தென்றல் (Thendral)

Friday, January 3, 2014

சூத்திர பாஷை "தமிழ்"



சூத்திர பாஷை "தமிழ்"

‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.
அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.

"நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.."
(`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)

இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை.

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?

குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.

``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’

``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).


பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார்.
``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.

அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான்.

``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939).

``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான்.
``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113)

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL