தென்றல் (Thendral)

Tuesday, March 25, 2014

**கடவுள் இல்லை பாகம் 2**


கடவுள் எப்படி வந்தான் ?
அவரை யார் படைத்தது?

மதவாதிகளின் பதில்; கடவுள்
என்பவன் எதுவுமற்றவன்,
அவனை யாரும் படைக்க
முடியாது அவன் தான்
படைப்பாளி அவனுக்கு பிறப்பும்
இல்லை இறப்பும் இல்லை அவன்
உருவமற்றவன்
முதலில் இந்த பதில் இவர்களின்
மதத்திற்கு பொருந்துகிறதா என்று
பார்ப்போம்

இந்து மதம்

இது மதமா வாழ்க்கை முறையா
அதற்குள் எல்லாம் போக
வேண்டாம் , இந்து மதத்தின்
அடிப்படையான ரிக் வேதம் இதில்
இருந்து சில
வசனங்களை பார்ப்போம்

உண்மையில் யாரறிவார்? யார்
அதைச் சொல்ல முடியும் ?
எங்கிருந்து தோன்றியது சிரு
எங்கிருந்து ?
தேவர்களோ படைப்பிற்குப் பின்
வந்தவர்கள் அப்படியானால்
அது எப்படி உருவாயிற்று?
யாரறிவார்? (ரிக்:
பத்தாவது மண்டலம் 129
வது சூக்தம், பாடல் 6)

இந்த சிருஷ்டியின் தோற்றம் யார்
அதை உண்டு பண்ணவில்லை?
அப்பாலான ஆகாயமாக இதைக்
கண்காணிக்கும் அவனே அறிவான்
அல்லது அவனும் அறியான்.
(பாடல் 7)

தனிப்பட்ட ரீதியாக நான்
இதை ஆதாரிக்கிறேன்
இது நேர்மையான கருத்து (இந்த
கருத்தை மட்டும் தான்) ,
இப்போது பிரச்சனைக்கு வருவோம்
உண்மையில் இந்து மதம்
என்பது கடவுளை கற்பிக்கவில்லை
என்பது இந்த வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகிறது
அதனால் இந்துக்களுக்கு இந்த
எதுவுமற்ற கடவுள்
கொள்கை ஒற்று போவதில்லை
இருந்தாலும்
ஒரு முரண்பாடு உள்ளது அது
என்ன என்பதை பார்க்கலாம்

சில இஸ்லாமிய அமைப்புகள்
கடவுள் என்பதை எல்லாம் மதமும்
ஒரே மாறி தான்
கற்பிக்கிறது இஸ்லாம் மனிதன்
தோன்றியதில்
இருந்து இருக்கிறது என்று தங்கள்
மதத்தை விற்க
முகம்மது ஏற்படுத்திய
ஒரு கோட்பாட்டை உண்மை என்று
நிரூபிக்க இந்துக்களும்
அடிப்படையில் இஸ்லாமியர்கள்
தான் என்று சில
வசனங்களை காட்டுகிறார்கள்

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி"
அவனை உருவகிக்க முடியாது,
அவன் தான் தோன்றி. நமது வணக்க
வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன்
.
உருவமற்ற அவனின்
கீர்த்தி மிகப்பெரிது. வானில்
உள்ள
அத்தனை கோள்களின்
இயக்கங்களையும்
தன்னகத்தே வைத்துள்ளவன்.
(தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம்
377)

இந்த வசனம் அவன் தான்
தோன்றி என்று சொல்கிறது
அதாவது அவன் தானாக
தோன்றினாம் , அவன் தோன்றினான்
என்றால் அதற்கு முன்பு என்ற
கேள்வி வருகிறது அதனால் இந்த
வசனமும் பிறப்பும் இறப்பும்
இல்லாத கடவுள் கொள்கையாக
இல்லை (அது மட்டும்
இல்லை அடிப்படையில் ரிக்
வேதம் தான் முதன்மை வேதம் அதன்
கருத்துடன் இந்த வசனம்
முரண்படுகிறது )
இந்த வசன ஆதாரங்கள் மூலம்
இந்து மதத்திற்கும் மேலே உள்ள
எதுவுமற்ற கடவுள் கொள்கைக்கும்
சம்மந்தம் இல்லை அதனால்
இந்து மத ஆர்வளர்கள் கடவுள்
இருக்கு என்று நிரூபிக்க அந்த
கருத்தை பயன்படுத்த
முடியாது (முதலில் தேவர்கள்
இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன்
நிரூபிக்க முயற்சி செய்யுங்கள் )

இஸ்லாம் மதம்

இது மதமா மார்கமா என்பதற்குள்
நாம் போக வேண்டாம் சில
வசனங்களை பார்க்கலாம்

குரான் 75:22-23
அந்நாளில் சில முகங்கள்
மலர்ந்து இருக்கும்
தமது இறைவனை பார்த்து கொண்டு
இருக்கும்

இந்த வசனங்கள் என்ன
சொல்கின்றது என்றால் சொர்கத்தில்
இறைவனை நாம் பார்க்கலாம்
என்று சொல்கிறது , இதில்
கேள்வி என்னவென்றால்
அவனுக்கு தான்
உருவமே இல்லையே அவனை
எப்படி பார்க்க முடியும் ,
அப்போது இந்த வசனம்
அல்லாவுக்கு உருவம்
இருக்கிறது என்பதை
தெளிவுபடுத்துகிறது (சில பேர்
வேண்டுமென்றால் மனிதன் இறந்த
பிறகு அவனும்
ஒன்றுமற்றவனாகிறான் அதனால்
பார்க்க முடியும் என்று சொல்லாம்
அப்படி சொன்னால்
பிறகு மனிதனுக்கும்
அல்லாவுக்கும் வித்தியாசம்
இல்லாமல் போய்
விடுகிறது அதுவும் இல்லாமல்
இது அர்த்தமற்ற விதன்டாவாதம்
ஆகிறது )

குரான் 69:17
இன்னும் மலக்குகள் (angles)
அதன் கோடியிலிருப்பார்கள்,
அன்றியும் , அந்நாளில்
உம்முடைய இறைவனின்
அர்ஷை (சிம்மாசனத்தை) எட்டு பேர்
(வானவர்கள்) தம் மேல்
சுமந்திருப்பார்கள்.

இந்த வசனம் என்ன
சொல்கிறது என்றால்
அல்லா இருக்கையில் உட்கார
கூடியவன் அப்படி என்றால் அவன்
ஒரு பொருள் ஆகிறான் ,
அவனை எட்டு பேர் சுமக்கிறார்கள்
அப்படி என்றால் அவன்
எடை உள்ளவன்
அப்போது அவனுக்கு கை கால்
எல்லாம் உள்ளது அப்போது தானே
இருக்கையில் அமர முடியும் ,
இந்த வசனம் மூலம் அல்லா உருவம்
உள்ளவன் என்று தெரிய
வருகிறது அதனால் இஸ்லாமிய
மதத்திற்கும் எதுவுமற்ற கடவுள்
கருத்து ஒற்று வரவில்லை (பெரு
வெடிப்புக்கு முன்பு என்ன
இருந்தது அதை யார்
நிகழ்த்தியது என்று கேட்க
உங்களுக்கு தகுதியே இல்லை )
மற்றும் வாழும்
நபி பிஜே போன்றவர்கள்
அல்லாவிற்கு உருவம்
இருப்பது உண்மை தான்
என்று ஒற்று கொண்டார்கள்

கிருஸ்துவ மதம்

இது ஒரே மதமா இல்லை பல
கிளைகளா என்பதற்குள் நாம் போக
வேண்டாம் தலைப்புக்கு செல்வோம்
இஸ்லாம் மதத்தை ஒரு விடயம்
பாதிக்கிறது என்றால்
அது கிருஸ்துவ
மதத்தை பெரியதாக பாதிக்கும்
காரணம் இஸ்லாமின் முதல் பாகம்
தான் கிருஸ்த்துவம்

Revelation 22:4
And they shall see his face; and
his name shall be in their fore
heads

இந்த வசனமும் புதுசாக ஒன்றும்
சொல்லவில்லை அதே தான்
அதாவது சொர்க்கத்தில் கடவுளின்
முகத்தை நீங்கள் பார்க்கலாம்
அதனால் இவர்களும் அந்த
பொதுவான கடவுள்
கொள்கையை தூக்கி பிடிக்க
முடியாது (இது மட்டும்
இல்லை ஏசு கடவுளா இல்லை அவர்
தந்தை கடவுளா இல்லை ஏசு தான்
எல்லாமா இல்லை ஏசு தெய்வ
தூதரா என்று பைபிள்
வசனங்களிலேயே ஒன்றுக்கொன்று
ஏகப்பட்ட முரண்பாடு )

உண்மையில் அந்த எதுவுமற்ற கடவுள் கொள்கை யாருக்கு சொந்தம் , அது வெற்றி பெற்றதா? பெறுமா? என்பதை முழு கட்டுரை படித்து தெரிந்து கொள்ளவும்

http://nathigamm.blogspot.in/2014/03/blog-post_23.html?m=1

குறிப்பு :கருத்தை பதிவு செய்பவர்கள் மாற்று கருத்தை ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் தலைப்பை மாற்ற வேண்டாம்
— with நானே ராசா and 14 others.

No comments:

Post a Comment

ThirukKuRaL