தென்றல் (Thendral)

Friday, May 9, 2014

திராவிடன் என்ற அடையாளமே ஜாதி மறுப்பாளன் என்ற பொருளை கொண்டது ..

தமிழனும், தெலுங்கனும், மலையாளியும் கன்னடனும் மட்டுமல்ல , பார்ப்பனரல்லாத பிகாரியும் , மராட்டியனும் கூட திராவிடன் தான் ..
-0-
ஆரியர் என்பதன் எதிர்சொல் திராவிடர் ..
-0-
ஒருவனுக்கு எல்லா காரணங்களுக்கும் தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு அடையாளம் மட்டுமே இருக்க முடியாது!
நான், உயிரனத்தால் மனிதன், பாலினத்தால் ஆண், மொழியினத்தால் தமிழன் .. அதேமாதிரி ஆரிய பண்பாட்டை எதிர்க்கவேண்டிய இடத்தில் திராவிடன் .. அதுபோல வேறு சிலருக்கு ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடையாளம் தேவைப்படும் இடங்களில் தலித் ..
-0-
தலித் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தலித் , தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன் ...
திராவிடன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் திராவிடன், தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன் ..
தொழிலாளர் உரிமை என்கிற இடத்தில் தொழிலாளி என்கிற வர்க்க அடையாளமும் உண்டு ..
இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான அடையாளங்கள் அல்ல ..
மாறாக இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி மோத விடுவதன் மூலம் , எதற்கு எதிராக நாம் அந்த அடையாளங்களை வரிந்துக்கொள்கிறோமோ அவர்கள் செலவில்லாமல் பயனடைக்கிறார்கள் ..
-0-
தந்தை பெரியார் ஆரியர் ஆதிக்கத்தை ஆரிய பண்பாட்டை எதிர்ப்பதற்காக ஆரியர் அல்லாத மக்களை மட்டும் அணிதிரட்டுவதற்காக ஏற்படுத்தியதுதான் திராவிடர் கழகம் .. இது ஒரு பண்பாட்டு இயக்கம் .. அரசியல் இயக்கம் அல்ல .. அரசியல் அதிகாரத்தில் அக்கறை இல்லாதவர்களின் இயக்கம் ...
அரசியல் விடுதலை குறித்த தேவைகளுக்கு தமிழ்நாடு தமிழனுக்கே என்பதுதான் அவரது இறுதி முழக்கம்..
-0-
ஆரிய பண்பாட்டை எதிர்ப்பதுதான் முதல் நோக்கம் என்றால் பிறவி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது என்று பொருள் .. இந்த வகையில் திராவிடன் என்ற அடையாளமே ஜாதி மறுப்பாளன் என்ற பொருளை கொண்டது ..
-0-
பல ஆயிரம் முறை இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது !

No comments:

Post a Comment

ThirukKuRaL