தென்றல் (Thendral)

Monday, June 8, 2015

காதல் மனைவி செய்த துரோகத்தை கவுரவத்திற்காக வெளியே சொல்லாத கணவனைப்போல, திமுக , ஈழப்போராளிகளின் பாவத்தை தன் தலையின் மேல் சுமந்து கொண்டிருக்கிறது.

Via கிளிமூக்கு அரக்கன்
கேள்வி :- கனிமொழி பேச்சைக்கேட்டு சரணடைந்தோம் என்று யாரோ ஓர் ஈழத்து அம்மணி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்களே ? இதற்கு என்னபதில் சொல்கிறீர் அரக்கனே ?
பதில் :- பதில் சொல்வதற்கு முன்னர் ஒரு பொறுப்புத்துறப்பு எச்சரிக்கை. லெமூரியா கண்டத்தை கண்டுபிடித்தவர்கள் , ஈழம் சிட்பண்ட்ஸ் ஏஜென்சிகளில் முதலீடு செய்பவர்கள், உலக பாவங்களுக்கெல்லாம் ஒரே காரணம் கருணாநிதி என்று நம்புபவர்கள், சாத்தான் கருனாநிதியின் பாவங்களில் இருந்து மக்களை மீட்டெடுப்பவர் ஜெயலலிதா என்று நம்புபவர்கள் , தமிழ் வரலாற்று அவியல் மையங்கள், தமிழ்நாஜிக்கள் , பாரிஸ் லா சாப்பல், லண்டன் ஈஸ்ட் ஹாம் பாய்ஸ் இதைப்படிப்பதை தவிர்த்துவிடுங்கள். இந்த பதில் முழுக்க முழுக்க காமன் சென்ஸ் இருக்கும் சாமானிய தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது.
நமது தமிழ்நாட்டு பொதுசனங்களுக்கு ஈழமென்றால் தமிழ், ஈழத்தவரென்றால் நேர்மையானவர்கள் என்ற ஓர் ஈழமாயை உண்டு. ஆனால் நமது நம்பிக்கைகளுக்கு மாறாக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கும் கயமைத்தனம் , துரோகம் இவற்றைவிட ஏகத்துக்கும் அதிகம் ஈழத்தவருக்குண்டு. நம் அரசியல்வாதிகள் கருத்தறுப்பவர்கள் என்றால் ஈழத்து போராளித்தலைவர்கள் கழுத்தறுப்பவர்கள். துரோகம், நயவஞ்சகம் இவை ஒப்பீட்டளவில் நம்மவர்களுக்கு அளவில் கொஞ்சம் குறைவே. ஈழப்போராட்ட வரலாற்றை எடுத்துப்பாருங்கள், இவன் துரோகி, அவன் நயவஞ்சகன், இப்படி அடுத்தவரை குறைசொல்லியே ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளிக்கொண்டிருப்பார்கள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், சபாரத்தினம், பத்மநாபா, மாத்தையா, நீலன் திருச்செல்வம், லக்‌ஷ்மன் கதிர்காமர் வரை பட்டியல் நீளும். கடை எண்பதுகளில் ஈழப்போராளிகள் தமிழ்நாட்டில் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, கட்டப்பஞ்சாயத்தை தமிழ்நாட்டில் மாபியத்தனமாக அறிமுகப்படுத்தியதே அவர்கள்தாம். போலிபாஸ்போர்ட்டுகளை தமிழ்நாட்டுத்தமிழர் மூலம் பெற்றுக்கொண்டு, கனடா போய் இறங்கியதும், இந்திய போலிசிற்கு போட்டுக்கொடுத்த கதைகள் கூட உண்டு. எல்லாவற்றிற்கும் இடங்கொடுத்த கலைஞர் இன்று துரோகியாக்கப்படுகிறார் என்பதுதான் அவலம். நிற்க.
ஈழத்தவர், அதுவும் ஓர் அம்மணி குற்றஞ்சொல்லுகிறார் , திமுக ஆளுமை குறை சொல்லப்படுகிறார், அதனால் குற்றஞ்சாட்டுபவர் நேர்மையானவராகத்தான் இருக்கமுடியும் என்ற ஈழமாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்.
போரின் இறுதிக்கட்டம், இந்திய உளவுத்துறையும், இலங்கை இராணுவமும் உக்கிரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றன. (உலகப்போராளிகள் வரலாற்றில், ஊரில் இருக்கும் அனைவரையும் பகைத்துக்கொண்டவர்களென்றால் அது விடுதலைப்புலிகள்தான் ) வல்லரசுகள் முடித்துவிடுங்கள் என்று சமிஞை கொடுத்துவிட்டன. ஒரே உபயம், சரணடைவதுதான். ஒருவேளை, வீரதீர சூராதி சூர, முப்படைகண்ட முப்பாட்டன் வழித்தோன்றல்கள் , கனிமொழியிடம் என்ன, யாரிடம் அறிவுரை கேட்டிருந்தாலும் , சரணடைவது ஒன்றே வழி என்று சொல்லியிருப்பார்கள். அந்த ஈழத்து அம்மணி , திமுக இளைஞர் அணி அல்லது தமிழ்க போலிஸ் படையை அனுப்பி, சரணடைந்தவர்களை மீட்டிருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார் போல.
சரணடைந்தவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டிருந்தால் அதன் முழுப்பொறுப்பு சிங்கள இராணுவத்தையே சேருமே ஒழிய, இருப்பதில் நல்ல கொள்ளியைத் தேர்ந்தெடுக்க சொன்ன தமிழ்நாட்டுத்தலைவர்களல்ல.
இறுதிப்போரின் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே புலிகள் வைகோவுடன் பேசியிருக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்துவிடும், போரை எப்படியாவது இன்னும் நடத்துங்கள் என்று முட்டாள்த்தனமாக சொல்லியிருக்கிறார். போரை வெட்டியாக கடைசி குண்டு விழும் வரை நடத்தாமல் புத்திசாலித்தனமாக முன்னரே சமாதான கொடி பிடித்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அரிவாளுடன் வீட்டு வாசலில் பெருங்கூட்டம் நிற்கும்பொழுது , சமாதானம் பேசுவதுதான் காமன்சென்ஸ்.
பருத்திவீரன் படம் பார்த்திருக்கிறீர்களா, நீ பன்ன பாவத்தை எல்லாம் என் மேலே இறக்கிவச்சுட்டானுங்க என்று ஒரு வசனம் வரும். விடுதலைப்புலிகள் 20 ஆண்டுகள் தெரிந்தோ தெரியாமலோ ஆடிய கொடூர ஆட்டங்களின் பாவம், கடைசியில் அப்பாவி சனங்களின் மேல் வந்திறங்கியது. எஞ்சியிருக்கும் புலிகளின் ஏஜெண்டுகள், தாங்கள் செய்த பாவங்களை திமுகவின் மேல் இறக்கி வைக்க முயல்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய பிரச்சினை, அவர்கள் இன்வின்சிபிள் , அசைக்கமுடியாதவர்கள் நம்பிக்கொண்டிருந்தது. தெருச்சண்டைகளில் வென்ற ரவுடிகள் , மாபியாக்களுடன் வெல்லமுடியும் என்று கற்பனைக்கோட்டை கட்டிக்கொண்டிருந்ததைப்போல. . புலம்பெயர்ந்தவர்களும், தங்களது விசாவிற்காக, புகலிடத்திற்காக, அடி குத்து வெட்டு, நீதான் கிங்கு என்று புலிகளை ஏற்றிவிட டொமினோ அடுக்குகள் பலம் தாங்காமல் சரிந்து விழுந்தன. முள்ளிவாய்க்கால் என்பது , சொல்வதற்கு எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது , புலிகள் ஆண்டாண்டு காலமாய் செய்த குட்டி குட்டித் தவறுகளின் கூட்டுத்தொகையின் சமனித்தொகை.
சில மாதங்களுக்கு முன்னர், சங்கக்காராவை முன்வைத்து, சங்கா தமிழர்களாக மாறிப்போன ஈழத்தமிழர்கள், இந்தியத்தமிழர்களை ஆபாசமாக விமர்சித்ததை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, ஒரு ஈழத்தமிழர் மணிப்பிரவாளத்தமிழில் எழுதியிருந்ததை இங்கு நற்றமிழில் தருகின்றேன். "நான் ராஜபக்சேவை மன்னித்தாலும் மன்னிப்பேன், கருணாநிதியை மன்னிக்கமாட்டேன்". இப்படி எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் துரோகி ஐடெண்டிபையிங் மூடிலேயே இருந்தால் ஈழமென்ன, முட்டுச்சந்தில் கூட ஒரு சதுர அடி வாங்க முடியாது.
காதல் மனைவி செய்த துரோகத்தை கவுரவத்திற்காக வெளியே சொல்லாத கணவனைப்போல, திமுக , ஈழப்போராளிகளின் பாவத்தை தன் தலையின் மேல் சுமந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் பழைய அறிக்கைகளை எடுத்துப்பாருங்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே புலிகளின் கொட்டமதிகமாகிவிடுகிறது என்று அவர் அறிக்கைவிடாத நாளே இல்லை. கள்ளத்தோணியாகட்டும், கலைக்குழுப்பயணமாகட்டும் அனைத்தும் திமுக ஆட்சியில் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.
திமுகவின் மேலோ திமுகவின் ஆளுமைகளின் மேலோ குற்றச்சாட்டுகளை வைக்கும் முன்னர், கீழ்வரும் கேள்விகளை நீங்கள் கேட்டுப்பாருங்கள்
1. அழிவின் தருவாயில் இருக்கும் பொழுது , கடைசி துருப்புச்சீட்டு சரணடைவதுதான். சரணடையச்சொல்லியிருந்தால் அது தவறா ? ஊரில் இருக்கும் குழந்தைப்புலிகளுக்கெல்லாம் சயனைடு கொடுத்து சாப்பிடச்சொன்ன தளபதிகள், தங்களுக்கு என்று வரும்பொழுது சயனைடு சரக்கு தீர்ந்துவிட்டதா என்ன ?
2. சகோதரயுத்தம் போடாதீர்கள் என்று சொன்னபொழுது கேட்கவில்லை. நைச்சியமாக சர்வதேசம் சொல்வதைப்பெற்றுக்கொண்டு நிலைப்பெற்று அடுத்த நிலையில் வலுப்பெறுங்கள் என்று சொன்னதை விடுதலைப்புலிகள் கேட்கவில்லை. திமுக சொன்னதையெல்லாம் கேட்காமல், மக்கள் செல்வாக்கு இல்லாத தமிழகத்தமிழர்களை நம்பிக்கொண்டிருந்தது திமுகவின் தவறா ?
3. தேர்தலைப்புறக்கணிக்க சொல்லிவிட்டு , ராஜபக்சேவிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, தன் தலையில் மண்ணைவாரி போட்டுக்கொள்ள சொன்னது திமுகவா?
4. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. பிரான்சிலும் நோர்வேயிலும் கனடாவிலும் இருக்கும் தமிழ் மாபியாக்கள் தங்களுக்கு துரோகம் இழைக்க ஆரம்பித்துவிட்டன என்பது 2001 தொடக்கம் முதலே புலித்தலைமைக்கு தெரியும். இவ்வளவு தெரிந்தும், வைகோ மாதிரி ஆட்கள் மீட்பர்களாக வருவர் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது திமுகவின் தவறா ?
5. வெறும் பத்துலட்சம் மக்களின் வன்முறை வீம்பிற்கு ஏழு கோடித்தமிழர்களின் முன்னேற்றத்தை பாழ்படுத்தவேண்டுமா?
6. குற்றஞ்சாட்டும் அம்மணி , இவ்வளவு நாட்கள் எதுவுமே பேசவில்லை?. அல்லது இப்பொழுதுதான் அம்மணியின் இலங்கை இந்திய கூட்டுஸ்தாபனத்திற்கு நிதி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதா?.
7. ஈழப்போராட்டத்தலைவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் என்றோ ஈழம் குடியரசாகியிருக்கும். அடைந்தால் தன்னால் மட்டுமே ஈழம் அடையவேண்டும் என்ற நார்சிசம் கடைசியில் நாராசமாகிப்போனது. இதற்கும் திமுகவா காரணம்.
8. துரோகங்களின் ஒட்டு மொத்த உருவமான ஈழப்போராட்டத்தலைவர்களின் எச்சங்களின் பேச்சுகளை நம்பமுடியுமா?
ஈழமாயையில் மீண்டுமொருமுறை திமுகவிற்கு வாக்களிக்காமல் போகலாம். அப்படி நினைத்து செய்ததனால் மத்தியிலும் மாநிலத்திலும் அனுபவத்திக்கொண்டிருக்கிறீர்கள். இனியும் ஈழத்தமிழர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு திமுகவின் மேல் பழிப்போட்டுக்கொண்டிருந்தால் நமக்கு நாமே குழிவெட்டிக்கொண்டு படுத்துக்கொள்ளவேண்டியதுதான். சாதிக்கௌரவ யுத்தம் நடத்திக்கொண்டிருந்த சொற்ப யாழ்ப்பாணத்தமிழர்களுக்காக ஒட்டு மொத்த தமிழ்நாட்டு சமூகநீதியையும் அதற்கான வேர்களையும் பலிகொடுக்க முடியாது.
ஈழத்தவர்கள் வேறு,.. தமிழ்நாட்டுத்தமிழர்கள் வேறு என்று பார்க்க ஆரம்பியுங்கள். தொப்புள் கொடி உறவுகளுக்கு புகலிடம் உண்டு. நமக்கென இருப்பது திராவிடக்கட்சிகள்தாம். திணித்துக்கொண்ட திமுகவெறுப்பை வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக ஈழமாயையில் உழன்று வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். ஏற்கனவே தமிழ் என்றாலே பயங்கரவாதிகள் என்று புலிகளால் தமிழர்களுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதை அழிக்கவே 7 கோடித்தமிழர்கள் இன்னும் பாடுபடவேண்டியிருக்கிறது.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாடு அமையாமல் ஈழம் அமையாது. ஒருவேளை நீங்கள் தமிழ்த்தேசியம் அமைக்கவிரும்பினால் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பியுங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் ஈழம் சிட்பண்ட்ஸ் கம்பெனிகளின் முதலாளிகளை தனித்தமிழ்நாடு பற்றி பேசச்சொல்லுங்கள்.
இதைப்படித்துவிட்டு , கலைஞர் சாவின் கருமாதிச்சோறு சாப்பிடவேண்டும் என்று விரும்பும் சிங்களத்தமிழர்களின் கவனத்திற்கு, உங்களை தமிழ்நாட்டில் அசிங்கப்படுத்துவதே , நீங்கள் பணம் கொடுத்து பால் வார்க்கும் தமிழ்த்தேசிய பாம்புகள்தான். 2009 யில் பிரபாகரனுக்கு இருந்த இமேஜ் , இன்று சீமான்போன்ற கோமாளிகளுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து உங்களுக்கு இருக்கும் ஒரே தேவை விஜய் அஜீத் சினிமாக்கள்தான். பொழுதுப்போக்கிற்காக பார்த்தோமா, படிப்பில் கவனம் செலுத்தினோமோ என்று இலங்கை தேசிய மைய நீரோட்டத்தில் இணைந்து முன்னேற பாருங்கள்.
இவ்வளவு வக்கனையாய் பேசுகிறாயே அரக்கா, என்னா டேஷுக்கு திமுக அரசாங்கம் 2009 மே மாதம், ஈழ ஆதரவு போராட்டங்களைக் கட்டுப்படுத்தியது என்ற கேள்வி எனக்கு கேட்காமலில்லை.
அதற்கான பதில், 2009 போர் சமயங்களில், தமிழகத்தில் எழுந்த அலையை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால், திமுக அரசு கலைக்கப்பட்டு இந்திய இராணுவமிறக்கபப்ட்டு இங்கு பல முள்ளிவாய்க்கால்கள் அரங்கேறியிருக்கும்.

No comments:

Post a Comment

ThirukKuRaL