ஒருபுறம்
அறிவியல் வளர்ச்சி போதவில்லை என்று வாய் கிழிய கத்துவது ! கூச்சலிடுவது !
மறுபுறம் மக்களை இன்னும் காட்டு விலங்காண்டித் தனத்திலேயே நிலைபெறும்படி
அழுத்தி வைத்திருப்பது ! எத்தனை முரண்பாடான போக்கு !.இந்த நாட்டில்
போடப்பெறும் முன்னேற்ற திட்டங்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் வகையில்
இங்குள்ள மதப்பெருக்கங்களை - மூட நம்பிக்கைகளை மக்களிடம் பெருக்குவதை எவர்
மறுக்க முடியும் !
காஞ்சி காமக்கோடியார் போலும் சங்கராச்சாரியர்கள்,
காஞ்சி காமக்கோடியார் போலும் சங்கராச்சாரியர்கள்,
அறிவு வளர்ந்தாலும் வளராவிட்டாலும் மக்களிடம் உள்ள மத மூட நம்பிக்கைகள்
போய்விடக்கூடாதே என்னும் கவலையினாலும் கருத்தினாலும் எவ்வளவுக்கெவ்வுளவு
முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பன அடிமை கும்பல்களை வைத்துக்கொண்டு
அங்கிங்கெனாதபடி எங்கும் (வண்டியில் போனால் இடையில் சிறுசிறு ஊர்கள்
விட்டுவிடும் என்பதால் )நடந்து போய் ,மதத்தின் நச்சு வித்துகளை ஊன்றி
வருவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர் .அவர்கள் இங்குள்ள மகாலிங்க
செல்வர்களும் ,முத்தையச் செல்வர்களும் அன்றாடம் வாய்க்கரிசி போட்டு
வழிநடத்தி வருகின்றனர்.இவ்வாறு மதத்திற்கு முதலாளிகள் காப்பாகவும்,
முதலாளிகளுக்கு மதங்கள் காப்பாகவும் இருக்கும் இந்நிலையில் மக்கள்
முன்னேற்றம் எப்படி நடைபெறும் ?
- பெருஞ்சித்திரனார் .
- பெருஞ்சித்திரனார் .
No comments:
Post a Comment