தென்றல் (Thendral)

Tuesday, February 25, 2014

‎to‬ all indian women. ---Don Ashok

They enjoy Shreya's navel, Tamannah's hip, Hansika's breasts. They drool like dogs and desperately wish to see more and more of it. Their only hyperactive organ is penis and they are ready to use it anywhere, anytime. And then when a rape&murder happens, they lecture you on Indian culture and how women should dress&behave. Next time when an Indian hypocrite pervert tries lecturing you, just slipper him and ask to fuck himself. ‪#‎to‬ all indian women.

(Note to all men: The actress example is to point the hipocracy. Am not against nature)

---Don Ashok

திமுகவினர் பெரிதும் கர்வப்பட்ட பேச்சு அது! மறக்க முடியுமா?

மாநாட்டு துளிகள்: பாகம் எத்தினியோ தெரியாது!

அது கடலூரில் “தானே” புயல் அடித்து ஓய்ந்த நேரம். கிட்ட தட்ட டிசம்பர், ஜனவரி மாதம். 2011/2012ல். அதுவரை இந்த அம்மையார் ஜெயா கடலுர் என்பது எங்கேயோ துபாய்ல இருக்கு, மெக்சிகோவிலே இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்த நேரம். அந்த பகுதியில் மின்சாரம் இல்லை என்பது இல்லை. அஃப்கோர்ஸ் அப்போது தமிழகம் முழுக்க மின்சாரம் என்பதே இல்லை தான் எனினும் கடலூரில் மின்சார கம்பங்கள் கூட இல்லாத நிலையை “தானே” உண்டாக்கி விட்டிருந்தது. ஆனால் இந்த அம்மையார் மும்மரமாக திமுக மீதி காவிரி பிரச்சனையில் பழி சுமத்தி கொண்டு இருந்தார். இவர் மழை பெய்யும் போது உப்பு விற்பார்! காற்றடிக்கும் போது உமி விற்பார் என்பது உலகம் அறிந்த உண்மை.

சும்மா இருப்பாரா முன்னாள் பொதுப்பணி அமைச்சர் அண்ணன் துரைமுருகன்! வெளுத்து வாங்கினார் தி இந்துவில். மன்னிக்கவும். “The Hindu" ஆங்கில பத்திரிக்கையில். ஒரு முழு பக்க கட்டுரை.முழு பக்க கட்டுரை இல்லை. ஒரு பக்கா கட்டுரை! அது வெளி வந்த தினம் ஜனவரி 4, 2012. அடுத்த நாள் தலைவர் கலைஞர் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தரை வழி பார்க்க சென்னையில் இருந்து கிளம்பி காரில் வருகின்றார். கவனிக்க! காரில்! சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், பாண்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியே திருவாரூர் தன் தொகுதிக்கும் போகின்றார். காரில்!

இதிலே மயிலாடுதுறைக்கு இரண்டு நிமிடம் மட்டுமே! ஏனனில் கடலூரில் அதிக நேரம் எடுத்து கொண்டார். அப்போது கட்சியில் கூட கொஞ்சம் சலசலப்பு. பரிதி இளம்வழுதி கட்சியை விட்டு வெளியேபோயிருந்த சமயம். (ஆனால் அப்போது அதிமுகவில் சேரவில்லை), ஆட்சியை இழந்த நேரம். ஆமாம். ஆட்சியை இழந்து ஆறுமாத காலம் தான் ஆனது! இதே ஆறு மாதம் முன்பாக இதே கலைஞர் இதே வழியே சாலை வழியே வந்த போது போலீசார் எண்ணிக்கை அதிகம். ஆனால் இன்றோ யாரும் இல்லை. அதுவே கூட திமுக தொண்டர்களுக்கு வசதியாய் இருந்தது. கிட்டத்தில் தலைவரை பார்க்கும் ஆவல். அன்று அவர் வந்து போன பின்னே நான் என் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கீழ் கண்டவாறு எழுதி இருந்தேன். படியுங்கள்!

\\ ஜனவரி 5 , 2012

முதலில் ஒரு அம்பாசிட்டர் ஹார்ன் அடித்து கொண்டே வந்தது. அடுத்து இரண்டு கார். அதிலே எல்லாம்யார் யார் இருந்தாங்கன்னு தெரியலை. அடுத்த ஒரு பொலீரோ. அதிலே எங்க மாவட்டம் (அண்ணன் ஏ கே எஸ்) வந்தது. உடனே கூட்டம் அந்த காரை மறித்து நிற்க அவர் உள்ளே இருந்து கத்தி கொண்டே "ஓரமா போங்கப்பா" என குதிக்க... அடுத்த காரில் வந்தார் கலைஞர். காரின் நம்பர் TN 27 - BD 2728.
காரில் அவர் தகதகத்தாய சூரியனாய் மின்ன, அவருக்கு பக்கத்து சீட்டில் அண்ணன் துரைமுருகன் , இவர்களுக்கு பின் சீட்டில் அண்ணன் பொன்முடி, நடுவே அண்ணன் எம் ஆர் கே பன்னீர் செல்வம், அடுத்து அண்ணன் எ. வ வேலு. அண்ணன்மார் நால்வரும் ரோஜாப்பூவாய் கசங்கி இருக்க என் தலைவனோ சுட்டெரிக்கும் சூரியனாய், அன்பொழுகும் தென்றலாய், அமைதியான ஆறாய், சீறும் அருவியாய், ஆர்பரிக்கும் கடலாய், புன்னகை முகமாய், இன்று பிறந்த குழந்தையாய், சிரிக்கும் ரோஜாவாய், வாசனையான மல்லிகையாய், அன்பு அம்மாவாய், கண்டிப்பான தகப்பனாய் .... எல்லாமுமாய் கலந்த ஒரு கலவையாய் கை அசைத்தார். யாரோ ஒரு பையன் கல்லூரி பையன் என் பக்கம் இருந்து அண்ணன் துரைமுருகனை பார்த்து "அண்ணே ஹிண்டுல கலக்கிட்டீங்க" என சொல்ல அவர் முகத்தில் அந்த களைப்பிலும் ஒரு சுகம் தெரிந்தது.

;
;
;

இதே அண்ணன் துரைமுருகன், அண்ணன் எம் ஆர் கே, அண்ணன் வேலு, அண்ணன் பொன்முடி... இவர்கள் கொடுத்து வைத்தவ்ர்கள்.... இதே போலத்தானே பரிதி இளம்வழுதியையும் வைத்து இருந்தார் தலைவர். அதை கெடுத்து கொண்டாரே பரிதி:-( இனி பரிதி நினைத்தாலும் அந்த உயரத்தை தொட இயலுமா? ஏன் மனிதர்கள் புத்தி இப்படி போகின்றது? \\

இப்படியாக அந்த கட்டுரை இருந்தது!

பரிதியை விடுங்கள். பின்னர் அவர் அதிமுகவில் போய் சேர்ந்து குனிந்து விட்டது இப்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! அவரை விடுங்கள்!

இங்கே நான் சொல்ல வந்தது அண்ணன் துரைமுருகன் அவர்களை பற்றியது!

காரின் உள்ளே அவர் இருக்கும் போது ஒரு கல்லூரி மாணவன் சொன்னானே “அண்ணே, ’இண்டு’ பத்திரிக்கையிலே கலக்கீட்டீங்க”ன்னு. அதற்கு அவர் முகம் மலர்ந்தாலும் அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் ஆட்காட்டி விரலை தன் உதட்டில் வைத்து “உஷ்ஷ்... தலைவர் இருக்காரு” என்பது போல சைகை செய்தார். கவனிக்க!

இது தான் மரியாதை! அங்கே பார்க்க வந்த கூட்டம் தலைவரை மட்டுமே. அங்கே தலைவருக்கு மட்டுமே மரியாதை கிடைக்க வேண்டும். தனக்கு இல்லை தனக்கு கூடாது என்னும் அவரது செய்கையை பாருங்கள்.

இதே துரைமுருகன் அண்ணன் இதே திமுக பத்தாவது மாநில மாநாட்டில் தனக்கென ஒரு “புட்பால் கோர்ட்” தலைவர் அமைத்து கொடுத்து “ரெஃப்ரி”யாக இருந்து பார்த்து கொண்டு இருக்கும் போது பந்து அவர் கைக்கு வரும் போது... மன்னிக்கவும் காலுக்கு வரும் போது அதை ஓங்கி அடிக்கின்றார். எங்கே??? எங்கே??? எங்கே????

பத்திரிக்கையாளர் பக்கம் ஓங்கி உதைக்கின்றார். “தம்பிகளா! கொஞ்சம் தள்ளி இருங்க. நான் பேச வேண்டியது அந்த பக்கம் தான்! “ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” என எழுதினானே ஒருத்தன்... அவன் அந்த பக்கம் இருக்கின்றானா? இருக்க மாட்டான். இத்தனை கூட்டத்தில் அவன் இல்லாவிடினும் அவன் சார்த்த பத்திரிக்கை இருக்கும் தானே, அவனிடம் கூட்டம் பற்றி சொல்லும் தானே, அழிந்து விட்ட இயக்கமாடா இது....” என சொல்லிவிட்டு ஒரு பேய் சிரிப்பு சிரித்தார் பாருங்கள்.....

எனக்கே கேட்டுக்கொண்டு இருந்த எனக்கே குலை நடுங்கி விட்டது! அதை டிவியில் காணும் அப்படி எழுதினவன் வயித்தால போயிருக்க மாட்டான் என்பது சத்தியம். அவன் சார்த்த பத்திரிக்கைகாரன் முகம் எல்லாம் அங்கே பார்க்க வேண்டுமே! ஆகா காண கண் கோடி வேண்டும்!

”ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா” என்னும் அந்த ஆர்வரிக்கும் சிரிப்பு அழிந்து விட்ட சமஸ்கிருதத்தை பெயராக கொண்டவனின் அழிவை காட்டியது! அங்கே அண்ணன் துரைமுருகன் அவர்கள் அதே சமஸ் என்பவன் பாணியில் சொல்லப்போகின் “பத்ரகாளி” அவதாரம் எடுத்தார். அதே பாணியில் சொல்லப்போகின் நடராஜரின் ஆழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ரதாண்டவம் ஆடினார். சூரபத்மனை கொன்ற முருகனின் கோபக்கனல் கொப்பளித்தார்.

இதே பெரியார் பாணியில் சொல்லப்போகின், அவ்வையார் பாணியில் சொன்னால் எங்களுக்கு ரௌத்திரம் பழக கற்றுக்கொடுத்தார்!

நினைத்துப்பார்க்கிறேன்! இதே துரைமுருகன் அண்ணன் அவர்கள் ஜனவரி 5ம் நாள் 2012ல் தலைவர் காரில் இருக்கும் போது இருந்த சாந்த சொரூபம் ஏன் இன்று இப்படி ஆகிப்போனது என என்னை நானே கேட்டுக்கொண்டு பார்க்கிறேன்!

வேறு எதும் காரணம் சிறப்பாக இல்லை. அங்கே தன்னை புகழ்வது பிடிக்கவில்லை. அல்லது தேவையில்லை என அவர் மனது சொன்னது. ஆனால் இன்று “ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” என எழுதியதை பார்த்த பின்னே புழுங்கிய மனதுக்கு தன் இயக்கத்தை இழி சொல் சொன்ன ஒருவனை தனியே அடித்தால் யாருக்கும் தெரியாமல் போய் அவன் மட்டுமே அறிவான்... அதனால் பயனில்லை... பல பேர் பார்க்கும் இடத்தில் அந்த நாயை செருப்பால் அடித்தால் இனி தன் இயக்கத்தை அடிக்க எவனுக்கும் துணிவு பிறக்காது என எண்ணியே காலம் தேர்ந்தெடுத்து 25 லட்சம் பேர் பார்க்கும் இடத்தில் சொறி நாயை செருப்பால் அடிப்பது போல அடித்தார்.

அதன் வெளிப்பாடே அந்த பேய்ச்சிரிப்பு. ஹஹ்ஹஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா....

திமுகவினர் பெரிதும் கர்வப்பட்ட பேச்சு அது! மறக்க முடியுமா?

Sunday, February 23, 2014

நாம் சூத்திரர்களா?

எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்?

நாம் திராவிடர்

நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?

இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெயரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைய்த்தாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை. இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறிவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.

பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத்துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்? பழமை நிலைமை யும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதை சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக்கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கும் ஆகவேயாகும்.

நாம் சூத்திரர்களா?

நாம் பிறவியிலோ, தன்மையிலோ, தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின் நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள். நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப் படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்பட வில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.

எப்படி மானமும், சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒர் பெண் மற்றொரு ஆண்மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படுகிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். எந்தக் காரணத்தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர்களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக் கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராததும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும். ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகி விட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசாபாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?

சூத்திரன் என்றால் என்ன?

சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர்களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந்தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர் களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்கவிடவேண்டும்? என்று கேட்கிறேன்.

தோழர்களே, இக்காலத்தில் உண்மையான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு, வாசல், செல்வம் தாசித்தனத்தால் வந்த தென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக்கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான். இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும் கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்ட வர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவு தரும்படியான காரியங்களை) அவர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்கிறோம்.

அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக் கொள்ளு கிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல் லாமல் மற்றவர்களுக்கும் தெரியும் படியான குறிகளையும் (ஏதாவது ஒரு அடையாளத் தையும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சி யையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வது மான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.

உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக்கொள்ளாத நீ நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும். திராவிடனுடைய சரித்திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!

எது தேசியம்? எது விடுதலை?

ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதி யில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக்கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்கு தேசியமா? சுயராஜ்ஜியமா?

உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில்களையும் நிர்துளியாக்குவதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?

இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுயராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின் அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட்டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்குமேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.

எது பொதுவுடைமை

இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக்கியதைதான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு? எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்த வாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப் பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?

காங்கிரஸ்

காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கி யதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்த தேசிய மாநாட்டில் இந்த தன்மைகளை பொசுக்கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட்டது? நினைக்கப்பட்டது? இந்த மகா உத்தமர்கள் எங்களை குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல் லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக் குள் முன் மண்டபத்தில் பறையனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது? கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை, சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?

எங்கள் கோபம்

இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளை யனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள்தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.

ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர்களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?

எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண் டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?

இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண் டாற்றவேண்டிய காலம் இது. நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்ப லாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்கா மல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத் தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.

நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டு மிராண்டிதனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ்மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற்கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.

தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண் டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.

உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல், கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும்

தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.

-------------

23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு -" குடிஅரசு" - 01.09.1945

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

தமிழ்முகநூல் பாசிச ஜெயாவின் திடீர் இரசிகர்களின் சிந்தனைக்கு...

ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் விரோத தமிழர் விரோத பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை இந்தத் தேர்தலில் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கின்றனர் ஈழ ஆதரவாளர்கள்.

ராஜீவ் கொலையைப் பயன்படுத்திக் கொண்டு பதவியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, "ஈழம் தமிழ் தமிழர்' என்ற சொற்களைப் பயன்படுத்துவதே பயங்கரவாதக் குற்றம் என்று கூறுமளவுக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்.

""அன்று ஈழத்தை எதிர்த்தார்; இன்று ஆதரிக்கிறார்'' என இன்றைய இளைய தலைமுறையினர் இதனை எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டு விடக்கூடாது.

எல்லாவிதமான மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி, புலிப்பூச் சாண்டி காட்டுவதையும், பயங்கரவாத பீதியூட்டுவதையுமே தனது பாசிச அரசியல் வழிமுறையாக வைத்திருந்தவர் ஜெயலலிதா.

அதற்குச் சான்றாக சில விவரங்களை மட்டும் இங்கே தொகுத்துத் தருகிறோம்.

இது ஒரு முழுமையான தொகுப்பில்லை என்ற போதிலும், இதில் தொகுக்கப்பட்டிருக்கும் விவரங்களிலிருந்தே ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பல்வேறு அமைப்பினரை, அவர்களுடைய கருத்துக்காக மட்டுமே ஜெயலலிதா எந்த அளவுக்கு மூர்க்கமாக ஒடுக்கியிருக்கிறார் என்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஈழம் குறித்த தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக அவர் கூறுவது எத்தனை பெரிய பித்தலாட்டம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ""புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுங்கிற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது'' எனப் பீதியைக் கிளப்பினார்.

ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்லச் சதி நடப்பதாகக் கூறிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே "விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்' எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார். •

ஜூலை 1991:

ராஜீவ் கொலையுண்டவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார்.

ராஜீவ் கொலையுண்ட சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.

இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல்படை அமைத்து, ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெயலலிதா.

ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களைக் கருணையுடன் நடத்துவோம் என்றும் முழங்கினார்.

""விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தோ, ஈழத்தமிழர் நலன் என்ற பெயரிலோ நடைபெறும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்'' என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.. • செப்டம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டு, மாநாடு தடை செய்யப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் "சுட்டுவிரல்' கவிதைத் தொகுப்பு "ஈழ ஆதரவு, புலி ஆதரவு' எனக்கூறி நீக்கப்பட்டது.

பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும், வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாகவும் ஜெயலலிதா சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்களைக் கூடத் தடைசெய்து, ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப் போவதாக மிரட்டினார்.

""என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளனர்.

ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தைத் தகர்க்கவும், ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்'' என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார்.

புலிகள் அமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்ப்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும், ""புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது'' என்றார்.

1991இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெயலலிதா, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து, அகதி முகாம்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றினார்.

அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.

ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார்.

அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார்.

வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார்.

பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்போராளிகள் உரிமைக்கும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார்.

ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் உள்ளிட்ட 4 தோழர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.க.வினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா வாழப்பாடி கும்பல் தொடர்ந்து கொடுத்த நிர்ப்பந்தத்தால், ராஜீவ் கொலைக்கு பின்னர், வாரம் ஒரு கப்பல் வீதம் ஈழ அகதிகள் கட்டாயப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஈழ அகதிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்த குற்றத்துக்காக, தமிழகம் முழுதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பின் தோழர்கள் ராஜத்துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டனர்.

போயஸ் தோட்டத்துக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த நரிக்குறவர்களையும், "வயர்லெஸ்' கருவியுடன் இருந்த "கூரியர்' நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெயலலிதா. • 1992..

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 7 பேர் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜெ. அரசால் கைது செய்யப்பட்டனர்.

""தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுருவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர்.

அவர்களுக்கு நவீன ரகத் துப்பாக்கிகளும், சாதனங்களும் அவசியமாக உள்ளது'' என்று கூறி இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992 செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை' அடுத்து "தேசத் துரோக, பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை' எனப் பாய்ந்தார் ஜெயலலிதா.

ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், சுப.வீரபாண்டி யன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் அனுப்பிவிட்டு, நீதிபதி கந்தசாமி பாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தில் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி, 4 புலிகளை அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி கைது செய்ததாக ஜெ. அரசு கூறியது.

மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி, ""கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன்'' என்றும் முழங்கினார். •

1993..

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார்.

பின்னர் போலி சாட்சியங்கள் ஆதாரங்களைக் கொண்டு பழ.நெடுமாறன் போன்றோரை "தடா'வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே ""நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர்.

காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்'' என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், (தற்போது பெ.தி.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) கோவையில் சிறு பொறியியல் தொழிலை நடத்தியபடியே, தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார்.

இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ. சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ. அரசு, இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேசவிரோதமாகச் சதி செய்தாகக் கூறிய ஜெ. அவர்களை தடாக் கைதிகளாக்கினார்.

"திராவிடம் வீழ்ந்தது' என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ. தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும்.

கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும், அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91இல் க்யூ பிரிவு போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.க.வை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்கும் நோக்கத்தில் ஐ.பி தயாரித்திருந்த சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் மிரட்டப்பட்டார்.

அவர் அதற்கு மறுக்கவே, சட்டவிரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தன.

திலீபன் மன்றத்தின் சார்பில் தியாகு தொடுத்த ஆட்கொணர்வு மனுவால், 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்திரவுப்படி மதுரைச் சிறையிலும் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த (அதாவது பாலச்சந்திரன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய) கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து, குண்டுவைக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

(அந்தத் தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார்). தே.பா.சட்டக் காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தது. இந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் பாலசந்திரனை சிறப்பு முகாமில் ஜெ. அரசு அடைத்தது.

கொடைக்கானல் குண்டு வழக்கில் அதிகாரிகள் இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது.

மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 14 நபர்களுக்கும் அப்போது பிணை வழங்க நீதித்துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் வைத்து அரசு அவரை வாட்டியது.

இன்று ஈழத்துக்கு ஆதரவாகச் சவடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் ஈழத்தமிழர்களை எவ்வாறெல்லாம் வக்கிரமாகச் சித்திரவதை செய்தார் என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு உதாரணம்.

1995இல் தஞ்சையில் ஜெ. நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர்.

ஜெயின் கமிசன் விசாரணையில் "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்' என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002 புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால், பேச்சுவார்த்தைகளில் இந்தியா "பார்வையாளர்' ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர்.

இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, ""புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது'' என ஜெயலலிதா கொக்கரித்தார்.

ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகள் செய்த படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ""ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது'' என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

""தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்'' என்று இதே ஆண்டில் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். •

ஜூலை 2002 மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் காரணம் காட்டி, வைகோ மற்றும் 8 பேர் மீது பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார்.

பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ""ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; இதனைப் பரிசீலித்து வருகிறோம்'' என்றும் எச்சரித்தார்.

ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார்.

ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க புலிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால்தான், தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி பிரிவினைவாதப் பீதியூட்டினார் ஜெயலலிதா. •

செப்டம்பர் 2002 பயங்கரவாத பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக, வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர்.

இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார்.

பெரிய ஆள்பலமோ, செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. •

செப்டம்பர் 2007 ""தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத்துரோகக் குற்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று ஜெ. கூறினார்.

தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கற்பா எழுதிய காரணத்தால், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் கூவினார். •

2008.. அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசாரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்திருந்தனர்.

ஆனால் ,

இச்சம்பவத்தைக் கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.

""கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது'' என ஊளையிட்டார்.

""போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்'' என்று சிங்கள இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தினார்.

ஈழப்பிரச்சினைக்காகத் திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் கருணாநிதியை மிரட்டினார்.

பிறகு திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென்றார்.

கடைசியில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

இப்படி, கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய்தான்,

இப்போது நாற்பது தொகுதிகளிலும் தன்னை வெற்றிபெற வைத்தால், முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் ஈழத்தைத் தூக்கிக் கொடுப்பதாகக் கூக்குரலிடுகிறது...

இதற்கும் சில கேடு கெட்டவர்கள் துணை போகிறார்கள்

Saturday, February 22, 2014

ஜெயலலிதா ஆட்டோகிராப்!

நன்றி:விகடன் செய்தி பிரிவு
----------------------------
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உருகும் ஜெயலலிதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்...? முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் ஃபிளாஷ்பேக் இது..!"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்திய திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.ஸ்ரீலங்கா நாட்டில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளையும், அந்த நாட்டைச் சார்ந்த தீவிரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். 10.4.2002 அன்று சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததையும் பார்த்து, தமிழக மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து நழுவும் தோரணையில் பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் பற்றி இந்தச் சட்டமன்றப் பேரவை மிகவும் கவலை கொள்கிறது.1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் அன்று, ராஜீவ் காந்தி மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும், இந்தக் கொடூரமான செயலில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் உறுதியாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதையும் இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை.1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடை செய்தது.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், நமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை நன்கு உணர்ந்த மத்திய அரசு, அண்மையில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம், அதாவது பொடா சட்டத்தின் கீழ் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் 14.4.2002 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்றும், அது பற்றி வழக்கு இன்னும் நடைபெற்று வருவதால், அது முடியும் வரை கருத்து ஏதும் கூற இயலாது என்றும் தெரிவித்திருப்பது முற்றிலும் புதிராக உள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றம். ராஜீவ் காந்தி அவர்களின் கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளி என்ற அறிவிப்பையும் செய்துள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு, ஸ்ரீலங்கா அரசோடு தொடர்பு கொண்டு, பிரபாகரனை ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். ஸ்ரீலங்கா அரசின் அனுமதியை பெற்று, நமது இந்திய ராணுவததை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்து கொண்டு வர வேண்டும், பிரதமரை கேட்டுக் கொண்டார்.இந்தியாவில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிரபாகரன், ஸ்ரீலங்காவில் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்பு பகிரங்கமாகத் தோன்றி, தனது இயக்கம் ஆயுதங்களைத் துறக்காது என்றும், தனித் தமிழ் ஈழமே தங்கள் கொள்கையாக நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது பற்றி தமிழக மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த கால வரலாற்றையும், அந்த அமைப்பினால் நமது நாட்டுக்கூ ஏற்படக் கூடிய பேராபத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஸ்ரீலங்காவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து இந்தியா அமைதி காப்பது, பிரபாகரனை புனிதப்படுத்தும் ஸ்ரீலங்காவின் முயற்சிக்கு மறைமுகமாக ஒப்புதல் அளிப்பதாக ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.சட்டத்தை மதிக்கின்ற, தேசப்பற்று கொண்ட இந்தியக் குடிமக்கள் யாரும் பிரபாகரன் போன்ற ஒரு கொலைக் குற்றவாளியை தேசத் தலைவராக சித்தரித்து காட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களும், மாநிலத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பிரபாகரன் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்திய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தினையே கொண்டுள்ளார்கள்.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபமும், ஆதரவு மனப்பான்மையும், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு முற்றிலும் மாறிவிட்டது. அதிலும் அந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் என்பது தெரிய வந்தபோது. தமிழக மக்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும், ஓர் அச்சம் கலந்த வெறுப்பைக் காட்டத் துவங்கினார். தமிழக மக்களின் உணர்வை எப்போதும் பிரதிபலிக்கும் இந்தத் தமிழக அரசு. அது முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் இந்திய மண்ணில் கால் ஊன்றுவது ஒருபோதும் ஏற்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்படமாட்டாது. இந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும் அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றப் பேரவை மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.ஸ்ரீலங்கா அரசினால், பிரபாகரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது."

“உயர் ஜாதி வெறி” ஜாக்கிரதை....


நேற்று ஒரு நண்பர்/நண்பி தன் கமெண்டில், பிராமணர்கள் வாழ வசதியில்லாத இந்தியா அதனால் வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும்,இந்தியா போன்ற ஜாதி வித்தியாசம் காட்டி உயர்ஜாதியினரை ஒதுக்கும் நாட்டில் வாழ தனக்கு அயர்ச்சியாக இருப்பதாகவும் ரொம்ப சலித்துக் கொண்டிருந்தார்.

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.

இத்தனைக்கும் அவர் ஒரு துறையில் நிபுணர் என்று சொல்லிக் கொள்பவர்.

இடஒதுக்கீடு டாப்பிக்கை கொஞ்சம் ஆராய்ந்தாலே அவருக்கு விடை கிடைக்கும்.ஆனால் ஆராய மாட்டார்.ஏனென்றால் அதுதான் உயர்ஜாதி புத்தி.உள்ளுக்குள்ளே அடைந்து கிடக்கும் அருவருப்பான வெறி.

அடுத்து இன்னொரு நண்பர்(இன்னொரு போஸ்டில்) கமெண்டில் “பிராமணர்கள் எந்த சலுகையும் இல்லாமலேயே 40 சதவிகிதம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முன்னிலை வகிப்பதாக சிலாகித்திருந்தார்.

எல்லோரும் மனிதர்கள்தானே.அப்புறம் எப்படி ஒரு இனத்துக்கு மட்டும் அறிவு வரும்.

அறிவியல் கூற்றுப்படி அது தவறான நிலைதானே.எப்படிதான் அவர்கள் அந்த அறிவை அடைந்தார்கள்.

மற்ற எல்லா இனங்களையும் அடக்கி ஆண்டுதானே.பல நூற்றாண்டுகளாக கல்வி அறிவை சூழ்ச்சியால் தனக்கு மட்டும் என்று சொந்தம் கொண்டதால்தானே அது சாத்தியப்பட்டது.இப்படியெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.

இன்றும் நம் சமூகத்தில் பிராமணர்கள் பிறவியிலேயே அறிவாளிகள் என்ற முட்டாள்தனமான கிறுக்குத்தனமான நம்பிக்கை படித்த பிறபடுத்தப் பட்ட ஜாதியினரிடம் கூட அவர்களை அறியாமல் விரவிக் கிடக்கும் போது,இரண்டாயிரம் வருசம் முன்னர் எப்படி இருந்திருக்கும்.

இந்திராபார்த்தசாரதி எழுதிய ’நந்தன் கதை’ என்ற நாடகத்தில் ஒரு பகுதி

// பெண் 1:மாட்டுக்கு வேண்டியது புல்லு

பெண் 2 :மனிசனுக்கு வேண்டியது வவுறு

பெண் 3:வவுத்துக்கு சாமி சோறு

நந்தன்:வவுத்துக்கு சாமி சோறு,மனசுக்கு?

ஆண் 1: பறையனுக்கு வவுறுதான் மனசு,வேறென்ன?

நந்தன்:மாட்டுக்குச் சரி,வவுறுதான் மனசு;மனிசண்டா நீ?

ஆண் 2 :மாடும் பறையனும் ஒண்ணு

நந்தன் :பறையனை விட ஒசத்தி மாடு

ஆண் 3: எப்படி?

நந்தன் : கோயிலுக்குள்ளாற போகலாம் மாடு...நீ?

ஆண் 4:மாட்டுக்கு ஏதுடா சாதி?

நந்தன்:யோசிக்க!மாட்டைவிட தாள்த்தியா மனிசன்//

நிறைய நண்பர்கள் “ஏன் இந்துமதத்தை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.ஏன் மற்ற மதங்களை கிண்டல் செய்வதில்லை” என்று அடிக்கடி கருத்துக் கூறி வருகிறார்கள்.

ஐயா நண்பர்களே விக்கிபீடியாவை ஒபன் செய்து பாருங்கள் இந்தியாவில் எத்தனை இந்துக்கள்.எத்தனை மற்ற மதங்கள் என்று,80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள்.

அவர்கள் பின்பற்றும் இந்துமதத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் யார்?

பிராமணர்கள்.

அந்த மதத்தை வைத்தே பிராமணர்கள் மற்ற எல்லா ஜாதியையும் அடிமையாக்கினர்.ராஜ ராஜ சோழன் முதலாக எல்லோரும், பிராமணர்கள் சொன்னதை கேட்கும் படியான தந்திரத்தை இந்து மதத்தின் துணை கொண்டே செய்தனர் என்பதை கொஞ்சம் அறிவு கொண்டு யோசித்தால், தெரிந்து கொள்ளமுடியும்.

ஆக இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இந்து மத விமர்சனம்,இந்து மதத்தின் மீதான சாடல் முக்கியம்.

இதைத்தான் பெரியாரிலிருந்து எல்லோரும் செய்து கொண்டு வருகின்றனர்.

மாட்டை கோவிலுக்குள் விட்டான்,மனிதனை விட வில்லை.சரி. எப்படி மனிதன் கோயிலுக்குள் மறுபடி போனான்.பெரியார் போன்றவர்கள் இந்து மதத்தின் அசிங்கத்தை விளக்கி போராடின பின்புதானே.

பத்தாயிரம் ஃபாலோவர்களையும். ஐந்தாயிரம் நண்பர்களையும்,450 லைக்கர்களையும்,பெரிய பதவியிலும்,கண்ணியமான தோற்றத்திலும் நிறைய “உயர் ஜாதி வெறி” பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.

ஜாக்கிரதை....

by ;Vijayabhaskar Vijay


Wednesday, February 19, 2014

கலைஞர் ஏன் 2000ல் நளினியை மட்டும் காப்பாற்றினார்? -டான் அசோக்




கலைஞர் ஏன் நளினியை மட்டும் 2000ல் தூக்கில் இருந்து காப்பாற்றினார் மற்ற மூவரைக் காப்பாற்றவில்லை எனக் கேள்வி கேட்போர் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே அமைதிப்படையை வரவேற்கச் செல்லாததைக் காரணம் காட்டியும், புலி ஆதரவாளர் என்பதைக் காரணம் காட்டியும் ஜெ-சந்திரசேகர்-சுஸ்வாமி கூட்டணியால் 1989ல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. அதன்பின் 1991ல் ராஜீவ் கொலைக்காக, ராஜீவ்வின் குடும்பத்தைவிட அதிகமாகத் துடித்தார்கள் தமிழர்கள். அதற்காக ஈழ (புலிகள்) ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்திற்காக திமுகவை 1991ல் ஒரே ஒரு சீட்டில் மட்டுமே ஜெயிக்க வைத்து படுபயங்கரமாக தண்டித்தார்கள் தமிழர்கள். பிறகு ராஜீவ்வின் மரண அலையில் மிதந்தபடி ஜெ ஆட்சிக்கு வருகிறார். வந்தவுடன் முழுமூச்சாக புலிகளை தீவிரவாதிகளாக அறிவிக்கும் செயலிலும், இந்தியாவில் புலி அமைப்பிற்கு தடை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு ஜெயிக்கிறார். தமிழ்மக்கள் கிஞ்சித்தும் கொந்தளிக்கவில்லை.

1996ல் திமுக வெற்றிபெற்ற பின்னரும் கூட தமிழகத்தில் புலி ஆதரவான சூழல் அமையவில்லை. மக்கள் ராஜீவ் கொலையை மன்னிக்கத் தயாராக இல்லை. அதனால் ஜெவின் புலி மற்றும் ஈழ எதிர்ப்பு அதே சூட்டுடன் தொடர்கிறது. தொடர்ந்து ஈழ எதிர்ப்பு வேலைகளைச் செய்கிறார். தற்போது கொந்தளிக்கும் வைகோ, நெடுமாறன், இதர இதர வாதிகள் யாரும் ஜெவை எதிர்க்கவில்லை.

இப்படியொரு சூழ்நிலையில் தான் 2000ல் நளினியின் தூக்கு தண்டனையை கருணையின் அடிப்படையில் ரத்து செய்யவேண்டும் என திமுக அமைச்சரவை பரிந்துரை செய்கிறது. இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

a)திமுக தீவிரவாதிகளை ஆதரிக்கிறது என ஜெ கடுமையாக தாக்கி பல அறிக்கைகள் கொடுத்தார். அந்த அறிக்கையை யாரும் எதிர்க்கவில்லை. தமிழக பொதுமனநிலை புலிகளுக்கு எதிராகத்தான் அப்போது இருந்தது.

b)ஏன் மற்ற மூவரின் தண்டனையைக் குறைக்க பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி பொதுச்சூழலில் எழவே இல்லை.

c)ஏற்கனவே புலிகளின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டால் ஆட்சியை இழந்த திமுக மீண்டும் அதே தவறை செய்யத் துணிகிறது. அதாவது பொதுமனநிலைக்கு எதிராக நளினியை தூக்கில் இருந்து காப்பாற்றுகிறது. அந்த காலகட்டத்தில் இது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். ஆனாலும் திமுக அதை நிறைவேற்றுகிறது.

d) (இதுதான் மிக மிக மிக முக்கியமான விஷயம்) இப்போது உச்சநீதிமன்றம் மூவரையும் நிரபராதிகள் என்ற ரீதியில் தூக்கு தண்டனையை நிறுத்தவில்லை. கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி(கள்) தாமதப்படுத்தியதால் நிறுத்தியிருக்கிறது. ஆனால் 2000ல் அவர்களுக்குத் தண்டனை கிடைத்து 2 ஆண்டுகளே ஆன சூழ்நிலையில், திமுக என்ன காரணத்தைச் சொல்லி அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடியும்? கருணைக்கு காரணமாக எதைக் காட்ட முடியும்? நளினிக்கு மட்டும் தான் குழந்தை என்ற சரியான காரணம் இருந்தது.  அதனால், ஏன் மற்ற மூவரை 2000ல் கலைஞர் காப்பாற்றவில்லை எனக் கேட்பது பைத்தியக்காரத்தனமான கேள்வி, கலைஞரை குற்றம் சாட்டவேண்டும் என்றே முன்வைக்கப்படும் வன்மமான, லூசுத்தனமான கேள்வி. 

ஆக, கலைஞரை குறை சொல்வதும், வன்மத்தை உமிழ்வதும் வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற ’வாய்மாறி அரசியல்வாதி’களுக்கு பிழைப்பாக இருக்கலாம். ஆனால் நம்மைப் போன்ற சராசரி மக்கள் குறைந்தபட்சம் வரலாற்றையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா? துவக்க காலத்தில் இருந்தே திமுக மரணதண்டனைக்கு எதிரான கட்சி. கலைஞர் பல சூழ்நிலைகளில் மரண தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். நளினியை 2000லேயே காப்பாற்றிய அவரை இந்த விஷயத்தில் குறை சொன்னால் அதைவிட மோசமான அரசியல் அறிவின்மை எதுவுமே இருக்க முடியாது. அப்படியும் கோபத்தைக் காட்டியே தீர வேண்டும் என நினைத்தால் நளினி காப்பாற்றப்பட்டபோது வெகுண்டெழுந்த, மூவரையும் காப்பாற்றவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் பல்டி அடித்த ஜெவிடம் சென்று காட்டுங்கள். ஏனென்றால் பந்து இப்போது அவர் பக்கம் இருக்கிறது!

Monday, February 17, 2014

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?

வெள்ளி, 31 ஜனவரி 2014 15:51
(இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படி தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)
மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.
எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.
கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல
ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.
ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை.
ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.
ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத் தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?
கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்
அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?
ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவா னாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!
எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது.
அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!
கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.
எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.
முன்னுக்குப்பின் முரண்
இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர்.
பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.
ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.
எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.
உண்மையை அறிய மதம் தடை
ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு.
காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/74414-2014-01-31-10-25-51.html#ixzz2tenn5Nym

Sunday, February 16, 2014

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் கோயிலை தரிசிக்க செல்லும் மக்களிடம் கோயிலில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என கேட்டால் பலருக்கும் விடை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ஒன்றா, இரண்டா எவ்வளவோ ரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. ஏதோ எனக்கு தெரிந்த ரகசியங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜாரை தரிசிப்பதற்காக சென்றவர்களை கொன்ற சம்பவமே சிதம்பர ரகசியம் ஆகும். இதில் முதலில் கொலை செயப்படடவர் அப்பர் என்கின்ற திருநாவுக்கரசு ஆவார். முதலில் இவர் எப்படி கொலை செய்யப்பபட்டார் என்பதை பார்ப்போம்
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவ சமயத்திற்கு மாறிச் சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.
“என்றும் நாம் யாவருக்கு மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக் கெதிராய்எவருமில்லை
சென்று நாம் சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந் திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய புண்ணியத் துளமே”(அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில்ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.
இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவதுஅப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்துதிட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறுதெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் ,நம்முடைய அறமல்ல. என்று கிராமம்கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டைஎன்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார்.அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்றுஅங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரைமுகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப்பரவச் செய்யினும், கொல்லாமையைபோதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்புஅளவிடாது என்று கூறினார்கள். இம்மொழியைகேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்துசமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன்தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ!தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன்பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்தபார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர்வலையில் வீழ்ந்தொமே!” என்று கண்கலங்கினார். சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தைகண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன்உம்மை இன்று ஆட்கொண்டான் என்றுநினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம்நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவைஇடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப்பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டிஉற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப்போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்தஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார்.திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்தஅந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவுசெய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களைபாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள்நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படிஅப்பர் உள்ளே நுழைந்ததும் கதவைமுடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன்கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்குஅப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார்என்று கூறிவிட்டனர். உள்ளே நுழைந்த அப்பரைஅங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்றுபுதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடிசேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்துவிட்டனர். அப்பரின் இறுதி (முடிவு) பற்றிபெரியபுராணத்தில் சரியான விளக்கம்சொல்லாமல் மழுப்புகிறது.
நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில்எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பைசார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம்நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல்கொண்டு ஒவ்வொரு
நாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை.அதனாலே, இவர் “திருநாளைப் போவார்” எனப்பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்றஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள்செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர்.நந்தனின் தொல்லை பொருக்ாத பார்ப்பன நரிகள்சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்றதீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும்என்றனர்.
நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கைகொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான்.பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டுதீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன்இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தணவடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்திவணங்கு என்றனர். அனுமதி கிடைத்துவிட்டஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்துசம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடுஇரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டிபாமர மக்களை ஏமாற்றிவிட்டனர். சதி செய்துகொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால்ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான்யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்ததெற்குப் புறவழி கூட இன்று வரைஅடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட நீங்கள்நேரில் பார்க்கலாம். நந்தன் நுழைந்த வழி தீட்டுபட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்தவழியை முடிவிட்டனர். நந்திக்கும்,நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில்கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.
ஆக, அப்பர் என்று அழைக்கப்படும்திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும்பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமேசிதம்பர ரகசியம்
ஆகும்.

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

Friday, February 14, 2014

எதை முதலில் தடை செய்யலாம்?...

 ஜாதி வெறியர்களே மத வெறியர்களே பதில் சொல்

காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ஜாதி வெறியன் ராமதாஸ் ராம்சேனா, இந்து முன்னணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி?

. நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?

பால்தாக்கரே இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?

பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?

காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்?

கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா? நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர். இத் தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல் வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக் காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சி கள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே!

இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!

நன்றி _ஈரோட்டு பூகம்பம்-

Thursday, February 13, 2014

ஆரியர்களின் பூர்வீக நாடு எது? ~ விடுதலை வலைப்பூ

ஆரியர்களின் பூர்வீக நாடு எது? ~ விடுதலை வலைப்பூ

ஓடாதே நில் நில்..கேட்ட கேள்விக்கென்ன பதில்?


By Karunanidhi Govindarajalu: கேள்விக்கென்ன பதில்?

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட்கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார்.

1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட்டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன?

2. தற்போது மோடி மேற்கொள்ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே?

3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் மந்திரிசபையில் நீடிக்கிறாரே. மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழைவதை தடுப்பேன் எனக் கூற முடியும்.

4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதே? இவற்றை களைய, மோடி அரசு செய்த நடவடிக்கைகள் என்ன?

இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

சிஎன்என் - அய்பிஎன் ஆங்கில ஊடகத்தின் சிறந்த ஊடகவியலாளர் கரன் தாபர், மோடியை 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி கண்டார். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக கேள்வி கேட்டார். குஜராத் கலவரத்திற்கு நீங்கள் தான் காரணம் என சொல்லப்படுகிறதே; அந்த கலவரத்தில் பல்லாயிர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே; இதற்கு தாங்கள் இப்போதாவது வருத்தம் தெரிவிப்பீர்களா? என்று கேட்டதற்கு, அப்போதே நான் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இதற்கு மேல் உங்கள் பேட்டியில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று அய்ந்து நிமிடத்திலேயே அரங்கத்திலிருந்து வெளியேறியவர் மோடி.

வரலாற்று செய்திகளையெல்லாம் தவறாக பொதுக்கூட்டத்தில் மோடி கூறியதை சுட்டிக் காட்டியதற்கும், அவரிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.

தற்போது, அகமதாபாத்தில் தேனீர் கடையினை உருவாக்கி, அதில் வீடியோ கான்பரன்சிங் முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேனீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி.

முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும். பிறகு தேனீர் சாப்பிடலாம்.

#நன்றி:Karunanidhi Govindarajalu

தாய்க் கழகத்தின் கடமை

ம.தி.மு.க வின் செயல்பாட்டை பற்றி இடித்துச் சொல்லுவது தாய்க் கழகத்தின் கடமையாகும்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்வதற்கு எந்தக் காரணத்தையா வது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது.

(1) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்கிறார். வாதத்துக்காக அப்படியே இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஓர் அலை வீசுவதாலேயே அந்த அலையோடு அடித்துக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கூறுகிறாரா? அலையோடு போக வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?

(2) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழக அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இதுவரை இருந்த பரிமாணம், மோடி அலையால் இம்முறை உடையும், புதிய மாற்றம் துவங்கும் என்று கூறியுள்ளார். உடனே மோடி என்ன பதில் சொன்னாராம்? நானும் அப்படித் தான் எதிர்பார்க்கிறேன் என்றாராம். (தினமலர் 10.2.2014 பக்கம் 3).

ஆக திராவிடர் இயக்கத் தொடர்பான அமைப்புகள் தோற்றுப்போக வேண்டும், இந்துத்துவா கட்சியான பிஜேபி தமிழ்நாட்டில் வேர்ப் பிடிக்க வேண்டும். அதுதான் புதிய பரிமாணம், புதிய மாற்றம் என்பதுதான் மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடா? அப்படியானால் அவர் கட்சியிலும் இருக்கும் திராவிட என்பது என்னாவது? அதிலும் மாற்றம் வரும் என்று எதிர்ப் பார்க்கலாமா?.

திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான கொள்கை ஜாதி ஒழிப்பு - பிறவிப் பேத ஒழிப்பு - சமத்துவ நிலை என்பது பிஜேபியின் இந்துத்துவா கொள்கை என்பது வருணாசிரம தர்மத்தைக் காப்பது - ஜாதியைக் கட்டிக் காப்பது (கோல்வாக்கரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் நூலைப் படித்துப் பார்க்கட்டும்).

இந்த நிலையில் திரு. வைகோ என்ன சொல்லுகிறார்? ஜாதி ஒழிப்புக் கொள்கை என்பது சுத்த மோசம்.

பிஜேபி கூறும் வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டியதுதான் என்று சொல்லுகிறாரா? இதுதான் மறு மலர்ச்சியைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டுள்ள ஒரு திராவிடக் கட்சியின் கொள்கைக் கோட்பாடா?

இதே வைகோ அவர்கள் இந்த இந்துத்துவா கூட்டத்தைப் பற்றி என்ன கூறினார்?

பாபர் மசூதியை இடித்து, தகர்த்துத் தரைமட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச் சார்பின்மைமீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலாகும்; பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங்பரிவார் எனும் மத வெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே. அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றஞ் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங் களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடி களின் மெலிந்த தேகத்தின்மீது பாய்ந்த மூன்று தோட்டாக் களின் ஓசையை நினைவூட்டியது (தினகரன் 25.12.1992). என்று பேசினாரா இல்லையா?

இந்த மத வெறிக்கும்பல் நன்னெறி திருக்கூட்டமாக எப்பொழுது மாறியது? வைகோ, மோடிக்குச் சால்வை போர்த்தியவுடன் இந்துத்துவா கூடாரத்தின் கொள்கையும், கோட்பாடும் நிறம்மாறி விட்டனவா? பெரியார், அண்ணா கொள்கைகளை இதோ இக்கணமே ஏற்றுக் கொண்டோம் என்று கூறி விட்டார்களா?

1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மாறிமாறி வரும் திராவிட இயக்கப் பரிணாமத்தை உடைக்க இந்துத்து வாவை, வைகோ அவர்கள் அழைத்ததும் - அதற்கு தானும் அப்படிதான் எதிர்ப்பார்ப்பதாக மோடி கூறியதும் - என்றென்றும் வைகோ அவர்களைத் துரத்தி கொண்டே தான் இருக்கும் என்பதில் அய்யமே இல்லை.

3) வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கடைப்பிடித்த அணுகு முறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் வைக்க நரேந்திரமோடி அப்படியே செய்வோம் - என்று கூறியதாக வைகோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இது உண்மையா? இலங்கைப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, வேறு வெளியுறவுப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் கொள்கை அளவில் வேறுபாடு கிடையாதே! ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இதே வாஜ்பாய் (8.5.2000) சொல்லவில்லையா?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் மாநிலங்களவையில் அதிகார பூர்வமாக என்ன பேசினார்?

இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கை யோடு தொடர்பில்தான் இருக்கிறோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கவில்லையா? (4.5.200).

இதுதானே காங்கிரசின் நிலைப்பாடும்! வாஜ்பேயி அமைச்சராவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்தானே இப்படிப் பேசினார். வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்து விட்டதுபோல பேசலாமா வைகோ அவர்கள்?

திரு வைகோ அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல; இப்பொழுதுகூட கெட்டுப் போய் விடவில்லை. பிஜேபி உறவைத் துண்டித்துக் கொள்வது நல்லது; இல்லையெனில் இந்தப் பழி, காலா காலத்திற்கும் விரட்டிக் கொண்டே இருக்கும் என்று இடித்துச் சொல்லுவது தாய்க் கழகத்தின் கடமையாகும்.

‪#‎நன்றி‬: விடுதலை தலையங்கம், 13-02-2014

எல்லா மதத்திற்கும் தாய்


மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும். அப்படி இல்லாமல் தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாச்சிரம தர்மத்தை மற்றொரு முறையில் பின்பற்றுவதேயாகும். பகுத்தறிவுவாதி என்ற சொல்வது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒப்பாகும்.

நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்ல, ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அவை என்றும், ஆரியர்கள் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்த ஓர் அன்னிய இனத்தவர் என்றும் அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண, இதிகாசங்களைச் சுமந்து கொண்டிருப்பது பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கிறன்றீர்கள் என்றும் தெரிந்தால் அதுவே போதுமானதாகும்.

- பெரியார்,
('குடிஅரசு' 13.01.1945)

பிரகாஷ்ராஜ்....vs.....ஆனந்தவிகடன/25.9.2013

கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.

சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?

விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013

தகவல்: சிவகாசி மணியம்

கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை கண்டிப்பாக விமர்சிக்கப்படவேண்டியதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்திரையடியுடன் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும்பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.

இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.

இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.

ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?

தஸ்லிமா நஸ்ரீனின் நாத்திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்ததும் சரியானதே!

அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!

இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாதவர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண்டியுள்ளது.
இந்து மத வினா தொடுப்பாளர்களைப் பார்த்து இன்னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.

இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவையற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.

இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?

சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?

பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?

இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன்

ThirukKuRaL