தென்றல் (Thendral)

Friday, January 31, 2014

‘வேகம், வெறி!


சாக்ரடீஸிடம் ஒருவர் வந்தார். ‘வேகம், வெறி என்கிறார்களே, அது எங்கே கிடைக்கும்..?’ என்றார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த சாக்ரடீஸ், ஆத்தங்கரையில் கிடைக்கும். அங்கே வா!’ என்றார்.ஆற்று தண்ணீருக்குள் இருவரும் இறங்கினார்கள். இடுப்பளவு, மார்பளவு தண்ணீரின் அளவு ஏற... ‘மூச்சைப் பிடித்து உள்ளே மூழ்கி, தம் கட்டு! தெரியும்’ என்றார். ‘இது என்ன பெரிய வித்தை...’ என்று அந்த மனிதர் தண்ணீருக்குள் மூழ்க.... 15 செகண்ட் நேரம் கொடுத்த சாக்ரடீஸ், திடுமென, அவரது கழுத்தைப் பிடித்து, தண்ணீருக்குள் இருந்து எழ முடியாதபடி அழுத்தினார். அந்த நபர் ‘இதுவும் டிரீட்மென்ட்டே!’ என்பது போல் மூச்சுப் பிடித்து நின்றார். 30 செகண்ட், 45 செகண்ட்... அந்த நபரால் அதற்கு மேல் தம் கட்ட முடியவில்லை. நிமிர விரும்பினால், இரும்புப் பிடியாக சாக்ரடீஸின் கைகள் அழுத்திக்கொண்டிருந்தன.‘ஐயோ.... பதில் தெரியாத கேள்வி கேட்டதற்காக இந்த நபர் நம்மைக் கொல்லப் பார்க்கிறார்!’ என்று திமிறினார். சாக்ரடீஸ் முகத்தில் புன்னகையும் விரல்களில் கடுமையாக அவரை அழுத்திக்கொண்டேஇருந்தார். பெரிய போராட்டம்.... ஒரு கட்டத்தில், தன் வலு முழுவதையும் சேர்த்து சாக்ரடீஸைத் தாக்கி, அவரைத் தடுமாறவைத்து நீருக்கு மேலே வந்த அந்த நபரிடம் கொலை வெறி! எகிறிஅடிக்கப் போய்விட்டார். ‘சாதாரணமாக கிடைக்கிற காற்று, 2 நிமிடம் கிடைக்காமல் போனால் என்ன ஒரு எகிறு எகிறுகிறாய்... துள்ளித் துடிக்கிறாய்! தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தந்ததே அசுரபலம். இதுதான் வேகம், இதுதான் வெறி!’ என்று சொல்லிவிட்டு கரையேறினார் சாக்ரடீஸ். இந்த வெறி மட்டும் வந்துவிட்டால் 24 மணிநேரம் உழைத்தாலும் வேகம் அடங்காது. 
நன்றி: சிறுதொழில் முனைவோர்

No comments:

Post a Comment

ThirukKuRaL