தென்றல் (Thendral)

Monday, April 21, 2014

பெரியாரியவாதியாக சொல்லிக்கொள்ளும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.

நன்றி : எதிரொலி
பெரியார் பெயரைச்சொல்லிக்கொண்டு பிரபாகரனுக்கு வால் பிடிக்கும் சில "பகுத்தறிவு" (?) பொறுக்கிகளுக்கு எதிரொலியின் பதில் இதுவே!
பெரியார் திராவிடர் கழகத்தைச்சேர்ந்த முன்னணி செயற்பாட்டாளர் பரிமளராசன். அவர் இன்று தனது முகநூலில் எழுதியிருக்கும் பதிவின் முதல் இரண்டு வாசகங்கள் இவை.
''நளினி அவர்களை விடுவிக்க முடியாது என்பதற்கு இனத்துரோகி கருணாநிதி 2010ல் கூறிய காரணங்கள்''
இதற்கு எதிரொலி அங்கேயே எழுதிய பதில் இது.
கருணாநிதியை "இனத்துரோகி" என்று சொல்லும் முண்டமே உனக்கு பெரியார் பெயரை சொல்லும் யோக்கியதை இருக்குதா மூடனே? கருணாநிதியைப்பற்றி இன்னொரு முறை இனத்துரோகி என்று எழுதினால் எதிரொலியின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவாய். இல்லை நீயாக விலகிப்போ. ராஜீவ் கொலையில் நளினிக்கு பங்கு என்ன என்று எதிரொலியை எழுத வைக்காதே. எல்லாம் சரி ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தானே பிரபாகரன் அவனை பிள்ளை பிடி பிரபாகரன் என்று சொல்லலாமா? சொல்லுவாயா சோற்றால் அடித்த பிண்டமே? யாரை பார்த்து இனத்துரோகி என்றாய் ஈனப்பிறவியே!
இது பரிமளராசன் என்கிற ஒருவருக்கு சொன்னதல்ல. கருணாநிதியைப்பார்த்து "இனத்துரோகி" என்று சொல்லும் எல்லா எடுபட்ட பயல்களுக்கும் எதிரொலியின் பதில் இதுவே. குறிப்பாக பெரியாரியவாதியாக சொல்லிக்கொள்ளும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.
அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக்குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா? உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின் தமிழ்இனமா?
இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத்தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு? அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா? 2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத்தமிழ்கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா? இலங்கைக்குள் இருந்த அந்த மலையகத்தமிழ் கட்சிகள் கூட பிரபாகரனுக்கு ஆதரவாக ராஜபக்ஷே அரசில் இருந்து விலகவில்லை என்றாவது உங்களுக்குத் தெரியுமா? அதுதானடா பிரபாகரனின் உண்மையான "செல்வாக்கு" இலங்கையில் இருக்கும் மலையகத்தமிழனிடம். அந்த மலையகத் தமிழ்கட்சிகளைப் பார்த்து இனத்துரோகி என்று சொல்லிப்பாரேன். செறுப்பால் அடிப்பான். அதுவும் பிய்ந்த செறுப்பால் அடிப்பான். ஏனென்றால் பிரபாகரனின் பிள்ளைபிடி போராட்டம் பற்றி உன்னைவிட அவனுக்கு நன்கு தெரியும். புலிகளிடமிருந்து சொந்தப்பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தமிழ் குடும்பங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதைவிட முக்கியமாக மலையகத்தமிழனை சக மனிதனாக கூட மதிக்காத யாழ்ப்பாணத்தமிழனின் அரசியல் அடியாள் தான் பிரபாகரன் என்பதை பட்டுத்தெளிந்தவன் மலையகத்தமிழன்.
அதுமட்டுமல்ல, இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து குடியுரிமை பறித்து இலங்கையில் இருந்து விரட்டிவிட்ட லட்சக்கணக்கான மலையகத்தமிழனை வரவேற்று வாழவைத்தவன் கருணாநிதி என்கிற வரலாறு மற்றவனை விட நேரடியாக பாதிக்கப்பட்ட மலையகத்தமிழனுக்கு நன்றாகத்தெரியும். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமாடா முண்டங்களே?
மலையகத்தை விடு. கிழக்கு இலங்கைத்தமிழனையாவது சேர்த்துக்கொண்டானா உன் பிரபாகரன்? இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்கிறீர்களே? இலங்கை வரலாற்றில் வடக்கும் கிழக்கும் என்றாவது ஒன்றாக இருந்தது உண்டாடா ஞானசூனியங்களே? இருந்ததே இல்லை. அப்படி ஒன்றாக இல்லாத வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்கியது இந்திய இலங்கை ஒப்பந்தம். அதை முட்டாள் தனமாக மூர்க்கமாக எதிர்த்து இந்திய படைகளோடு வலிந்துபோய் மோதி தானும் செத்து தன் இனத்தையும் சாகவிட்ட பொறுப்பற்ற கொலைகார கொடுங்கோலனை போற்றிக்கொண்டு பெரியாரை மறந்து, போயஸ் தோட்டத்தில் போய் புடவை துவைக்கும் பொறுக்கிகளா கருணாநிதியைப் பார்த்து "இனத்துரோகி" என்பது?
இவ்வளவு பேசுகிறீர்களே, இன்றுவரை ஜெயலலிதா ஒரே ஒருமுறையாவது ஈழத்தமிழர்களுக்காக எல்லாவற்றையும் இழந்து கடைசிவரை போராடிய போராளிகள் இயக்கம் என்று நீங்கள் சொல்லும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஜெயலலிதா ஒரே ஒரு வார்த்தை பேசியதுண்டா பொறம்போக்குகளே? தமிழ்நாட்டில் பிரபாகரன் படத்தை வைத்து கூட்டம் போட தடைவிதித்திருப்பவர் ஜெயலலிதா. இன்றுவரை ஈழம் என்கிற வார்த்தையையே பயன்படுத்த மறுப்பவர் ஜெயலலிதா. அவர் உங்களுக்கு "ஈழத்தாய்". ஈழத்தமிழனுக்காக ஒன்றுக்கு இரண்டு முறை ஆட்சியை இழந்த கருணாநிதி உங்களுக்கு இனத்துரோகியா?
அடி செருப்பால...
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதத்தலைவர் பெரியாருக்கு ஈடாக ஊரான் பிள்ளைகளை பலவந்தமாக பிடித்துக்கொண்டுபோய் போரில் சாகவிட்ட பொறுக்கிப்போராளி பிரபாகரனை தூக்கிப்பிடித்த தறுதலைத்தனத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத்தவறியதன் விளைவு இன்று கருணாநிதியைப்பார்த்து வாய்கூசாமல் இனத்துரோகி என்று வசைபாடுவதில் வந்து நின்றிருக்கிறது.
பொறம்போக்கு பிரபாகரன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இதேபோல் தேர்தல் சமயம் தேடிவந்து தமிழ்நாட்டில் கொடூரமாக கொன்றபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப்பயல்களே. அதெல்லாம் யாரால்? பொறுக்கி பிரபாகரனால். ராஜீவ் கொலைக்கு கருணாநிதியும், திமுகவும் தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஓட்டுக்கேட்டு முதல்வரானவர் ஜெயலலிதா.
இந்த தேர்தலில் அந்த ராஜீவ் கொலைக்காக தண்டிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதாக போக்கு காட்டி வாக்கு வேட்டையாடப் பார்க்கிறார். அந்த நாடகத்துக்கு உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியே அறிந்தோ அறியாமலோ துணை போகாமல், தன் தீர்ப்பை தேர்தல் முடிந்த மறுநாள் கொடுக்க வேண்டும் என்று ராஜீவ் கொலையால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட ஒரு கட்சி கோருவதில் என்னடா தவறு?
கொடுக்கும் தீர்ப்பை வெறும் 24 மணிநேரம் தள்ளிக்கொடுங்கள் அது அரசியலாகாமல் இருக்கும் என்று சொன்னால் உடனே கருணாநிதி "அரசியல் செய்கிறார்" என்று கூப்பாடு. ராஜீவ் கொலையை வைத்தும், கொலையாளிகளை வைத்தும் 23 ஆண்டுகளாக அரசியல் செய்தது; செய்வது யார்? ஜயலலிதாவா? கருணாநிதியா?
இதே நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக கருணாநிதி குறைத்தபோது அதை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் யார்? இதே ஜெயலலிதா தானே? கருணாநிதிக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று சொல்லி திமுக ஆட்சியை தேசத்துரோக ஆட்சி என்று சதிராட்டம் போட்டவர் சாட்சாத் ஜெயலலிதா தானே?
எனவே எதிரொலி சொல்லும் எளிய செய்தி இது தான். இனிமேலும் ஈழத்தமிழனைக்காட்டி, கருணாநிதியைப்பார்த்து "இனத்துரோகி" என்று சொன்னால் அவனுக்கு எதிரொலியின் வார்த்தை செறுப்படி நிச்சயம் உண்டு. சொன்னவன் வயதோ, படிப்போ, மற்ற மற்ற தராதரங்கள் எதுவுமோ எதிரொலிக்கு ஒரு பொருட்டே அல்ல. அப்படி சொல்பவன் எந்தக்கொம்பனாக இருந்தாலும் அவன் "இனம்" என்று எதைச்சொல்கிறான் என்பதை முதலில் வரையறுக்கவேண்டும். அடுத்து அந்த "இனத்துக்கு" கருணாநிதி என்ன "துரோகம்" செய்தார் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த "இனத்துக்கு" பிரபாகரன் செய்த நன்மைகள் என்ன என்றும் அவர்கள் பட்டியலிடவேண்டும்.
2009இல் இறுதி யுத்தத்தில் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தப்ப முயன்ற சக தமிழர்களை சுட்டுக்கொன்ற கொலைகார கும்பல் தான் விடுதலைப்புலிகள் என்பதற்கும், அதன் தலைவன் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் எதிரொலியிடம் மட்டுமல்ல, ஐநா மன்றத்திடமே இருக்கிறது என்பதை மட்டும் எதிரொலி இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறது. எச்சரிக்கையாக அல்ல; தகவலாக!
பின் குறிப்பு: பரிமளராசனின் இந்த பதிவில் ஈழம் பேசும் எடுபட்ட பிறவியான
புகழ்ச் செல்வி பரணிப் பாவலன் என்பவர் இப்படி பின்னூட்டம் இட்டிருந்தார்:
"கருணாவின் அடிமைகள் இன்னும் உள்ளது.இனக்கொலை செய்து முடித்தும் இத்தாலி காலில் வீழ்ந்துக் கிடந்த இரண்டகனை எப்படி அழிப்பது"
அதற்கு எதிரொலி இப்படி பதில் எழுதியிருந்தது: புகழ்ச் செல்வி பரணிப் பாவலன் "இரண்டகனை எப்படி அழிப்பது" என்று அங்கலாய்த்திருந்தீர்கள். நல்லது! அவ்வளவு அவசரமென்றால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லும் வைகோவிடம் இதை சொல்லுங்களேன். உடனே வைகோ பிரபாகரனிடம் பேசி இன்னொரு மனிதவெடிகுண்டை ஏற்பாடு செய்வார். நீங்கள் எல்லாம் சேர்ந்து "களமாடி" கருணாநிதியின் கதையை உடனடியாக முடிக்கலாம். எப்படி வசதி? இத்தனைக்குப்பிறகும் இன்னுமாடா நீங்களெல்லாம் திருந்தவில்லை? அடத்தூ.....

No comments:

Post a Comment

ThirukKuRaL