தென்றல் (Thendral)

Sunday, May 8, 2016

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்

தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதை விட, உழைக்காமல்
கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதில் யாருக்கும் பெரிய வருத்தம்
இருக்கப் போவதில்லை. முறையான உழைப்பின் வழியாக இல்லாமல்
, முறைப்படியான
கணக்குகளையும் காட்டாமல் சம்பாதிக்கும் வழிவகைகள் உள்ள இந்த நாட்டில்
இனாம்களைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும் என அரசியல்வாதிகள்
நினைக்கிறார்கள். பதவிக்காலத்தில் முறைப்படி சம்பாதிக்காத பணத்தைச்
சேர்த்து வைத்துத் தேர்தல் காலத்தில் இனாமாகக் கொடுக்கிறார்கள். அதைப்
புரிந்து கொள்ளாத வாக்காளர்கள் அதிகம் தருபவன் அதிகக் கருணை உள்ளம்
கொண்டவன் என நினைத்து வாக்களிக்கிறார்கள்.
இனாம்களைக் கொடுத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் ஜனநாயகத்தின் நல்ல அம்சங்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதையும், இருக்கிற
அமைப்புகளின் செயல்பாடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கூடுதலாகப்
பணம் சம்பாதித்துச் சேமித்துக் கொள்வார்கள் என்பதையும்
, அப்பணத்தையே
அடுத்த தேர்தலில் அதிக இனாமாகக் கொடுப்பார்கள் என்பதையும் வாக்காளர்கள்
எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. அது உணரப்படாதவரை தேர்தல் ஜனநாயகம்
சரியான அர்த்தம் கொண்டதாக இருக்கப் போவதில்லை.  

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்: இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும...

No comments:

Post a Comment

ThirukKuRaL