ஆணாதிக்கவாதிகள்
காதல் + வயது + தீர்மானிக்கும் உரிமை = நடைபெறும் விவாதங்களை முன்வைத்து:
காதல் வருவதற்கான வயது எது என்று சட்டம் ஒரு நாட்டில் அமுல்படுத்த
முடியுமா? ராமதாஸ் போன்ற பிற்போக்குவாதி பெண்ணின் திருமண வயதை 21 ஆக
உயர்த்த வேண்டும் என்பதும், சாதி கலப்பு மணத்தை மறுப்பதும், 21 வயதிற்கு
உட்பட்டவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் பெற்றோர் அனுமதி தேவை
என்பதும், பண்ணை / அடிமை முறையின் ஆளுமையே தவிர, மக்களாட்சியில் பேசும்
ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கையாக இருக்கவில்லை. தலிபான் மனநிலை வாய்த்த
இந்துத்துவ வெறியும், சாதி வெறியும் மிகுந்த ஒருவரால் காதல் என்பதை எப்படி
மதிப்பீடு செய்ய முடியும்?
'படிக்கிற வயதில் படுப்பதற்கு அரிப்பெடுக்கும் பொட்டைச்சி' என்பதை தவிர...
காதல், காமம், கிளர்ச்சி ஒரு மனிதனின் தனிப்பட்ட உணர்வு. ஐரோப்பா /
அமெரிக்காவில் 13 வயது பெண் தனது சக மாணவனோடு காதல் கொள்வதும்
முத்தமிட்டுக் கொள்வதும் அவளது / அவனது தனிப்பட்ட உணர்வுகளாக
பார்க்கப்படுகிறது. இதை பள்ளிகளோ அல்லது பெற்றோர்களோ கண்டிப்பதில்லை.
கண்டிப்பவர்களுக்கு சிறை தண்டனையை வலியுறுத்துகிறது சட்டம்.
காதலை ஏற்பதா? மறுப்பதா? என்பதையும் தாண்டி ஏன் ஒருவனுக்கு / ஒருத்திக்கு
காதல் வருகிறது? காதலின் அடிப்படை காம உணர்ச்சி தூண்டல் எந்த வயதில்
வருகிறது? அதை எப்படி அணுகுவது போன்ற விளக்கங்களை ஐரோப்பிய பாட
நூல்களில் வருவது போல் செக்ஸ் கல்வியை கொண்டு வரும் முறையே காதல் குறித்த
அடிப்படைகளை இளைய சமூகத்தினருக்குள் புரிதலை உருவாக்கும்.
அதுவரை காதல்களை தமிழ் சமூகத்திற்கு சினிமா கற்றுக் கொடுக்கும். அங்கே
காதலர்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும் நேரத்தில் சாதியம் ஆராயப்பட்டு
கோடாரிகள், கத்திகள் பேச ஆரம்பிக்கும். தற்கொலைகள், படுகொலைகள், கெளரவ
கொலைகள், கலவரங்கள் உற்பத்தியாகும்.
உற்பத்திக்கான காரணங்களை ஆராயாத சமூகம் எப்படி அதில் இருந்து மீளும்?
- தமிழச்சி
06/08/2013
No comments:
Post a Comment