தென்றல் (Thendral)

Sunday, January 26, 2014

மா(நரக)த் தந்தைக்குயே!



சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் கட்டபட்ட மேம்பாலங்கள் தான் போக்குவரத்து நெறிசல் அதிகமானதற்கு காரணம் என தாங்கள் கூறியிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன ...
உங்களின் இது போன்ற அறிவார்ந்த பேட்டிகளை நேரடியாக காணும் வாய்ப்பு என் போன்றோருக்கு அமையாமல் இருப்பது எங்களை பொருத்தவரை துரதிஷ்டமே,

சென்னையின் போக்குவரத்து நெறிசலை குறைக்க உங்களின் சிறப்பான அறிவாற்றலை கொண்டு மேம்பாலங்களை பயன்படுத்தாமலே போக்குவரத்து நெறிசலை குறைக்க வழி வகை காணுவீர்கள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் ....
அதே வேலையில் தேவையில்லாமல் நிற்கும் மேம்பாலங்களை வாகனங்களை நிறுத்தி வைக்கும் பார்க்கிங் ஏரியாவாக மாற்றிவிடுங்கள், அப்படி செய்தால்

வீணாய் நின்ற மேம்பாலங்களை வீணாய் போகாமலிருக்க வித்திட்ட வள்ளலே என்று உங்களின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படுவது திண்ணம்

மேம்பாலங்களை பார்க்கிங் செய்யும் இடங்களாக மாற்றினால் மக்கள் ஏற்றுகொள்வார்களா என்ற அச்சம் வேண்டாம் தலைமை செயலகத்துக்காக கட்டபட்ட கட்டிடத்தையே மருத்துவமனையாக மாற்றும் திறன் உள்ளவர்கள் அல்லவா உங்கள் தலைமை, உங்களின் அயராது இடைவிடாத செயற்கரிய திட்டங்களால் விரைந்து நடவடிக்கை எடுத்து சென்னையின் போக்குவரத்தை சீர் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது மாநகர தந்தையே ...

தங்களுக்கு கொசுறாக ஒரு தகவல் :

சென்ற வாரம் தினசரிகளில்

சென்னையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் சென்னைவாசிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிகாலை 5.30 க்கு அணைக்கப்படும் தெரு விளக்குகள் இன்று முதல் காலை 6.30 க்கு அணைக்கபடும் என செய்தி வந்திருந்து

அதவாது கார்த்திகை, மார்கழி மாதங்களை விட தை மாதத்தில் பனி அதிகமாக இருக்கும் என்ற அறிவியல்சார் உண்மையை இது நாள் வரை அறியாத நான் , தாங்கள் தலைமை ஏற்று நடத்தும் மாநகராட்சி மூலம் தான் அறிந்து கொள்ள முடிந்தது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர கடமைபட்டுள்ளேன் ,

கொசு ஒழிப்புக்கு நீங்கள் எடுத்த எடுக்கும் நடவடிக்கைகளால் பல சமயம் எனக்கு புல்லரிப்பு ஏற்பட்டு, அதனால் சொறிந்த சொறியால் சிந்தால் சோப் யூஸ் பண்ணுவதை நிறுத்திவிட்டு பத்து சரும நோய்களை தீர்க்கும் ஹமாம் சோப்க்கு மாறிவிட்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள், நான் எந்தளவுக்கு புல்லரித்து போய்யுள்ளேன் என்பதை

கடைசியா ஒரு டவுட்டு
இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து ரோடு போட்டிங்களே அது சென்னையிலா இல்ல சிங்கப்பூரிலா ??
நன்றி--மயிலை நாதன்

No comments:

Post a Comment

ThirukKuRaL