தென்றல் (Thendral)

Monday, September 26, 2016

''மலைத்தேன்''

"படித்தேன்'' ========== ''மலைத்தேன்'' ''குடித்தேன்'' ''களித்தேன்'' கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான். ""நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று. நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை! http://paddathumsuddathum.blogspot.in/

No comments:

Post a Comment

ThirukKuRaL