தென்றல் (Thendral)

Friday, January 3, 2014

மனுதர்மத்தை சட்ட புத்தகமாக ஏற்றுக்கொள்ள தயாரா ?

மனுதர்மத்தை சட்ட புத்தகமாக ஏற்றுக்கொள்ள தயாரா ?
 ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழ் மரத்தியே மனுதர்மத்தை சட்ட புத்தகமாக ஏற்றுக்கொள்ள தயாரா ?

1. பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக் குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும. விதி (148-_5)

2. கன்னித்தன்மை இழந்த பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் (விதி 226-_8). இதனால்தான் மத்தியப் பிரதேசத்தில் அரசு நடத்திய இலவச திருமணங்களில் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளானார்கள். மத்திய அரசில் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டால் கன்னித்தன்மை சோத னைகள் நடைமுறைக்கு வர வாய்ப் புள்ளது.

3. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணைக் காட்டி பெண்ணின் தந்தை அடுத்த பெண்ணை மண முடித்து வைத்தால் இரு பெண்களுமே ஒருவனுக்கு மனைவியாக வேண்டும். விதி (204-_8). இந்த விதி பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துகின்றது

4. மாதவிலக்கின் போது ஒரு பெண் உணவு பரிமாறக் கூடாது. விதி 208_-4

5. ஒரு கணவன் தனது மனைவி மலடியாக இருந்தாலோ அல்லது ஆண்வாரிசை பெற்றுத் தரவில்லை என்றாலோ அந்த மனைவியை குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கலாம். விதி (81-_9). இந்தப் பழக்கம் இந்தியாவில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த விதியில் தசரதன் மற்றும் பாண்டவர்களின தந்தை என்று சொல்லப்பட்ட பாண்டு போன்ற ஆண் மலடர்கள் பற்றி எதுவும் கூற வில்லை. ஆண்வாரிசு வேண்டுமென் றால் தசரதன் போல் யாகம் செய்து கொள்ளலாம்

6. ஒரு அரசன் முக்கிய ஆலோ சனையின் போது பெண்களையும், மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்கக் கூடாது.

7. ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டுள்ளாள் விதி (213-_2)

8. கீழ்க்கண்ட பெண்களைத் திரு மணம் செய்துக் கொள்ளக்கூடாது--.- நதி, நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், நாகம், பறவைகள் ஆகியவற்றின் பெயர் கொண்டப் பெண்கள் விதி(9-3).

9. ஒரு பெண் தன்னுடைய வீட்டில் ஒரு ஆணின் அனுமதியின்றி எந்த வேலையும்செய்யக் கூடாது. (147-_5).

10. பெண், தன் கணவன் --வக்கிர குணம் பெருநோய், மோசமான நடத்தை ஆகியவற்றைக் கொண்டி ருந்தாலும் அவனை வணங்க வேண்டும் விதி (154-_5).

11. ஒரு பெண்ணுக்கு எந்தவித மதச் சடங்கும் செய்ய தெய்வத்தின் அனுமதி இல்லை விதி (158_--5)

12. ஒரு பெண் தன் கணவன் இறந்த பின் இன்னொரு ஆணின் பெயரை சொல்லக்கூடாது விதி (157-_5).

13. கணவனைப் பணியாதப் பெண், குஷ்ட ரோகியாக மாறுவாள். இறப் பிற்குப்பின் நரியாக மாறுவாள் (164-_5).

14. ஒரு விதவை வெள்ளை உடை அணிந்து கொண்டு, தன் கணவனின் தம்பி (தேவர்)யுடன் மட்டும் உடல் உறவு கொண்டு கருத்தரிக்க அனுமதிக் கப்படுகிறாள். விதி (70_-9).

15. ஒரு பெண் பலவீனமான உடல் அமைப்பு கொண்டிருப்பதாலும் மற்றும் வேதங்களைப் படிக்காததி-னாலும் பெண்கள் சுத்தமற்றவளாகக் (impure) கருதப்படுவதாலும் தவறுகளைச் செய்யக் கூடியவளாக (falsehood) இருப்பதாலும்,தன் குழந்தைகளின் பெயர் சூட்டுதல், மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளில் ஈடுபடத் தகுதியற்றவள் விதி (18-_9)

16. ஒரு பெண் தற்பெருமை கொண்டு, தன் கணவனுக்கு அடங்காத பெண்ணின்மீது அரசன் நாயை ஏவ வேண்டும், பொது இடத்தில் விதி (371-_8)

17. ஒரு பெண் தன் கன்னித் தன்மையை இழக்க நேர்ந்தால் அவள் தலை மொட்டை அடிக்கப்பட்டு, இரு விரல்கள் வெட்டப்பட்டு, கழுதை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவாள். விதி (370_-8).

18. ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளவோ, அல்லது வேறுவகையில் உடல் உறவு கொள்ளவோ புனித நூல்களில் சொல்லப்படவில்லை. விதி (65-_9).

19. ஒரு பெண் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுத்தால் தந்தை வீட்டிலிருந்து ஆடை அணிகலன்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. விதி (92_-9).

பெண்களை இழிவுபடுத்துவதாலும், ஆண் வாரிசு பெற்றுத் தராத மனை விக்குக் கொடுமை இழைப்பதாலும், மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் மனுசாஸ்திரத்தை அரசுகள் தடை செய்ய வேண்டும், மனுதர்மம் ஆண் வாரிசைப் பெற்று தராத பெண்ணை கணவன் விலக்கி வைக்கலாம் என்று சொல்வதால் மனுதர்மத்தை நீதி நூலாகக் கருதக்கூடாது.

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL