தென்றல் (Thendral)

Wednesday, January 29, 2014

தவிர்க்க முடியாதவர்! ......... எதிரொலி

எல்லா விமர்சனங்களையும் தாண்டி எப்போதும் மதிப்பு வைத்திருக்கும் தலைவர் கலைஞர் தான்.. ஒரு ஆளுமையின் பலவீனமான தருணங்களை மட்டுமே வைத்து.. அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை, உழைப்பை, சாதனைகளை கேலி செய்வது எவ்வளவு அபத்தமானது.... நீங்கள் பொருட்படுத்தாத ஒருவரை... தமிழக சமூக நீதி வரலாற்றில் அவருக்கு பங்கு இல்லை என நீங்கள் நினைக்கும் பட்சத்தில்... (அப்படி நினைத்தால் உங்களை விட நன்றி கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது) விமர்சிக்காமல் கடந்து செல்வதே சரியாக இருக்க முடியும்.. மாறாக.. அவரை தினம் தினம் விமர்சிப்பதன் மூலம் அவர் தவிர்க்க முடியாதவர் என்பதையே நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அவரைத் தவிர பேசுவதற்கு தமிழகத்தில் உங்களுக்கு விஷயங்களே இல்லை போல!!!!!!

அழகிரி நீக்கம் தமிழ்ச்சமூகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் ரொம்ப நல்லது! அண்ணா காலத்து ஈவிகேசம்பத் தொடங்கி, கருணாநிதி காலத்து எம் ஜி ராமச்சந்திரன், வைகோ, சமீபத்தில் பிரிந்துபோன பரிதி இளம்வழுதி வரை திமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றிய எதிரொலியின் அணுகுமுறை, அளவுகோள் என்றும் ஒன்றே. இவர்கள் திமுகவிலிருந்து பிரிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் சிலபல நியாயங்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தக்காரணங்கள் மற்றும் நியாயங்களின் சரி தவறுகளை அளப்பதற்கு ஒரே ஒரு அளவுகோள் தான் சரியானதாக இருக்கும் என்று எதிரொலி கருதுகிறது. சமூக நன்மை என்பதே அந்த அளவுகோள். அந்த அளவுகோளின்படி பார்த்தால் எம் ஜி ராமச்சந்திரனின் பிளவு மட்டுமே தமிழ்ச் சமூகத்துக்கு குறைந்தபட்ச நன்மைகள் செய்திருக்கிறது. தமிழக அரசியலில் 46 ஆண்டுகளாக தேசியகட்சிகள் வேரூன்றாமல் செய்தது முதல், திமுகவில் விடுபட்டுப்போன தமிழ்ச் சமூகத்தின் சிலபல குழுக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்கியது வரை அதிமுக அறிந்தோ அறியாமலோ தமிழ்ச்சமூகத்திற்கு ஓரளவு பயன்பட்டிருக்கிறது. அதற்கு ஈடாக இந்துத்துவ சக்திகளை தமிழ்நாட்டில் வேரூன்றவிட்டது என்பதும், பள்ளிக்கல்வியை வேகமாக தனியார் மயமாக்கியது என்பதும், தமிழ்நாட்டின் உள்கட்டுமானத்தை 10 ஆண்டுகள் பின்போட்டது என்பதும், அரசு நிர்வாக ஊழலை பரவலாக்கி நிறுவனமயமாக்கியது என்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா என்கிற பார்ப்பண வெறிபிடித்த ஆணவமான அரசியல் தலைமையை தமிழனின் தலையில் கட்டியது என்பதுமான எதிரொலியின் அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் தாண்டி அதிமுக மேலே சொன்ன சிலபல நன்மைகளை தமிழ்சமூகத்துக்கு செய்தே இருக்கிறது. எனவே எம் ஜி ராமச்சநிரனை தவிர்த்து, திமுகவிலிருந்து பிரிந்த மற்ற யாரும் தமிழ்ச்சமூகத்திற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அதேசமயம் இவர்களெல்லாம் போனபிறகும் திமுக இன்றுவரை தமிழ்ச்சமூகத்திற்கு பயன்பட்டே வந்திருக்கிறது. இனியும் பயன்படும் என்கிற நம்பிக்கையை அந்த கட்சியும் அதன் தற்போதைய தலைமையும் அதன் அடுத்த தலைமையும், இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட திமுக அரசியல் தலைமைகளும் ஏற்படுத்துகிறார்கள். இந்த கண்ணோட்டத்தில் திமுகவிலிருந்து வெளியேறியிருக்கும் மு க அழகிரி தமிழ்ச்சமூகத்துக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை. காரணம் ஆனானப்பட்ட திமுகவிலிருந்தபோதே அழகிரி பெரிதாக தமிழ்ச்சமூகத்துக்கு பயன்படவில்லை என்னும்போது தனியாகப்போய் அவர் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறார். எனவே அவரை அப்படியே விட்டுவிடுங்கள். தயவுசெய்து மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கட்சியை கெடுத்துவிடாதீர்கள் என்பதே திமுக ஆதரவாளர்களின் ஒரே வேண்டுகோள். அவர் தனியே போய் அவரது அப்பாவும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு தீராத தொல்லை கொடுப்பார், அவமானப்படுத்துவார் என்பவர்களுக்கு, மு க முத்து என்கிற கருணாநிதியின் மூத்த மகன் கருணாநிதிக்கு செய்யாத அவமானமா? ஜெயலலிதாவிடம் நிதி உதவி வாங்கிய மு க முத்துவின் செயலைவிடவா இன்னொரு வேதனையை அழகிரி இனி கருணாநிதிக்கு கொடுத்துவிட முடியும்? குறைந்தபட்சம் அழகிரி அப்படி நிதி உதவி வாங்கும் நிலையில் இல்லை. அழகிரியிடம் இருக்கும் நிதியில் ஆயிரம் பேருக்கு அவரால் முழுநேர சோறுபோடமுடியும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவர் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். எனவே அழகிரியை அப்படியே அவர் போக்கில் விடுங்கள். தயவுசெய்து திமுகவுக்குள் மீண்டும் சேர்த்து "அஞ்சா நெஞ்சனின்" அரசியல் வளர்ச்சியை (?) தடுத்து கெடுத்து விடாதீர்கள். அரசியலில் அழகிரியை விட வேகமாக இருக்கும் அவர் மகன் துரைதயாநிதியும், அட்டாக் பாண்டியும் "அஞ்சா நெஞ்சன்" தலைமையில் அரசியல் கட்சி ஆரம்பித்து தென் தமிழகத்தை முன்னேற்றட்டும். அதுவே அவருக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது!!

No comments:

Post a Comment

ThirukKuRaL