கண்ணால் நகைத்து தம்மை
மகிழ வைப்பாள் என்று
கண்ணகி என்று பெயர்
வைத்தார்களோ .....
கண்ணகி என்று பெயரிட்டதால்
தான் அந்தக் கண்கள்
அழுது கொண்டே இருந்தனவோ ??/
கோவலன் கண்ணகியிடம் இருந்து
முதலில் பறித்தது அவளது
கண் நகையையே...
கடைசியில் அவளாக கொடுத்தது
கால் நகையை..
மன்னன் பிடுங்கி எடுத்தான் அவளது
கழுத்து நகையை ...
தீமையை எரித்தழிக்கும் சிவனது
தீக் கண்
நெற்றியிலிருந்தது...
மதுரையை எரித்தழித்த மாதின்
தீக் கண்
மார்பில் இருந்தது ....
மதுரையை எரித்த நெருப்பு
சாதாரணமானதல்ல ...
கண்ணெண்ணெய் ஊற்றிக்
கண்ணகி வளர்த்தது ....
எம் தாயகத்திலும் எத்தனையோ
கண்மணிகள் ...கண்ணீர் மணிகளை
சிந்திய வண்ணம் ...என்றாவது
ஒருநாள் அழுதது போதும் என்று..
கண்களை... கண்ணகிகளாய்
திறந்தார்களானால்..
எரிவது...?????
^^^தமிழ்மகள் ^^^
No comments:
Post a Comment