தென்றல் (Thendral)

Sunday, February 9, 2014

இந்து ராசுட்ரா...

நாடெங்கும் மோடி அலை – வைகோ மகிழ்ச்சி பொங்க பெருமிதத்துடன் அறிவிப்பு:

மோடி அலை என்றால் – இந்து ராஷ்ட்ர அலை
- இந்துத்துவ அலை
-இராமன் கோயில் அலை


இந்து ராசுட்ரா: ஒரே நாடு (பாரத நாடு); ஒரே மொழி (சமசுகிருதம்/இந்தி); ஒரே பண்பாடு (இந்துப் பண்பாடு)

வாரணாசியில் கடந்த திசம்பரில் மோடி: “ நான் சோம்நாத் நிலத்திலிருந்து பாபா விசுவநாதின் (காசி விசுவநாத்) வாழ்த்தைப் பெற வந்திருக்கிறேன். இராம ராச்சியத்தை நிறுவுவதே என் குறிக்கோள். அதற்கு வாக்காளர்கள் உதவ வேண்டும். அதற்குப் பணம் தேவையில்லை. முன்னோர்கள் நமக்கு வழி வழியாக தொடர்ந்து அளித்துவரும் பண்பாட்டுக்கூறுகள் துணை நிற்கும். இதுவரையில் தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுதுவிட்டதால இராம ராச்சியக் கனவு நிறைவேறவில்லை”

சனாதன தருமத்தை வலியுறுத்தும் ச்ருதி-ச்ம்ருதிகளை அடித்தளமாகக் கொண்ட அமைக்கப்படும் இராம இராச்சியத்தில் சமற்கிருதத்தை/இந்திய நாட்டு மொழியாக்கி, இந்துப் பண்பாட்டைப் பாதுகாத்தால் இந்திய மக்களுக்குள்ள சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பும் மோடியின் அலையில் வைகோ சிக்கிஉள்ளார்.
நரேந்திர மோடியை தலைமை அமைச்சருக்குரியராக, பாரதீய சனதா விரும்பி, ஆர்.எஸ்.ஸின் ஏற்பை நாடிய போது அவர்கள் விதித்த அக்குத்துகளின்படி (நிபந்தனைகள்),
1.அயோத்தியில் இராமன் கோயில் கட்ட உறுதி எடுக்கச் செய்யப்பட்டார்.
2. இந்திய முழுமைக்கும் ஒரே வகையான குடிமைச்சட்டம் (Uniform Civil Code) கொண்டுவர உறுதி கூற வலியுறுத்தப்பட்டார்.
3. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், ஜம்மு - கசுமீரத்திற்கு சிறப்பு நிலை வழங்கும் பிரிவு 370 அய்த் திருத்திட அவர் முனைந்திட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
4. ஆக்களின் (பசு மாடு) பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைந்திட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
இதற்குப் பிறகே அவரை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டது. (India TV reporter/PTI 10 Sep 2013)
பாரதீய சனதா தலைவர்கள், இந்துத்துவாவும் இந்து ராசுட்ராவும் இராமன் கோயிலும் தங்கள் கட்சியின் வேலைத் திட்டத்தில் அடங்கியன்வே என்று அவ்வப்போது கூறிவருகின்றனர்.

சேது சமுத்திரத் திட்டத்தின் மூலவரே தான்தான் என்று இதுவரையில் முழங்கி வந்த வைகோ, அத்திட்டத்தால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏர்படுமாயின் அதனை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இப்படியே போனால்…….
தமிழீழத்தை மோடி அரசு அமைத்திடும் என்று நம்பும் வைகோ, அந்த நம்பிக்கைக்கு உறுதி அளிக்கப்பட்டால்,

அலுவல் மொழியாக உள்ள இந்தி தேசிய மொழி ஆக்கப்பட்டால் இந்தியாவின் இறையாண்மை காக்கப்படும் என்றால் அதனையும் மீளாய்வு செய்திடலாம் என்றும்,

அயோத்தியில் இராமன் கோயில் காட்டப்படுவதால் னாட்டுக்கு நன்மை என்றால் அதனையும் மீளாய்வு செய்திட்லாம் என்றும்

சமச்சீர் குடிமை உரிமைச் சட்டத்தாலும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 திருத்தப்படுவதாலும் – இட ஒதுக்கீட்டினால் தகுதி திறமைக்குக் குறை வந்திடும் என்றாலும் - இவற்றையும் மிளாய்வு செய்திடலாம் என்றும்

இந்துராஷ்ட்ராவில் இந்துக்களுக்கு மட்டுமே இடம் என்று கோல்வாக்கர் முதலானோர் வலியுறுத்தியதையும் ஏற்க இயலுமா என்பதையும் மீளாய்வு செய்திடலாம் என்றும் கூறுவாரோ!!??

ஈழத் தமிழர் நல்வாழ்விலும் உரிமையிலும் நாம் அனைவருமே கவலை கொண்டவர்கள்தாம். ஆனால், அதற்காகச் சொந்தத் தமிழர்களை இந்து ராசுட்ராவுக்கும், இந்துத்துவாவுக்கும் அடகு வைத்திஒட வேண்டுமா என்பது நம் கவலை. தமிழர்களைக் கொன்று குவித்த இராச்பக்சே குற்றவாளி என்றால் மோடியை எந்தப் பட்டியலில் சேர்ப்பது. சென்னைக் கூட்டத்தில் ஈழத் தமிழர்கல் குரித்தும் தமிழ்ழிழம் குறித்தும் ஏதேனும் உறுதிமொழியை மோடி அளித்தாரா?

No comments:

Post a Comment

ThirukKuRaL