தென்றல் (Thendral)

Thursday, January 23, 2014

முதல் போராளி

இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் 25.1.1964

ஏ! தமிழே! நீ வாழ வேண்டும் என்பதற்காக நான் துடியாய் துடித்து சாகப்போகிறேன். காலை 11 மணிக்கு என்னுடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செத்து விடுவேன். இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள் கேட்கட்டும்!

இப்படிக்கு
சின்னச்சாமி.

-இப்படியொரு கடிதத்தை எழுதி வைத்து தன் மூச்சை தமிழுக்கு அர்ப்பணித்தவன் வீரத்தமிழ் மகன் சின்னச்சாமி. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் சென்னைக்கு தொடர்வண்டியில் சென்ற போது அதே வண்டியில் பயணம் செய்தவன் சின்னச்சாமி. தொடர்வண்டி மாம்பலத்தில் நின்ற போது பக்தவத்சலம் கீழே இறங்கி பாதுகாப்பு படை சூழ நடந்து செல்ல முயன்றார். அப்போது சின்னச்சாமி வேகமாக கீழே இறங்கி அவரை முந்திச் சென்று இடைமறித்தான். அய்யா! தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை தடுக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினான். எரிச்சலடைந்த பக்தவத்சலம் பாதுகாப்புப் படைக்கு கண் சிமிட்டவே சின்னச்சாமியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். எழும்பூருக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டான். பின்னர் மனம் நொந்த நிலையில் தன் சொந்த ஊருக்கு (கீழப்பழுவூர்) வந்தான். தமிழை வாழ வைக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தான். கடிதம் எழுதினான். திருச்சி தொடர்வண்டி நிலையம் முன்னர் நின்று பெட்ரோலை தன்னுடலில் ஊற்றிக் கொண்டு தமிழ்வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டான். உயிர் பிரியும் வரை முழக்கம் தொடர்ந்து ஒலித்தது. அந்த முழக்கமே தமிழக வீதியெங்கும் பட்டுத் தெறித்தது. மாணவர் கூட்டம் ஆர்த்தெழுந்தது.

No comments:

Post a Comment

ThirukKuRaL