தென்றல் (Thendral)

Sunday, August 11, 2013

அட, க(த)வுட்டுப் பூனைகளே!

அட, க(த)வுட்டுப் பூனைகளே!
><>><>><>><>><>><>><>><>

பார்ப்பனர்களுக்கு எப்போதும் பின்புத்தி என்பார் தந்தை பெரியார் அவர்கள். இன்றைய (8.8.2013) பூணூல் மலரான தினமலர் இன ஏடு அதனை, தான் போட்டுள்ள கேலிச் சித்திரம் - கார்ட்டூன் மூலம் நிரூபித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கை மிரட்டுவதற்காக பூனை முகமூடியை அணிந்து, கலைஞர் என்ற புலி உருவம் கொண்டவர் டெசோ ஆர்ப்பாட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் - இலங்கைக்குப் போகக் கூடாது - இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி மிரட்டு கிறாராம். அதைக் கண்டு இது பூனைதானே என்று அலட்சியம் காட்டுகிறராம் பிரதமர். நான் (கி.வீரமணி) என்ன இப்படிச் சொல்லிட்டாரே என்று கலைஞருக்குப் பின்னால் நின்று கொண்டு கூறுகிறேனாம்!

நான் எப்போதும் கலைஞருக்குப் பின்னால் இருக்கும் உடன் பிறப்பு - (இரட்டைக் குழல் துப்பாக்கி) என்பதை நாட்டோருக்கு அவ்வேடு அறிவித்துள்ளது. எனக்குப் பெருமையே தவிர, சிறுமை அல்ல.

புலி உருவத்தை கார்ட்டூனிஸ்ட் போட்டு காட்டிவிட்டு (கலைஞரை -) பூனை முகமூடியைப் போட்டுக் காட்டலாமா? புலியைப் பூனையாகப் பார்த்தால் - பார்த்தவருக்குத்தான் பார்வைக் கோளாறே தவிர, கேடே தவிர - புலிக்கல்ல என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்குக்கூட விளங்குமே! அதோடு மிரட்டுவதற்காக என்றால் பூனை உருவம் போட்டவர் வேண்டுமானால், புலி முகமூடி போடுவாரே தவிர, பூனை முகமூடியா போடுவார்கள்?

அட அதிபுத்திசாலிகளே, இந்த அடிப்படை உண்மையைக் கூடவா புரிந்து கொள்ளத் தெரியாமல் கார்ட்டூன் வரைகிறீர்கள்? எங்களிடம் அனுப்புங்கள் சொல்லிக் கொடுத்தாவது அனுப்புகிறோம்!

ஆனால் ஒன்று, டெசோ ஆர்ப்பாட்டம் உங்களைப் போன்ற பூணூல்களை வெகுவாக குடைந்துள்ளது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஏனெனில் நீங்கள் ராஜபக்சேக்களின் மூதாதையர்கள் அல்லவா? உங்கள் வம்ச பரம்பரை என்பதால்தானே ஈழத் தமிழர்கள் வாழ்வினை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்! திராவிடர்கள் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள்! எச்சரிக்கை!

- மதுரை டெசோ தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - 8.8.2013                                                                                                                                nandri : fb

No comments:

Post a Comment

ThirukKuRaL