தென்றல் (Thendral)

Thursday, January 30, 2014

காஞ்சி ''மடத் தலைவன் ''!...

பார்ப்பனர்களின் தலைமை பீடமாகிய காஞ்சி மடம் தமிழை எப்படி ஏசுகிறது. தமிழ் நீசபாசை என்று தானே சொல்லுகிறது. இதோ "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூலில் ராமானுச தாத்தாச்சாரி என்ன சொல்லுகிறார் பாருங்கள்..

"அந்த நாளுக்கான மாலை நேர பூஜைக்கான மடம் தயாராகி கொண்டிருந்ததது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்..குளித்து முடித்துவிடிருந்தார் மகா பெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்..நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாச்சலம் என்ற பக்தர்..மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுதான் போவது என்ற உறுதியோடு இருந்தார்

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்' என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்

எங்கள் பேச்சு சத்தத்தை கேட்ட சிலர்..விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்

போனேன் கேட்டார்.சொன்னேன். 'இதோ பாரு தாத்தாச்சாரி அவரை பார்க்குறத்துக்கு நேக்கு ஒண்ணுமில்லை..பார்த்தால் எதாவது கேட்ப்பார், பதிலுக்கு நான் தமிழில் பேசவேண்டி வரும் நோக்குதான் தெரியுமே..தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமயிடுத்துல்லையோ..அதனால் நான் மௌனம் அனுச்டிக்கிறேன் என்று சொல்லி அனுப்பிச்சிடுங்கோ'

என என்னோடு சம்ஸ்கிருத சம்பாசனை நிகழ்த்தினார் "

-சங்கமித்திரன் -

No comments:

Post a Comment

ThirukKuRaL