தென்றல் (Thendral)

Saturday, February 1, 2014

Nothing sells in Tamilnadu like 'kalaignar' does!!!

Don Ashok.

 கேள்வி:
10 பத்திரிக்கை வாங்கினேன். 11பத்திரிக்கையில் கலைஞரின் முகம் தான் முகப்பில் இருக்கிறது? அட.. அதைக்கூட விடுங்கள். விகடன் குழுமத்தில் இருந்து வரும் அஜால் குஜால் பத்திரிக்கையான டைம்பாஸில் கூட கலைஞரைப் பற்றி இரண்டு பக்கமாவது எழுதுகிறார்களே, ஏன் இப்படி? தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லையா? 

பதில்: 
இதற்கு கொஞ்சம் விரிவாய் பதில் அளிக்க ஆசை. கலைஞர், இந்திய அரசியலின் தமிழக சூப்பர் ஸ்டார். அவர் பெயரைப் போட்டால் தான் பத்திரிக்கையானாலும், இணையதளமானாலும், செய்தியானாலும் விற்கும். தமிழக அரசியலைப் பொறுத்தவரை இரண்டே வகை அரசியல்கள் தான். புள்ளிவிவரங்கள், வரலாற்று ஆவணங்கள், செய்தித்தாள் சேகரிப்புகள் என ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைத்து கலைஞர் நடத்தும் ஆக்கபூர்வ அரசியல். மற்றொன்று மற்ற கட்சிகள் எல்லாம் இணைந்தும் இணையாமலும் நடத்தும் ஆதாரங்களற்ற 'கலைஞர் தூற்று' அரசியல். மக்களும் கூட இங்கே ரெண்டே வகைதான். கலைஞரைப் பிடித்து அவருக்கு ஓட்டு போடுகிறவர்கள் மற்றும் கலைஞரைப் பிடிக்காமல் மற்றவர்களுக்கு ஓட்டுப் போடுகிறவர்கள். 1977ல் கலைஞரைத் தோற்கடித்தார்கள். குறிபிடத்தக்க எந்த வளர்ச்சியுமே இல்லாத 13வருட சினிமா ஆட்சியை மக்கள் அனுபவித்தார்கள். மக்களுக்கு இலவச பல்பொடியும், செருப்பும் மட்டும் கண்ணில் தெரிந்தது. 1991 தேர்தலில் திமுக அடைந்த தோல்வி தமிழர்களின் ஈழ நிலைப்பாட்டிற்கு அவர்களே வைத்துக் கொண்ட கொள்ளி. ஈழ விஷயத்தில் தொட்டும்-விட்டும் திமுக இருக்கத் தொடங்கியது இதன் பின்னர் தான். ஜெயலலிதா முழுமூச்சாக ஈழவிரோதமாக நடக்கத் தொடங்கியதும் மக்கள் 1991ல் அவருக்குக் கொடுத்த தெம்பில் தான். 2001 தேர்தலில் கலைஞரின் தோல்வி தேர்தலில் ஜெயிக்க கூட்டணி தான் தேவை என்ற கருத்தை ஆழப் பதிய வைத்த தோல்வி. இதற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, கூட்டணி விஷயத்தில் கறாராக இருந்ததை கவனிக்கலாம். இதோ 2011ல் தோற்கடித்தார்கள் தமிழக நலப்பணிகள் அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது. முதல்வரோ கொடநாட்டில் கிடப்பில் கிடக்கிறார். கலைஞரின் ஒவ்வொரு தேர்தல் தோல்வியிலும் தமிழக மக்களுக்கும் கொஞ்சம் தோல்வி ஒட்டிக்கொண்டிருக்கும். வரிசையாக தோல்வி கண்டு 13 வருடங்கள் எதிர்கட்சி வரிசையில் வேறு எவரேனும் அமர்ந்திருந்தால் சோர்ந்து போய் ஓரமாய்ப் போயிருப்பார். ஆனால் விடாமல் தன் இருப்பைக் காண்பித்துக் கொண்டே இருந்தவர் கலைஞர். இன்னும் 30வருடங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே அமரச் செய்திருந்தாலும் சளைக்காமல் அரசியல் செய்திருப்பார். அவருக்கு இன்பமென்பது அரசியலில் தேர்தல் வெற்றி அல்ல, அரசியலில் பங்குபெறுதல் தான்! அதுமட்டுமல்லாமல் அடுத்தவனைக் குறை சொல்லி பிழைப்பு நடத்தும் செயலை ஒருபோதும் செய்யாதவர் கலைஞர். ஆட்சிக்கு வந்தால், தன்னை நம்பித்தான் மக்கள் ஆட்சி அதிகாரத்தை அளித்திருக்கிறார்கள், முந்தைய ஆட்சியையோ, மத்திய அரசையோ குறை சொல்வது நேர்மையுமில்லை, நியாயமுமில்லை என்பதை உணர்ந்தவர். ஆட்சியில் இருக்கும் ஐந்தாண்டுகளும் அடுத்தவர்களைக் கை காட்டியே பிழைப்பை ஓட்டும் ஈனச் செயலை ஒருபோதும் செய்யாதவர். எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தின் 75 ஆண்டு கால வரலாற்றுச் சக்கரத்தின் அச்சாணி கலைஞர் மு.கருணாநிதி. உலகின் எந்த மூலையிலும் நடக்காத அநியாயமாய், கொடநாட்டிலேயே இருக்கும் முதல்வர் நமக்கு இருந்தாலும், எதிர்கட்சித் தலைவராகக் கூட இல்லாத கலைஞர் ஏன் எல்லாப் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திலும் இருக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். Nothing sells in Tamilnadu like 'kalaignar' does!!!

No comments:

Post a Comment

ThirukKuRaL