: சல்லிக்கட்டுக்கான மாணவர்கள் , இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்று விட்டதா , மேலும் தொடருமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இதனைப் பதிவ...
மறுபடியும் பூக்கும்: மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எ...
மறுபடியும் பூக்கும்: மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எ...: இனி ஒரு நொடியும் பொறுக்க முடியாது என கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவதுதான் புரட்சி என்பார் ___விளாடிமிர் இலியச் உல்யனோவ் என்னும் லெனின...
Wednesday, January 18, 2017
வலிப்போக்கன் : ஜல்லிக்கட்டு...போராட்டம் வெற்றி பெறுமா...???
வலிப்போக்கன் : ஜல்லிக்கட்டு...போராட்டம் வெற்றி பெறுமா...???: என்ன நண்பரே... போராட்டம் வெற்றி பெறுமா...? எந்தப் போராட்டம் நண்பரே....?? சரியாப்போச்சு.... நீங்க எந்த ஊருல..இருக்கீங்க...! அட...
Tuesday, January 17, 2017
Monday, January 2, 2017
Sunday, January 1, 2017
கருத்துகள் - views: நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் ச...
கருத்துகள் - views: நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் ச...: அகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக. ...
Subscribe to:
Posts (Atom)