தென்றல் (Thendral)

Saturday, February 1, 2014

நாங்க கிழிச்சிருக்கோம் சார்!

Narain Rajagopalan's photo.
குஜராத் - மின்சார விநியோகம் & அவிழும் புளூகு மூட்டைகள் ============================================== டேட்டா தானே கேட்டீங்க. இந்தாங்க. மூல ஆதாரத்துக்கு NSSO தளத்தைப் போய் மேயுங்க. நல்லா நாலு கிராப் போட்டு இருக்கேன். பொறுமையா ஸ்க்ரோல் பண்ணி அப்புறம் திட்டுங்க. The Housing data of the Census points out that there are over 11 Lakh (அதாவது 11,00,000 வீடுகள்) residences that do not use ELECTRICITY in a state that has a Power Generation capacity of 14,000 MW and claims to have 2,000 MW of Surplus Power. Of this 15% are in Urban areas. Of these 11 Lakh homes, a significant nine Lakh (அதாவது 9,00,000 வீடுகள்) homes are in rural areas where the Government claims to have finished implementing the Jyotigram Yojana (Rural Electrification Program) 11,00,000 வீடுகள்ல மின்சாரமில்லைங்கறதை எப்படி ஜஸ்டிஃபை பண்ணுவீங்க. அதெல்லாம் சென்சஸ்ல தப்பா கணக்குப் போட்டு மகாராஷ்ட்ரா ஊருங்களையெல்லாம், குஜராத்தோட சேர்த்துட்டாங்களா ? இல்லை இவங்களை நீங்க குஜராத்லயே சேர்க்க மாட்டீங்களா ? 18,000 கிராமத்துல பகல்ல கூட பல்பெல்லாம் பிரகாசமா எரியுது சொல்லிட்டு இப்படி ‘பல்பு’ வாங்கலாமா ? ஆக 100% + 24 x 7 மின்சாரம்ங்கற நீங்க சோத்துல மறைக்கிற பூசணிக்காயோட தலை நல்லாவே தெரியுது. இந்த பப்பு இனிமேல் வேகாது. போய் வேற ஏதாவது “சூப்பர் மேன் சாகசம்” கொண்டு வந்து பேசுங்க. கொண்டு வந்தா, டேட்டா வைச்சு அதையும் உடைப்பேன். போதுமா ? என்ன சொன்னீங்க, திராவிட இயக்கம் என்னத்த சரைச்சு கிழிச்சுதுன்னா ? வாய் கிழிஞ்சதில்லை, இதை தான் நாங்க கிழிச்சிருக்கோம் சார்! எந்த கிராப்லயும் நாங்க கீழே இல்லை. எல்லாத்துலயும் மேல இருக்கிறோம். மக்களுக்கான அரசா 45 வருடங்கள் இருந்திருக்கு. இன்னும் 50 வருஷம் இருப்போம். எந்த தேசிய கட்சி பு.ம-னாலயும் ஒண்ணுத்தையும் இங்க புடுங்க முடியாது. தேசியம்ன்னு பேசிட்டு ஒருத்தனும் உள்ளே நிக்க முடியாது. வாங்க, முட்டிப் போட்டு நின்னு மன்றாடுங்க. திமுகவோ / அதிமுகவோ பிச்சை எடுங்க. அப்படி தான் இங்க தேசிய கட்சிகளால ஒண்டிப் பொழைக்க முடியும். மோடி அலை தான் அலையோ அலைன்னு வீசுதே, தமிழகத்துல தனியா நின்னு ஜெயிங்களேன்ய்யா! பத்து வருஷம் 3 தடவை ஜெயிச்ச உங்களுக்கே இந்த அதுப்புன்னா, 45 வருஷமா இந்த மாநிலத்தை கட்டிப் போட்டு ஆள்றமே எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ? தோக்லா சாப்பிட்டே இத்தனை தெனாவெட்டுன்னா, போட்டியும், பாயாவும் இறக்கிற எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ? பத்தாயிரம் பேரு வெளியில பட்டினியோட இருக்கும்போது மண்டபத்துக்குள்ள பத்து பேரு வயிறார சாப்பிட்டு, இந்த ஊர்ல பஞ்சமே இல்லை, என்னமா கவனிக்கிறாங்கன்னு சொன்னா அதுக்கு பேரு திருப்தியில்லை. அது அந்த ஊர்ல ஏதோ ஒருத்தர் வள்ளலா இருக்கிறார்ன்னு அர்த்தமில்லை. இதுக்கு எங்க ஊர்ல பேரு அயோக்கியத்தனம். அராஜகம். அதிகார மமதை. இதை தான் ஒட்டுமொத்தமா நானும், மோடிக்கு எதிரான என்னுடைய நண்பர்களும் முழுமையா நிராகரிக்கிறோம்.

No comments:

Post a Comment

ThirukKuRaL