தென்றல் (Thendral)

Friday, January 3, 2014

தமிழர்கள் இந்துக்கள் அல்லர்

 2,121 like this
15 hours ago · 
  • தமிழர்கள் இந்துக்கள் அல்லர்

    தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொன்னதன் காரணத்தையும், நான் ஒரு தமிழனாக இருப்பதால், இந்துவாக இருக்க முடியாது என்பதையும் விளக்க வேண்டிய ஒரு கட்டாயம் எனக்கு இருக்கிறது.

    என்னுடைய முந்தைய பதிவில் “தமிழர்கள் இந்துக்கள் அல்லர்” என்று கடுமையாகச் சாட வேண்டிய நிலை எனக்கு புதிதாக ஒன்றும் ஏற்படவில்லை. தெளிவான சிந்தனைகளின், கருத்தாக்கங்களின் மூலம் தான் இத்தகைய ஒரு நிலையைக் கையாள வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

    நான் இப்படிச் சொல்வதற்கான அடிப்படைக் காரணங்கள்:

    1) இந்து மதம் என்கிற கோட்பாடு மனிதர்களை முதலில் ஒன்றாகக் கருதுவதில்லை, விலங்கினும் கீழான நிலையில் தனது சமூகத்தில் வாழும் மற்றொரு மனிதனை அடிமைப் படுத்துகிறது. பல்வேறு வேதங்களில், இந்துக்களின் புனித நூட்கலாகக் கருதப்படும் பல்வேறு புராண காப்பியங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்பதை உறுதி செய்து, அவற்றின் கடுமையான சமூக ஏற்ற தாழ்வுகளை இன்றைய புரையோடிப் போன சாதீய இழிவுகளை உள்ளடைக்கி இருக்கிறது.

    2) தமிழர்களின் அடிப்படைக் குணமான மனிதநேயம், மற்றும் சமநீதி என்கிற கருத்துக்களில் இருந்து விலகி, அவர்களை ஒரு போலியான கற்பிதம் செய்யப்பட்ட வாழ்க்கை முறைகளை நோக்கித் தள்ளிய கோட்பாடு தான் ” இந்துமதம்” என்கிற கோட்பாடு, இன்றைய இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கும், ஆதித் தமிழர்களின் வழிபாட்டு முறைகளுக்கும் இன்றளவும் துளியும் தொடர்பு இல்லை என்பது தமிழகத்தின் பல்வேறு ஊரகப் பகுதிகளுக்குச் சென்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    3) மனிதர்களின் அடிப்படை உரிமையும், வாழ்வியல் முறைகளின் மூலமுமான தாய் மொழியின் சிறப்பை இழிவு படுத்துவது மட்டுமன்றி, தாய் மொழியின் சிறப்பை தகர்க்க முனைகிறது.கடவுளின் மொழி சமஸ்க்ருதம் தான் என்கிற ஒரு மாயத் தோற்றத்தைக் கற்பித்து மக்களை இன்னொரு மொழியின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் தாய் மொழியின் இன்றியமையாமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

    4) இயற்கை வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டு, மத உணர்வுகளற்ற, வேற்று மத நம்பிக்கைகளை சிதைக்காத ஒரு சீரிய கலாசார வழிபாட்டு முறையான ” பொங்கல்” போன்ற நன்றி செலுத்தும் விழாக்களை விடுத்து, சிலை வழிபாட்டு முறைகளை ஆதரித்து வீதிகளில் இறங்கி வன்மம் பரப்பும் விழாக்களை நோக்கித் தள்ளியது.

    5) பெண்ணடிமைத் தனத்தைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கி இன்றளவும், பெண்களை இழிந்த நிலையில் வைப்பது மட்டுமன்றி, ஆலயங்களுக்குள் பெண்கள் வரக்கூடாது போன்ற கீழ்த்தரமான வரம்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    இன்றைக்கு, இந்த சனாதான தர்மத்தின் விளைவாகப் பெரும் பயனடைந்தவர்கள் யார் என்று நோக்கினால், அதற்கான விடை, எந்த விதமான ஐயமும் இன்றி “பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதியினர்” என்கிற பதிலையே நமக்குக் கொடுக்கும். இந்துமத தர்மங்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக எம்மக்களை அடிமைகளாக வைத்தது மட்டுமன்றி, இன்றளவும், தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் தங்கள் கொடும் கரங்களைக் கொண்டு உழைக்கும் மக்களை அவர்களின் வாழ்வியல் உரிமைகளை, கலாசார வெளிப்பாடுகளை, கலை வடிவங்களை இழிவு படுத்தியே வந்திருக்கிறது, வருகிறது.

    இந்த அடிப்படை முகாந்திரங்களை தகர்க்கச் சொன்னால், இவைகளைக் களைய முனைய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், அது மிகப் பெரிய குற்றமாகத் தெரிகிறது, சமூக அவலங்களை உள்ளடக்கி இருக்கும், இந்து மதம் என்கிற குப்பைக்கு நெருப்பு வைக்கச் சொன்னால், இஸ்லாமியரைத் தமிழில் வழிபடச் சொல், என்றும், கிறிஸ்துவரை மத மாற்றம் செய்யச் சொல்லாதே என்றும் கூப்பாடு போடுகிறார்கள்.

    மதத்தின் உள்ளடக்கமான, மதத்தின் சார்புப் பொருளான சாதீயம் மற்றும் அதன் கட்டமைப்புகளைத் தகர்க்கும் பொருளாதாரம், கல்வி, சமூக நீதி இவற்றை முன்னெடுக்கும் “இட ஒதுக்கீடு” போன்ற தொலை நோக்குத் திட்டங்களை இன்று பல்வேறு தளங்களில் எதிர்ப்பது பார்ப்பனர்களும், ஆதிக்க சாதியினரும் தான். ஊடகங்களில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன நண்பர்கள், தங்கள் புரட்டு வேலைகளின் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைபாட்டை மக்கள் கொள்வதற்கு உதவுகிறார்கள், அல்லது முன்னெடுக்கிறார்கள்.

    9இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட, தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்க் கலைகளை, மொழியின் பயன்பாடுகளை பொதுவாக்க வேண்டும் என்று நான் சொல்கின்ற போது, தமிழரின் கனவுத் திட்டமான சேது சமுத்திரம் போன்ற திட்டங்களை முன்னெடுக்கின்ற போது, பல்வேறு இணையத் தளங்களின், இணைய விவாத தளங்களில் கடுமையாக இவற்றை எதிர்ப்பதும், தமிழை வழிபாட்டு மொழியாக்கச் சொல்வது ஏதோ மிகப் பெரிய குற்றம் போலவும் சித்தரிக்க முனைகிறவர்கள் யார்? அவர்களை வேண்டுமானால் உங்களுக்கு அடையாளம் காட்டவா? உறுதி செய்யவா? அவர்களின் பெயர்களையும், அவர்களின் எதிர்ப்பையும் பட்டியல் இடவா?

    உங்களை இணையத்தில் பார்ப்பனத் தினவெடுத்தவன் என்று சொன்னதற்கே வானுக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்கிறீர்களே?

    எங்களை காலம் காலமாக, அடிமைகள் என்றும், பறையர்கள் என்றும், பள்ளர்கள் என்றும், புலையர்கள் என்றும், சக்கிலியர்கள் என்றும் வீதிகளில் உரக்கச் சொன்னீர்களே….

    ஆண்டான் அடிமையாக, காலணிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, மானத்தை மறைக்கும் உடைகளைக் களைந்து அவற்றை இடுப்பில் சுற்ற வைத்தீர்களே….

    உங்கள் பாழும் மதம் கற்றுக் கொடுத்த சாதிக் குறியீடுகளை வைத்துக் கொண்டு எங்களை மலம் தின்ன வைத்தீர்களே……

    உங்கள் மதங்கள் கற்றுக் கொடுத்த சாதிக் கலவைகளால், சீனப் பெருஞ்சுவராய், ஈனப் பெருஞ்சுவர் வைத்து எங்களை கூனிக் குறுகச் செய்தீர்களே……

    இது எங்களுக்கான நேரம் நண்பர்களே, வலியைக் கொஞ்சம் உணர்ந்து தான் பாருங்களேன்.

    "மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
    https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL