தென்றல் (Thendral)

Thursday, February 13, 2014

பிரகாஷ்ராஜ்....vs.....ஆனந்தவிகடன/25.9.2013

கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.

சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?

விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013

தகவல்: சிவகாசி மணியம்

கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை கண்டிப்பாக விமர்சிக்கப்படவேண்டியதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்திரையடியுடன் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும்பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.

இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.

இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.

ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?

தஸ்லிமா நஸ்ரீனின் நாத்திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்ததும் சரியானதே!

அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!

இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாதவர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண்டியுள்ளது.
இந்து மத வினா தொடுப்பாளர்களைப் பார்த்து இன்னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.

இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவையற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.

இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?

சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?

பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?

இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன்

No comments:

Post a Comment

ThirukKuRaL