சீமான் ராமனை விமர்சித்ததற்கு பதிலடியாக சீமானின் மாமிசக் கறியை தொங்க விட
வேண்டும் என்கிற ரீதியில் பாஜகவின் ஹெச். ராஜா விஷத்தை
உமிழ்ந்திருக்கிறார். தனது உரையில் இரண்டு
சொத்தையான விஷயங்களைக் குறிப்பிட்டு சீமானுக்கு எதிராக வன்முறையைத்
தூண்டியுள்ளான் ஹெச். ராஜா.
முதலாவது, அவரது மத அடையாளம். பிறப்பால் ஒட்டிக் கொள்ளும் மத அடையாளத்தை
விட்டு ஒருவர் வெளியே வந்து சுதந்திர மனநிலையில் கருத்துக்களை
வெளியிட்டாலும் அவரை மீண்டும் பழைய மதத்தில் சிறை வைப்பது இந்துத்துவம்
கடைபிடிக்கும் கீழ்மையான தந்திரம். சீமானின் கருத்துக்களுக்காக பாதிரிகள்
சீமானை கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளான் ஹெச். ராஜா ? மதவெறி
உடலின் அனைத்து செல்களிலும் ஊடுருவி உறைந்திருக்கும் இந்துத்துவக்
கூட்டத்திற்கு மத உணர்விலிருந்து ஒருவர் எளிதாக மீள முடியும் என்பது
அறிவுக்கு எட்டாத கனியாக உள்ளது போலும்.
இரண்டாவது, இசுலாமிய மற்றும் கிறித்தவ சமயங்களின் கடவுள்களை விமர்சிக்கத்
திராணியிருக்கிறதா ? என்ற வகை 'குற்றச்சாட்டு'. பகுத்தறிவுப் பிரச்சாரம்
என்பது அனைத்து மதக் கடவுளருக்கும் எதிரான ஒன்று. நீங்கள் ஏற்றிப் போற்றும்
ராமன் ஏன் குறி வைத்து விமர்சிக்கப்படுகிறார் என்றால் ராமனை உங்கள் பாசிச
அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதால் தான்.
ராமஜென்ம பூமி என்று கதையளந்து இந்தியாவின் தொன்மை சிறப்பு மிக்க பாபர்
மசூதியை தகர்த்து சமூகத்தில் நிரந்தர பதற்றத்தை உருவாக்கி அதில் குளிர்
காய்வதால் தான் ராமன் பற்றி பேச வேண்டியதாகிறது. நவீன சமூக அமைப்பில்
ஜனநாயகத்திற்கு எதிராக நீங்கள் ராம ராஜ்யம் பேசுவதால் தான் ராமனின்
யோக்கியதையை விசாரணை செய்ய வேண்டிய தேவை வருகிறது.
மத உணர்வு என்பது ஒருவனின் உள்ளாடையை போன்றது. உள்ளாடையை வெளியே போடுபவன்
மூடன் ; வெளியே போட அடம்பிடிப்பவன் காட்டுமிராண்டி. நண்பர்களே
!காட்டுமிராண்டிகள் வருகிறார்கள். பெரியாரின் செருப்பைக் கொண்டு அடித்து
துரத்துவோம் !!
No comments:
Post a Comment