Thursday, January 23, 2014

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, 
இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன 
அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. 
அவற்றைத் தெரிந்து கொள்வோம் -Vinod Kamaraj / Chennai, Tamil Nadu 04.february.2012
அ -----> எட்டு 
ஆ -----> பசு 
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 
உ -----> சிவன் 
ஊ -----> தசை, இறைச்சி 
ஏ -----> அம்பு 
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 
கா -----> சோலை, காத்தல் 
கூ -----> பூமி, கூவுதல் 
கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் 
சீ -----> இகழ்ச்சி, திருமகள் 
சே -----> எருது, அழிஞ்சில் மரம் 
சோ -----> மதில் 
தா -----> கொடு, கேட்பது 
தீ -----> நெருப்பு 
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 
தூ -----> வெண்மை, தூய்மை 
தே -----> நாயகன், தெய்வம் 
தை -----> மாதம் 
நா -----> நாக்கு 
நீ -----> நின்னை 
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
நொ -----> நொண்டி, துன்பம் 
நோ -----> நோவு, வருத்தம் 
நௌ -----> மரக்கலம் 
பா -----> பாட்டு, நிழல், அழகு 
பூ -----> மலர் 
பே -----> மேகம், நுரை, அழகு 
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 
போ -----> செல் 
மா -----> மாமரம், பெரிய, விலங்கு 
மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 
மு -----> மூப்பு 
மூ -----> மூன்று 
மே -----> மேன்மை, மேல் 
மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 
மோ -----> முகர்தல், மோதல் 
யா -----> அகலம், மரம்
வ------
> கால்பங்கு(பின்னம்)
வா -----> அழைத்தல் 
வீ -----> பறவை, பூ, அழகு 
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

No comments:

Post a Comment