தென்றல் (Thendral)

Tuesday, February 25, 2014

திமுகவினர் பெரிதும் கர்வப்பட்ட பேச்சு அது! மறக்க முடியுமா?

மாநாட்டு துளிகள்: பாகம் எத்தினியோ தெரியாது!

அது கடலூரில் “தானே” புயல் அடித்து ஓய்ந்த நேரம். கிட்ட தட்ட டிசம்பர், ஜனவரி மாதம். 2011/2012ல். அதுவரை இந்த அம்மையார் ஜெயா கடலுர் என்பது எங்கேயோ துபாய்ல இருக்கு, மெக்சிகோவிலே இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்த நேரம். அந்த பகுதியில் மின்சாரம் இல்லை என்பது இல்லை. அஃப்கோர்ஸ் அப்போது தமிழகம் முழுக்க மின்சாரம் என்பதே இல்லை தான் எனினும் கடலூரில் மின்சார கம்பங்கள் கூட இல்லாத நிலையை “தானே” உண்டாக்கி விட்டிருந்தது. ஆனால் இந்த அம்மையார் மும்மரமாக திமுக மீதி காவிரி பிரச்சனையில் பழி சுமத்தி கொண்டு இருந்தார். இவர் மழை பெய்யும் போது உப்பு விற்பார்! காற்றடிக்கும் போது உமி விற்பார் என்பது உலகம் அறிந்த உண்மை.

சும்மா இருப்பாரா முன்னாள் பொதுப்பணி அமைச்சர் அண்ணன் துரைமுருகன்! வெளுத்து வாங்கினார் தி இந்துவில். மன்னிக்கவும். “The Hindu" ஆங்கில பத்திரிக்கையில். ஒரு முழு பக்க கட்டுரை.முழு பக்க கட்டுரை இல்லை. ஒரு பக்கா கட்டுரை! அது வெளி வந்த தினம் ஜனவரி 4, 2012. அடுத்த நாள் தலைவர் கலைஞர் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தரை வழி பார்க்க சென்னையில் இருந்து கிளம்பி காரில் வருகின்றார். கவனிக்க! காரில்! சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், பாண்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியே திருவாரூர் தன் தொகுதிக்கும் போகின்றார். காரில்!

இதிலே மயிலாடுதுறைக்கு இரண்டு நிமிடம் மட்டுமே! ஏனனில் கடலூரில் அதிக நேரம் எடுத்து கொண்டார். அப்போது கட்சியில் கூட கொஞ்சம் சலசலப்பு. பரிதி இளம்வழுதி கட்சியை விட்டு வெளியேபோயிருந்த சமயம். (ஆனால் அப்போது அதிமுகவில் சேரவில்லை), ஆட்சியை இழந்த நேரம். ஆமாம். ஆட்சியை இழந்து ஆறுமாத காலம் தான் ஆனது! இதே ஆறு மாதம் முன்பாக இதே கலைஞர் இதே வழியே சாலை வழியே வந்த போது போலீசார் எண்ணிக்கை அதிகம். ஆனால் இன்றோ யாரும் இல்லை. அதுவே கூட திமுக தொண்டர்களுக்கு வசதியாய் இருந்தது. கிட்டத்தில் தலைவரை பார்க்கும் ஆவல். அன்று அவர் வந்து போன பின்னே நான் என் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கீழ் கண்டவாறு எழுதி இருந்தேன். படியுங்கள்!

\\ ஜனவரி 5 , 2012

முதலில் ஒரு அம்பாசிட்டர் ஹார்ன் அடித்து கொண்டே வந்தது. அடுத்து இரண்டு கார். அதிலே எல்லாம்யார் யார் இருந்தாங்கன்னு தெரியலை. அடுத்த ஒரு பொலீரோ. அதிலே எங்க மாவட்டம் (அண்ணன் ஏ கே எஸ்) வந்தது. உடனே கூட்டம் அந்த காரை மறித்து நிற்க அவர் உள்ளே இருந்து கத்தி கொண்டே "ஓரமா போங்கப்பா" என குதிக்க... அடுத்த காரில் வந்தார் கலைஞர். காரின் நம்பர் TN 27 - BD 2728.
காரில் அவர் தகதகத்தாய சூரியனாய் மின்ன, அவருக்கு பக்கத்து சீட்டில் அண்ணன் துரைமுருகன் , இவர்களுக்கு பின் சீட்டில் அண்ணன் பொன்முடி, நடுவே அண்ணன் எம் ஆர் கே பன்னீர் செல்வம், அடுத்து அண்ணன் எ. வ வேலு. அண்ணன்மார் நால்வரும் ரோஜாப்பூவாய் கசங்கி இருக்க என் தலைவனோ சுட்டெரிக்கும் சூரியனாய், அன்பொழுகும் தென்றலாய், அமைதியான ஆறாய், சீறும் அருவியாய், ஆர்பரிக்கும் கடலாய், புன்னகை முகமாய், இன்று பிறந்த குழந்தையாய், சிரிக்கும் ரோஜாவாய், வாசனையான மல்லிகையாய், அன்பு அம்மாவாய், கண்டிப்பான தகப்பனாய் .... எல்லாமுமாய் கலந்த ஒரு கலவையாய் கை அசைத்தார். யாரோ ஒரு பையன் கல்லூரி பையன் என் பக்கம் இருந்து அண்ணன் துரைமுருகனை பார்த்து "அண்ணே ஹிண்டுல கலக்கிட்டீங்க" என சொல்ல அவர் முகத்தில் அந்த களைப்பிலும் ஒரு சுகம் தெரிந்தது.

;
;
;

இதே அண்ணன் துரைமுருகன், அண்ணன் எம் ஆர் கே, அண்ணன் வேலு, அண்ணன் பொன்முடி... இவர்கள் கொடுத்து வைத்தவ்ர்கள்.... இதே போலத்தானே பரிதி இளம்வழுதியையும் வைத்து இருந்தார் தலைவர். அதை கெடுத்து கொண்டாரே பரிதி:-( இனி பரிதி நினைத்தாலும் அந்த உயரத்தை தொட இயலுமா? ஏன் மனிதர்கள் புத்தி இப்படி போகின்றது? \\

இப்படியாக அந்த கட்டுரை இருந்தது!

பரிதியை விடுங்கள். பின்னர் அவர் அதிமுகவில் போய் சேர்ந்து குனிந்து விட்டது இப்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! அவரை விடுங்கள்!

இங்கே நான் சொல்ல வந்தது அண்ணன் துரைமுருகன் அவர்களை பற்றியது!

காரின் உள்ளே அவர் இருக்கும் போது ஒரு கல்லூரி மாணவன் சொன்னானே “அண்ணே, ’இண்டு’ பத்திரிக்கையிலே கலக்கீட்டீங்க”ன்னு. அதற்கு அவர் முகம் மலர்ந்தாலும் அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் ஆட்காட்டி விரலை தன் உதட்டில் வைத்து “உஷ்ஷ்... தலைவர் இருக்காரு” என்பது போல சைகை செய்தார். கவனிக்க!

இது தான் மரியாதை! அங்கே பார்க்க வந்த கூட்டம் தலைவரை மட்டுமே. அங்கே தலைவருக்கு மட்டுமே மரியாதை கிடைக்க வேண்டும். தனக்கு இல்லை தனக்கு கூடாது என்னும் அவரது செய்கையை பாருங்கள்.

இதே துரைமுருகன் அண்ணன் இதே திமுக பத்தாவது மாநில மாநாட்டில் தனக்கென ஒரு “புட்பால் கோர்ட்” தலைவர் அமைத்து கொடுத்து “ரெஃப்ரி”யாக இருந்து பார்த்து கொண்டு இருக்கும் போது பந்து அவர் கைக்கு வரும் போது... மன்னிக்கவும் காலுக்கு வரும் போது அதை ஓங்கி அடிக்கின்றார். எங்கே??? எங்கே??? எங்கே????

பத்திரிக்கையாளர் பக்கம் ஓங்கி உதைக்கின்றார். “தம்பிகளா! கொஞ்சம் தள்ளி இருங்க. நான் பேச வேண்டியது அந்த பக்கம் தான்! “ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” என எழுதினானே ஒருத்தன்... அவன் அந்த பக்கம் இருக்கின்றானா? இருக்க மாட்டான். இத்தனை கூட்டத்தில் அவன் இல்லாவிடினும் அவன் சார்த்த பத்திரிக்கை இருக்கும் தானே, அவனிடம் கூட்டம் பற்றி சொல்லும் தானே, அழிந்து விட்ட இயக்கமாடா இது....” என சொல்லிவிட்டு ஒரு பேய் சிரிப்பு சிரித்தார் பாருங்கள்.....

எனக்கே கேட்டுக்கொண்டு இருந்த எனக்கே குலை நடுங்கி விட்டது! அதை டிவியில் காணும் அப்படி எழுதினவன் வயித்தால போயிருக்க மாட்டான் என்பது சத்தியம். அவன் சார்த்த பத்திரிக்கைகாரன் முகம் எல்லாம் அங்கே பார்க்க வேண்டுமே! ஆகா காண கண் கோடி வேண்டும்!

”ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா” என்னும் அந்த ஆர்வரிக்கும் சிரிப்பு அழிந்து விட்ட சமஸ்கிருதத்தை பெயராக கொண்டவனின் அழிவை காட்டியது! அங்கே அண்ணன் துரைமுருகன் அவர்கள் அதே சமஸ் என்பவன் பாணியில் சொல்லப்போகின் “பத்ரகாளி” அவதாரம் எடுத்தார். அதே பாணியில் சொல்லப்போகின் நடராஜரின் ஆழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ரதாண்டவம் ஆடினார். சூரபத்மனை கொன்ற முருகனின் கோபக்கனல் கொப்பளித்தார்.

இதே பெரியார் பாணியில் சொல்லப்போகின், அவ்வையார் பாணியில் சொன்னால் எங்களுக்கு ரௌத்திரம் பழக கற்றுக்கொடுத்தார்!

நினைத்துப்பார்க்கிறேன்! இதே துரைமுருகன் அண்ணன் அவர்கள் ஜனவரி 5ம் நாள் 2012ல் தலைவர் காரில் இருக்கும் போது இருந்த சாந்த சொரூபம் ஏன் இன்று இப்படி ஆகிப்போனது என என்னை நானே கேட்டுக்கொண்டு பார்க்கிறேன்!

வேறு எதும் காரணம் சிறப்பாக இல்லை. அங்கே தன்னை புகழ்வது பிடிக்கவில்லை. அல்லது தேவையில்லை என அவர் மனது சொன்னது. ஆனால் இன்று “ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” என எழுதியதை பார்த்த பின்னே புழுங்கிய மனதுக்கு தன் இயக்கத்தை இழி சொல் சொன்ன ஒருவனை தனியே அடித்தால் யாருக்கும் தெரியாமல் போய் அவன் மட்டுமே அறிவான்... அதனால் பயனில்லை... பல பேர் பார்க்கும் இடத்தில் அந்த நாயை செருப்பால் அடித்தால் இனி தன் இயக்கத்தை அடிக்க எவனுக்கும் துணிவு பிறக்காது என எண்ணியே காலம் தேர்ந்தெடுத்து 25 லட்சம் பேர் பார்க்கும் இடத்தில் சொறி நாயை செருப்பால் அடிப்பது போல அடித்தார்.

அதன் வெளிப்பாடே அந்த பேய்ச்சிரிப்பு. ஹஹ்ஹஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா....

திமுகவினர் பெரிதும் கர்வப்பட்ட பேச்சு அது! மறக்க முடியுமா?

No comments:

Post a Comment

ThirukKuRaL