தென்றல் (Thendral)

Monday, January 27, 2014

பாரத கலாசாரம்

திருவாளர் சோ ராமசாமி துக்ளக் வார இதழில் (9.5.2012) இரண்டு கேள்வி களுக்குப் பதில்கள் எழுதியுள்ளார்.

முதல் கேள்வி: இன்று பெரும்பாலான கல்லூரி மாணவ மாணவிகளிடம் மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருவது பற்றி?

பதில்: மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருகிறதா? அது என்ன பரவி வருகிறது? அது என்றோ பரவி விட்டதே? இப்போது நீங்கள் கேட்பதனால் இன்றைய கல்லூரி மாணவ - மாணவியரிடையே பாரத கலாசாரம் இன்னமும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறதாமே? அப்படியா? என்று கேட்க வேண்டும். அதில் அர்த்தம் இருக்கும் என்கிறார் திருவாளர் சோ.

அது என்ன பாரத கலாச்சாரம்? ஐவருக்கும் பாஞ்சாலி தேவி அழியாத பத்தினி என்பதா?

ரீனாராய் என்ற வட நாட்டு நடிகை ஒருவர் ரஷ்ய சென்றபோது, தனது கணவனை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்பொழுது அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்களின் மீதி நான்கு கணவர்கள் எங்கே என்று கேட்டனராம். நடிகை திருதிரு என்று விழித்தாராம். அவர்களின் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கிறது.

இந்தியாவின் மகாபாரதம் பற்றி அவர்கள் கேள்விபட்டுள்ளனர்.

அதில் திரவுபதைக்கு ஐந்து கணவர்கள் என்று இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஐந்து கணவர்கள் உண்டு என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விதான் அது.

மகாபாரதத்தை அவர்கள் ஒழுங்காக படித்திருந்தால் இன்னொரு கேள்வியையும் நாக்கைப் பிடுங்கக் கேட்டு இருப்பார்கள். ஐந்து கணவர் போதாது என்று ஆறாவது கணவர்மீதும் இந்தியாவில் உள்ள பெண் ஆசைப்படுவாளாமே என்று கேட்டு இருப்பார்கள். அந்தக் கள்ளநாயகன் திரவுபதிக்குக் கர்ணன் அல்லவா!
கர்ணன்மீது திரவுபதி ஏன் ஆசைப்பட்டாளாம்? திரவுபதை வாயால் கேட்டால்தானே சுவராஸ்யமாக இருக்கும்? இதே கேளுங்கள்.

என் கணவன்களில் தருமன் இருக்கிறானே சதா வேதாந்தம் பேசிக் கொண்டு இருப்பான்.

இரண்டாவது கணவன் பீமன் இருக்கிறானே உடல் பெரியவன் _ குண்டோதரன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பான்.

மூன்றாம் புருஷன் அர்ச்சுனன் இருக்கிறானே - அவனுக்கு ஏகப்பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவிகளை எண்ண முடியாதாம்!)

அடுத்து நகுலனும், சதாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி -

எனவே கர்ணன்மீது எனக்கு ஒரு கண் என்றாள் - இந்தப் பாரதக் கலாச்சாரம் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது - பேஷ்! பேஷ்!! என்கிறாரா திருவாளர் சோ?

No comments:

Post a Comment

ThirukKuRaL