தென்றல் (Thendral)

Saturday, February 1, 2014

பகற்கொள்ளைக்காரன்!.......

இயேசு அழைக்கிறார் டி.ஜி.எஸ். தினகரன் குடும்பத்தார் மோசடி .... புத்தகம் -

 இயேசு அழைக்கிறார் ஆசிரியர் - நாத்திகம் இராமசாமி ----------------------- பக் 8

இந்த நாட்டின் சமூகக் கொடுமையால் வயிறு காய்ந்த, தலைகாய்ந்த மக்களைப் படம் பிடித்துக் கொண்டு , வெளி நாட்டிலே காட்டி "இந்தப் பிச்சைக்கார மக்களுக்கு உதவுங்கள் " என்று கேட்டு. லட்சம் லட்சமாக வாங்கி , வாங்கி பணத்தை கொண்டுவந்து , மாடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்கிற இவர்களையா இயேசு அழைப்பார்?... பக் 22 உலகத்தில் பல லட்சம் பேர் இவரால் நோய் நீங்கி சுகவாழ்வு வாழ்கிறார்கள் என்றால், இவர் ஏன் தனக்கு " கிட்னி ஆப்ரேஷன்" செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார்? பக் 34 அப்படிப்பட்ட நீர், உமது அற்புத சுகமளிக்கும் ஜெபத்தை செய்து கொண்டு, பொதுமேடையில் மின்சாரக் கம்பியைத் தொடுவதற்குச் சம்மதிக்கிறீரா? உமது ஜெபத்தால் குருடன் விழிப்பான் , ஊமை பேசுவான் என்றால் , உமது ஜெபத்தால் மின்சக்தியும் கட்டுப்படும் தானே ? மின்சாரகம்பியைப் பொது மேடையில் தொட்டு உமது சரீர , ஆத்மீக அற்புதத்தைக் காட்டினால் உம்மைக் கர்த்தரின் சக்தி படைத்தவர் என்று ஒப்பலாம் ! பக் 37 சகோதரன் தினகரனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அதற்காக 1985-ல் அமெரிக்கா போய் கிட்னி ஆபரேஷன் செய்து கொண்டார் என்று செய்தி வெளியாயிற்று. ஆனால் , தினகரனோ அப்படி எந்த நோயும் தனக்கு இல்லை என்றும், ஆப்ரேஷன் எதுவும் நடக்கவில்லை என்றும் மேடைக்கு மேடை மறுப்புச் சொல்லி வந்தார். ஆனால் , 21-5-1986 அவர் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பயங்கர கார் விபத்து போது தினகரனின் மகன் பால் தினகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டியின் போது - "என் தந்தை சென்ற ஆண்டு கிட்னி ஆப்ரேஷன் செய்து கொண்டார்" என்று உண்மையைச் சொல்லிவிட்டார். "எல்லாருக்கும் நோய் போகஜெபிக்கும் தினகரனுக்கே மகப் பெரிய நோய் ஏன் வந்தது ? " - என்று மக்கள் கேட்டு விடக் கூடாதே என்ற பயத்தில் தான், தினகரன் தனது நோயை பற்றி பொய் சொல்லி வந்திருக்கிறார். பக் 89 வங்கிப் பணியை உதறிவிட்டு "இயேசு அழைக்கிறார்" கூட்டங்களில் கோடீசுவரரான டி.ஜி.எஸ்.தினகரன், 1962-இல் இயேசுவை 3 மணி நேரம் கண்டாராம் ! 1981-இல் ஒரு தேவதூதன் காருண்யா பல்கலைக்கழகத்தின் வரைபடத்தைக் கொடுத்தானாம் ! ஒரு லட்சம் பேர் கூடுகின்ற நற்செய்திக் கூட்டங்களுக்குத்தான் தினகரன் போவாராம் ! அங்கே இவரது ஒலி-ஒளிப் பேழைகள் மட்டும் விற்கப்படுமாம் ! தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பதற்கு 1000 ரூபாய் கட்டணமாம். மனைவி, மகன், மருமகள், பேரன் - பேத்தி அனைவரும் பெண்கள், வாலிபர், சிறார் கூட்டங்களை நடத்த, பத்திரிக்கை, தொலைக்காட்சி, பல்கலை, ட்ரஸ்ட் என்று பன்னாட்டு நிறுவனமாய்ச் சுரண்டி நிற்கும் பகற்கொள்ளைக்காரன் டி.ஜி.எஸ். தினகரனைத் தோலுரிக்கிறார் நாத்திகம் இராமசாமி

No comments:

Post a Comment

ThirukKuRaL