தென்றல் (Thendral)

Monday, November 28, 2016

தென்திசை: ”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி /...

தென்திசை: ”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி /...: “Every nation gets the government it deserves.” -     Joseph de Maistre விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார ...

தென்திசை: மரணத்தின் மொழி

தென்திசை: மரணத்தின் மொழி: எஸ்.அர்ஷியா எழுதிய “மரணத்தில் மிதக்கும் சொற்கள்” குறித்து பாலகுமார் விஜயராமன் “மரணத்தின் கிளர்ச்சி உண்மையை வெளிக்கொணர்ந்து விட...

Willswords Tamil Twinkles: சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்...

Willswords Tamil Twinkles: சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்...: KRS | கரச   @ kryes 21h ஒங்க காப்பியம்= எங்க காவ்யா ஒங்க அகத்தியன்= எங்க அகஸ்தியா ஒங்க சிலப்பதிகாரம்= எங்க அதிகார்! ஒங்க ஆதிPaக...

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

▪ நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 🔹 (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார். 🔹வாழ்க்கைக் குறிப்பு இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. கவிஞரின் நாட்டுப்பற்று முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார். ’கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார். புகழ்பெற்ற மேற்கோள்கள் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 🔹மொழிப்பற்று தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே தரணிக்கே ஓரணி செய்வோமே அமிழிதம் தமிழ் மொழி என்றாரே அப்பெயர் குறைவது நன்றாமோ 🔹நாமக்கல்லாரின் படைப்புகள் இசை நாவல்கள் - 3 கட்டுரைகள் - 12 தன் வரலாறு - 3 புதினங்கள் - 5 இலக்கிய திறனாய்வுகள் - 7 கவிதை தொகுப்புகள் - 10 சிறுகாப்பியங்கள் - 5 மொழிபெயர்ப்புகள் - 4 🔹 எழுதிய நூல்கள் மலைக்கள்ளன் (நாவல்) காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்) பிரார்த்தனை (கவிதை) நாமக்கல் கவிஞர் பாடல்கள் திருக்குறளும் பரிமேலழகரும் திருவள்ளுவர் திடுக்கிடுவார் திருக்குறள் புது உரை கம்பனும் வால்மீகியும் கம்பன் கவிதை இன்பக் குவியல் என்கதை (சுயசரிதம்) அவனும் அவளும் (கவிதை) சங்கொலி (கவிதை) மாமன் மகள் (நாடகம்) அரவணை சுந்தரம் (நாடகம்) 🔹மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

Sunday, November 6, 2016

followme: Kurinji Flower - Nature's Gift to Mankind

followme: Kurinji Flower - Nature's Gift to Mankind: Beautiful sights are a rarity, which we cherish lifelong. The longing for the beautiful sights become more attractive in cases where t...

Saturday, November 5, 2016

எஸ்.சஞ்சய்: சமூகநீதிக் காவலர்

எஸ்.சஞ்சய்: சமூகநீதிக் காவலர்: ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாத...

சுபவீ வலைப்பூ: சுயமரியாதை -36

சுபவீ வலைப்பூ: சுயமரியாதை -36: எது முதல் தேவை? தோழர் ஜீவா அவர்கள் எழுதியுள்ள 'ஈரோட்டுப் பாதை' என்னும் கட்டுரை குறு   நூலாகவே வெளிவந்துள்ளது. பேராசிரியர் ...

Shocking Truth About Tamil Language - Alex Collier in 1995

ThirukKuRaL