ஜாதி வெறியன்
செய்தி:
//"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில்
இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை
நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க
வேண்டும்...வேலைக்கு போக வேண்டும்...3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என
நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். - ராமதாஸ் //
சென்ற தேர்தலில்
வன்னியர்களாலேயே ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாதபடி புறக்கணிக்கப்பட்ட
ராமதாஸ், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கான பிரதிநிதியாக பேசுவதே கேவலமான
அரசியல்.
உழைக்கும் வன்னிய மக்களிடம் சாதிவெறி இல்லை. ராமதாஸ்
போன்ற சுயசாதி தலைவர்களே உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை
செய்கிறார்கள். நான் சாதி வெறியன் தான் என்பதில் என்ன பெருமிதம்
இருக்கிறது? உன் சாதி வெறி, பொதுசொத்தை சேதப்படுத்தியது. கலவரத்தை
ஏற்படுத்தியது. அப்பாவி மக்களை கொன்றது என்பதை தாண்டி என்ன சாதித்தது?
அரசியல் செய்வதற்காக வன்னிய சாதிவெறியை உருவாக்கும் ராமதாசின் வெறி,
அரசியலில் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை 3 வேளை கஞ்சிக்கு
அல்லோல்படும் உழைக்கும் வன்னியர்களுக்காக கொடுத்ததா? கொடுக்குமா?
No comments:
Post a Comment