தென்றல் (Thendral)

Monday, March 17, 2014

ஓலைகளின் வகைகள்

எழுத்தோலை.. அதன் வகைகள்
************************************
பாறைகளில் கிறுக்கி, பின்னர் கல்வெட்டுகளில் பொறித்து அதன் பின்னர் ஓலைகளில் தமிழர்கள் எழுதி வந்தனர். மேலும் செப்புப் பட்டயங்களிலும் பொறித்து வந்தனர்.
பின்னர் அச்சுருவில் வந்தது தமிழ். முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத் ஆவார்.
ஓலை வகைகள்..
***************
எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டனவாம்.
1) அமைப்பு ஓலைகளின் வகைகள்
********************************
நீட்டோலை:- திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
மூல ஓலை:- ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
சுருள் ஓலை:-ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன.
குற்றமற்ற ஓலை:-மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.
2) செய்தி ஓலைகளின் வகைகள்
******************************
நாளோலை:-தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
திருமந்திர ஓலை:-அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார்.
மணவினை ஓலை:-திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது.
சாவோலை:-இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

No comments:

Post a Comment

ThirukKuRaL