தென்றல் (Thendral)

Wednesday, January 8, 2014

கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் பொண்டாட்டிக்கூட நான் படுக்கனும்

கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் பொண்டாட்டிக்கூட நான் படுக்கனும்

ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பொது விவாதங்களில்... தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை... அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார் களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள். பிராமணர் சங்கத் தலைவரே அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். இன்றைய நிலையே இப்படி இருக்க... 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த, நீதிக்கட்சியை சேர்ந்த பனகல் அரசர் ராமராய நிங்கர் ‘இந்து பரிபாலன சட்டம்’ கொண்டு வந்து திருப்பதி உட்பட எல்லாக் கோயில்களையும் அரசுடமை ஆக்கியபோது அவரை என்ன பாடுபடித்திருப்பார்கள்? கோயில்கள் அரசுடமை ஆக்குவது குறித்து பேசுபவர்கள் ஏன் பனகல் அரசரை தவிர்த்து விட்டு பேசுகிறார்கள்? நேற்றைய கேப்டன் டி.வி.யில் நடந்த சிதம்பரம் கோயில் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியை சேர்ந்த தோழர் வெங்கட்ராமன், சிதம்பரம் கோயில் பூர்வீக நிர்வாகம், பிச்சாவரம் ஜமீன் பெயர் உட்பட பலரின் பெயர்களையும் சம்பவத்தையும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு சிறப்பாக பேசிய அவர், ‘1922 ல் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டது..’ என்று போகிற போக்கில் சொன்னார். பவுத்த, சமண சமயங்களின் எதிரியும் சைவ சமயத்தின் பார்ப்பனியத்தின் அடியாளுமான ராஜராஜ சோழனைப் பற்றியெல்லாலம் குறிப்பிட்டு பேசியவர், நீதிக்கட்சியையும் பனகல் அரசர் பெயரையும் சொல்லாமல் தவிர்த்தார். ஏன்? 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அறநிலையத்துறையும் அப்போதுதான் உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நிறையப் பாடுபட்டிருக்கிறார் பனகல் அரசர். 1922 – ஆம் ஆண்டு இந்துமத பரிபாலன சட்ட மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதை சமூகத்திலும், சட்டசபையிலும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இதை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்தில், இந்த மசோதா மீது மொத்தம் 800 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் 500 க்கும் மேற்பட்ட திருத்தங்களைத் தீவிர பார்ப்பன உணர்வாளரான சத்தியமூர்த்தி அய்யர் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார். கடைசி ஆயுதமாக, இந்தச் சட்டத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரி பனகல் அரசருக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் தர முயன்று இருக்கிறார்கள். இவற்றை புறக்கணித்து, எதிர்ப்பை முறியடித்து மூன்றாண்டுகள் போராடி, இந்தச் சட்டத்தை அமல் படுத்தினார் பனகல் அரசர். நேற்றைய கேப்டன் டி.வி விவாதத்தில் பா.ஜ.க ராமநாதன் என்பவர், சத்தமாக பேசி அடுத்தவர்கள் பேச முடியாத படி செய்வதே தன் பேச்சு என்று சாதித்தார். அதில், அவருக்கு விளக்கம் கொடுத்த தோழர் வெங்கட்ராமன், தேவார பதிகங்கள் பாடிய சுந்தரரை தீட்சிதர் இல்லை. பிராமணர் இல்லை என்றார். அவர் தீட்சிதர் இல்லை என்பது உண்மைதான். ஆனால் சுந்தரர் பார்ப்பனர். சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே. அது மட்டுமல்ல பெரிய புராணத்தில் வருகிற தில்லைவாழ் அந்தணர்கள் தீட்சிதர்கள் அல்ல அவர்கள் பிரமணர்களும் அல்ல. ஆதி சைவர்கள் என்றார். தில்லை வாழ் அந்தணர்கள் தீட்சிதர்கள் அல்ல, ஆனால், பார்ப்பனர்கள்தான். அதுவும் ஜாதி வெறிகொண்ட பார்ப்பனர்கள். அவர்கள்தான் நந்தனை சிதம்பரம் கோயில் உள்ளே விட மறுத்தது. தீயில் இறக்கிக் கொன்றது. பெரியபுராணமே சமண, பவுத்த சமயங்களின் எழுச்சியிலிருந்து சைவ சமயத்தை மீட்டெடுக்க எழுதப்பட்டதுதான்.அதானல்தான் அதில் எல்லா ஜாதிக்காரர்களுக்கும் ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டது. அதன் நோக்கம் வெளியில் இருக்கிற பார்ப்பனரல்லாதவர்களை சைவ சமயத்தை நோக்கி கொண்டுவரவேண்டும் என்பதுதான். தேவாரம், திருவாசம் போன்றவை அதற்கான பிரச்சார சாதனங்கள்தான். அதன் பிரச்சார பீரங்கிகள்தான் சுந்தரர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் இந்த நால்வரும். தேவராமும், திருவாசகமும் மக்கள் மத்தியில் சைவ சமயத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும்தானே தவிர... அது கோயிலினுள் வழிபாடு நடத்துவதற்காக அல்ல. அதனால் தான் அதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கோயிலுனுள் அனுமதியும் மறுக்கப்படடது. அதே காரணத்தினால்தான் இன்றும் கோயிலுனுள் பாட அனுமதி மறுக்கப்படுகிறது. அது மட்டுமல்ல தேவாரம், திருவாசம், பெரிய புராணம் இவை பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலைதான் பார்த்தது. ‘தேவராமும், திருவாசகமும் பார்ப்பன எதிர்ப்பு தத்துவ மரபல்ல’ ‘பார்ப்பனியத்தின் தமிழ் வடிவ மரபு’ ஞானக்குழந்தை திருஞானசம்பந்தன்,‘ கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் பொண்டாட்டிக்கூட நான் படுக்கனும்..’ சிவபெருமானிடமே ‘இசைத்துவை’ என்று வேண்டினான். கடவுளையே ‘மாமா’ வேலை பார்க்கச் சொல்லியிருக்கான். அதனால்தான் பெரியார்: “சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். * தேவை ஏற்படின் இதுகுறித்து விரிவாக எழுதுகிறேன்.
நன்றி...முகநூல்
 

No comments:

Post a Comment

ThirukKuRaL