தென்றல் (Thendral)

Wednesday, August 21, 2013

உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்


அடுத்தவன் உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்

தரிசன நுழைவு கட்டணம்
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
இலவச நுழைவு

அர்ச்சனை சீட்டு {கட்டணம்}

மொட்டை சீட்டு{கட்டணம்}

திருவிளக்கு பூஜை கட்டணம்

அபிஷேக கட்டணம்

இது போதாதுக்கு உண்டியல்

அதும் போதாது என தர்ச்சனை தட்டு வருமானம்

இன்னும் விலையேற்றமாம்

கடவுள் பொதுவானது என்று யாரோ சொன்னதாக
நினைவுக்கு இருக்கின்றது

பொதுவானவருக்கு வருமானம் ஏன்?


பழநி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ராமேஸ்வரம் கோதண்டராமசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் அர்ச்சனை கட்டணம் ஐந்து ரூபாய் என்பது 10ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, திருமஞ்சன அலங்காரம், முத்தங்கி சாத்துபடி என சிறப்பு பூஜைகளின் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணம் 250 ரூபாய் என்பது 500 ரூபாயாகவும், 500 ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி தேர்களை இழுப்பதற்கான குறைந்த பட்ச கட்டணம் 1,500 ரூபாய் என்பது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து அதற்கான ரசீது புத்தகங்கள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில்களுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலும் ஊழியர்கள் பயன் அடையும் வகையில், கோவில்களில் பூஜை கட்டணம் அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனை கட்டணத்தை உயர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிற கட்டணங்களை ஏரியாவுக்கு தக்கபடி கோவில் நிர்வாகமே உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதில் சில கோவில்களில், நிர்வாக காரணங்களுக்காக கட்டண உயர்வு டிசம்பர் 1 முதல் அமல் படுத்தப்படுகிறது. தற்போதைய அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயில் பூஜாரிகளுக்கு 60 பைசா வழங்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வுக்கு பின் பூஜாரிகளின் பங்கு 1.60 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு நிலை கோவில்களில் பூஜாரிகளுக்கு நான்கு ரூபாய் வரை பெறுவர்.


ஆடி வெள்ளி

ஆவணி ஞாயிறு

புரட்டாசி சனி

கார்த்திகை திங்கள்

ஐப்பசி புதன்

மார்கழி திங்கள் முழுவதும்

தை மாசி பங்குனி சித்திரை வைகாசி என
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளை
விசேஷ நாளாக வைத்து
தமிழனின் பணத்தை சுரண்டுகின்றான் பார்ப்பான்
பார்பன இந்து மதம்

மாதம் முழுக்க உழைத்து சம்பாதிக்கும் பணம்
வாரம் வாரம் ஒரு பண்டிகையை காரணம்காட்டி அவனின் உழைப்பில் வந்த பணத்தை திருடும் திருடந்தான் பார்ப்பான் பார்ப்பன இந்து மதம்


திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம்

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

முன்னேற்ற பாதையை கூட மூட நம்பிக்கையால் தமிழன் பின்பற்றுகின்றான் என்றால் அவன் சரியான வழியில் செல்லவில்லை என்றுதான் அர்த்தம்

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி விரதங்கள் எனவும்

ராகுகாலம் என்று

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை. தமிழனை முடக்கியும்

எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ…

கிழமை பகல் நேரம்இரவு நேரம்

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00


கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

மணி,
கிழமை,
தேதி,
மாதம்,
திசை

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முடியவில்லை
இதையும் தாண்டி தமிழன் முன்னேறிவருகையில்
படிப்பில் அவனுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது

தன் மானம் உள்ள தமிழர்களே சிந்தியுங்கள்
உங்கள் உழைப்பு வேறு வழியில் மதம் கடவுள் என்னும் போதையால் இன்னொருத்தவனால் சுரன்டப்படுகின்றது எச்சரிக்கை

-ஈரோட்டு பூகம்பம்-
237

No comments:

Post a Comment

ThirukKuRaL