தென்றல் (Thendral)

Sunday, August 11, 2013

கலைஞருக்கு அண்ணாவின் கனையாழி

கலைஞருக்கு அண்ணாவின் கனையாழி
----------------------------------------------------------------------
சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பாராட்டி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் "நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி. அந்த கணையாழியை வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" என்று அண்ணா கலைஞரை பாராட்டி பேசியதை கண்ணதாசன் அவர்கள் தன் "வனவாசம்" என்ற நூலில் நானும் அதில் உழைத்தேன் , எனக்கு தரவில்லை கனையாழி, முதல் நாள் கருணாநிதி வாங்கி கொடுத்த மோதிரத்தை அடுத்த நாள் போட்டு அழகு பார்த்துகொண்டனர் என்று கீழ்த்தரமாக கலைஞரையும் அண்ணாவையும் சாடியிருந்ததை உண்மை என்று வக்காலத்து வாங்கும் தோழர்களுக்கு

கலைஞரின் பரமஎதிரி கூட ஒப்புக்கொள்ளும் விசயம் 'அவரின் கடின உழைப்பு'.
சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிடேவே தயங்கிய தி.மு.கவை, அண்ணாவை சமாதானபடுத்தி கலைஞர் 90 இடங்களில் போட்டியிட வைத்தவர் . கலைஞர் அண்ணாவிடம் வெற்றியை பறித்து தருகிறேன் என சத்தியம் செய்து உழைத்த தேர்தல்.
அது தி.மு.க சந்தித்த முதல் தேர்தல்.தேர்தலில் அண்ணா முழுக்க நம்பியது கலைஞரின் உழைப்பை மட்டுமே. வாழ்வா ? சாவா ?தேர்தல் .
பெரியார் கூட எதிர்ணியில் இருக்கும் நிலை.

கலைஞரின் மூளையின் வீச்சு .சாம ,பேத ,தண்டம் அனைத்தும் உலகிற்கு உணர்த்திய தேர்தல். மாபெரும் காங்கிரஸ் இயக்கைத்தை, திமுக தேர்தலில் ஒன்றும் தேறாது என்று கருதியிருந்த அண்ணா முன்னால் 45 பேரை ஜெயிக்க வைத்து மண்ணைக்கவ்வ வைத்த கலைஞரின் அரசியல் ராஜதந்திரம் படிக்க பொறுமை போதாது.கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லும் போர்ப்படை தளபதி கலைஞர்.

கலைஞரும் அண்ணாவும் என்ன ஜெ ,சசியா ? அவரை மட்டும் சிறப்பிக்க ? கண்ணதாசன் நல்ல கவி,மனிதன், யாருக்கும் பயப்படாத நல்ல சிந்தனையாளன். ஆனால் மஹாகுடிகாரர் .அவரே ஒத்துக்கொண்டது & பெண் இல்லாமல் .......? உழைக்கவெல்லாம் மாட்டார். சுகவாசி. நான் அனுபவிக்காத போதை இல்லை உலகில் நான் அனுபவிக்காத நாட்டுப்பெண் இல்லை என சொன்ன ஒருவர் எப்படி உழைத்திருப்பார் ? எப்படி அவருக்கு கணையாழி அணிவிக்க முடியும் ? மற்றவன் எப்படி அனுமதிப்பான் ? கலைஞருக்கு அணிவித்ததை எப்படி மற்ற எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் ?கண்ணதாசன் தவிர ?யோசித்தால் புரியும்

#வனவாசம் - போதையில் எழுதப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் தொகுப்பு..!
                                                                                                                                                             nandri : surya born to win (fb)

No comments:

Post a Comment

ThirukKuRaL