Don Ashok.
கேள்வி: ஊழல் புகார் என்றாலும் சரி, குடும்ப விவகாரம் என்றாலும் சரி,
கூட்டணி என்றாலும் சரி, ஒரு விஷயமுமே இல்லையென்றாலும் சரி, திமுகவும்,
கலைஞரும் மட்டும் மிக மிக அதிகமாகவும்,
தரக்குறைவாகவும் விமர்சிக்கப்படுகிறார்களே. காரணம் என்ன?
பதில்: கலைஞர் ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்பதற்கு சில அறிவாளிகளும்,
விளம்பரக் கூலி வாங்கும் பத்திரிக்கையாளர்களும் பல காரணங்களை நீட்டி
முழக்கிச் சொல்வார்கள். ஆனால்,
ட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மத்திய அரசில் பங்கு வகித்தாலும்
வகிக்கவில்லையென்றாலும் கலைஞர் மட்டுமே பிரதானமாக விமர்சிக்கப்படுவதற்குக்
காரணம், கலைஞர் தன்மீதான அவதூறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து
போகிறவர். மனதிற்குள் பூட்டிவைத்து, வன்மங்களை வளர்த்து, பதவி வந்ததும் பழி
வாங்காதவர். செருப்பைக் கழட்டச் சொல்லி கடமையைச் செய்த மருத்துவரை
சிறைக்கு அனுப்பும் ஈகோ நிரம்பிய மனம் இல்லாதவர்.
'டைம் டு லீட்' என்ற வாசகத்திற்கே தடை போடுகிறவர்கள் மத்தியில், தன்னைச்
சீண்டிப் பார்த்த, 'இருவர்' என்ற படம், தான் ஆட்சியில் இருக்கும்போதே
வந்தாலும் தடை போடாதவர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கலைஞரை விமர்சிக்கும் போது மனதில் பயமே
தேவையில்லை. எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால்
ஜெயலலிதாவையோ, ஏன் கார்த்தி சிதம்பரத்தையோ நியாயமாக விமர்சிக்க
வேண்டுமானால் கூட நெஞ்சு நிறைய நடுக்கத்தையும், மனம் நிறைய பயத்தையும்
சுமந்துகொண்டே கல்லுக்கு நடுங்கும் தெருநாயைப் போல சுற்றும்முற்றும்
பார்த்துக்கொண்டே தான் விமர்சிக்க வேண்டும்! ஏனென்றால் ஒன்று போலீஸ் வரும்,
குறைந்தபட்சம் அவதூறு வழக்காவது வரும்.
ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கலைஞர் மக்களுக்குத் தந்திருக்கும் கட்டற்ற
கருத்து சுதந்திரம் தான் அவர் அவர்களாலேயே அளவுக்கதிகமாக
விமர்சிக்கப்படுவதற்கு ஒரே காரணம். மற்றபடி எதோ சமூகத்தைக் காக்க வந்த
வீரர்கள் போல "நாங்கள் ஏன் கலைஞரை விமர்சிக்கிறோம் என்றால்..........." என
புருடா விடுவதெல்லாம் சும்மா... தங்கள் பயத்தை மூடி போட்டு மறைக்கும்
வழிகள்! இதில் உள்ள உண்மை கலைஞரை மட்டுமே தொடர்ந்து விமர்சித்துக்
கொண்டிருக்கும் போலி சமூக நல வீரர்கள் ஒவ்வொருவனின் மனசாட்சிக்கும்
தெரியும
"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658
No comments:
Post a Comment