சபாஷ், மகாராஷ்டிர அரசு !!!!
பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்
மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க
வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர
சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.
இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி
சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது,
மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய்
ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள்
சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா
நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது
தாக்கல் செய்யப்படவுள்ளன.
மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர்
டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும்
என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு
மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற
பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர்
முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.
நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ
தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ
கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும்
வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர்
புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த
போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க
வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே
அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர்
கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு
கொண்டு வந்துள்ளது.
இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு
வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த
சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை
செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு
வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற
செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா
தபோல் கர் கூறினார்.
No comments:
Post a Comment